Posts

Showing posts from February 21, 2016

இஸ்லாமும் அறிவியலும்

Image

தற்பெருமையும் ஆணவமும்

இஸ்லாம் மனிதனுக்கு வழங்கிய அனைத்து கடமைகளும் “படைத்தவனுக்கு எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பணிந்து வாழ வேண்டும்  எனும்   உயரிய தத்துவத்தை போதிக்கும்முகமாகவே அமைந்திருக்கின்றன. மனித வாழ்வில்  ஏற்றத்தாழ்வுகள் இடம்  பெற்றிருப்பது  இன்றியமையாத  ஓர் அம்சமாகும். சிலரை விட அல்லாஹ் சிலரை சில விஷயங்களின் மூலம் மேன்மை படுத்தி இருக்கின்றான். சிலருக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். இன்னும் சிலருக்கு கல்வியறிவு,  இன்னும் சிலருக்கு  செல்வம், இன்னும் சிலருக்கு கௌரவம், அந்தஸ்து இன்னும் சிலருக்கு ஆட்சி, அதிகாரம் என்று. இந்த பிரபஞ்சத்தை படைத்து அதில் உயிரினங்களை தோற்றுவித்து அவைகள் உண்டு புசித்து களைப்பாறுவதற்கு ஏற்றாற்போல் இந்த பூமியை வடிவமைத்துக் கொடுத்த சர்வ வல்லமை பொறுந்திய இறைவன் ஒருவன் மட்டுமே பெருமைக்குரியவன்;அவனல்லாது வேறு யாருக்கும் பெருமை வரக் கூடாது என்பதற்காக பெருமை, வல்லமை இரண்டும் எனக்குரியது அதில் யாரும் போட்டி இடக் கூடாது என்று இறைவன் கூறுவதாகவும் மீறினால் அதற்கு தண்டனை நரகத்தைத் தவிற வேறில்லை என்று இறைவனின் இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ