பள்ளிக்கரணை மஸ்ஜிதைப்பற்றி !
بسم الله الرحمن الرحيم
கண்ணியம் நிறைந்த சன்மார்கத்தின் பாதுகவலர்கலான ஆலிம் பெருமக்களே ! சென்னை வேளச்சேரியை அடுத்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பள்ளிக்கரணை.
இங்கு சுமார் 500 இஸ்லாமிய குடுமங்கள் இருக்கிறது.
ஆனால் சுமார் 350 நபர்கள் தொழும் அளவு மஸ்ஜிதே நூர் ஜும்மா பள்ளிவாசல் என்ற பெயரில் ஒரு சின்ன மஸ்ஜித் தான் இருக்கிறது.
எனவே மஸ்ஜிதை விரிவுபடுத்துவதற்காக அல்லாஹ்வின் அருளாலும், நமது சன்மார்கத்தின் சேவகர்களின் உதவியாலும் மஸ்ஜிதிற்கு முன்பாக உள்ள (3/4) (கிரவ்ண்ட்) நிலத்தை இருபத்தி இரண்டு இலட்சத்திற்கு வாங்கி இருக்கிறோம் அல்ஹம்து லில்லாஹ்.
அந்த இடத்தோடு நம் மஸ்ஜிதை இணைத்து கட்டுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் தங்கள் மஸ்ஜிதின் நிர்வாக பெருமக்களிடம் நம் மஸ்ஜிதை பற்றி எடுத்து சொல்லி நம் மஸ்ஜிதின் கட்டுமான பணிக்காக ஜும்மா வசூலுக்கு அனுமதி பெற்று தருமாறு மிக பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
மௌலவி,H.முஹம்மத் அப்பாஸ்.ரியாஜி
தொடர்புக்கு :9940269647 8122116965
தலைவர்: ஹாஜி சிராஜுத்தீன் சாஹிப் செயலாளர்: ஹாஜி ஜெய்னுலாபுதீன் சாஹிப் பொருளாளர்: ஹாஜி ஷர்புத்தீன் சாஹிப்
9940437282= 9841457657 = 9841755786
எங்கள் முஹல்லாவில் (பள்ளிக்கரணை இஸ்லாமியர்கள் பொது நல சங்கம்)
என்ற பெயரில் பொது நல சேவைகள் செய்வதற்காக ஒரு சங்கத்தை ஏற்படுத்தி பெரியவர்களோடு இனைந்து ஏழை மக்களுக்கு சிறு,சிறு, உதவிகளை அல்லாஹ்வின் அருளால் செய்து வருகிறோம்.
அதில் ஏழை பிள்ளைகளுக்கு கத்னா செய்கிறோம், மௌத் வீடுகளுக்கு சென்று தேவை படும் உதவிகளை செய்கிறோம், இஸ்லாமிய இல்லங்களில் தீனுடைய சூழ்நிலைகள் ஏற்பட ஆங்காங்கே மக்தப் மதரஸாக்கள் ஆரம்பித்திருக்கிறோம் , மாதம் இரு முறை மஸ்ஜிதில் சிறந்த ஆலிம்களையும், ஆலிமாக்களையும் வைத்து பெண்கள் பயான் நடத்தி வருகிறோம் அதன் மூலம் அல்லாஹ்வின் அருளால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
20:01:2013 அன்று மாறுப்பட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடத்தினோம் அதில் எல்லா தரப்பு மக்களும் கலந்துக்கொண்டார்கள் சுமார் 400 நபர்கள் பயனடைந்தார்கள்.அதற்க்கு பிறகும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக பல்லுக்காக வேளச்சேரியில் உள்ள ப்ரியாஸ் ஸ்மைல்கேர் மருத்துவமனைக்கும், இருதயத்திர்காக கிரீம்ஸ் ரோட் அப்போலோ மருத்துவமனைக்கும் அழைத்து சென்று மேல் சிகிச்சைக்கு இலவசமாக ஏற்பாடு செய்திருந்தோம் அதன் முலமும் 25 நபர்கள் பயனடைந்தார்கள் அல்ஹம்து லில்லாஹ்....
26:01:2013 அன்று நம் மஸ்ஜிதில் 5:00 மணி முதல் 9:15 வரை (1.மிலாது விழா,2.நம் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா,3.சமய நல்லிணக்க விழா) என்று முப்பெரும் விழா நடத்தினோம் அதிலே மௌலவி, N.ஹாமீத் பக்ரி மன்பயி , மௌலவி, கோவை A .அப்துல் அஜீஸ் பாகவி
மௌலவி, S.S .ஹைதர் அலி ஹழ்ரத் ஆகிய மூன்று பெரும் ஆலிம்கள் உரையாற்றினார்கள்.
அந்த விழாவில் பள்ளிக்கரணையில் வருமானத்திற்கு வழியில்லாத ஏழு பெண்களுக்கு தையல் மிஷின் நம் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. அதேபோல விழாவில் கலந்து கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு திரு குர்ஆன் தர்ஜுமா இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்.
இன்னும் பல சேவைகள் செய்வதற்காக தாங்கள் உதவுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
Comments
Post a Comment