Posts

Showing posts from December 8, 2013

நாயகம் சொல்லி தந்த முறையில் துஆ செய்வோம்!

                                    بسم الله الرحمن الرحيم                        ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً  ۚ  إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.(7:55 )  துஆ கபூல் ஆகுவதற்கு பெருமானார் சில விதிமுறைகளை கற்று தந்தார்கள் அவைகளை நாம் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் நாமும் இறைவனால் ஒப்பு   கொள்ளப்பட்ட துஆ செய்பவர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவோம். முதலில் நாம் மிக கவனிக்க வேண்டியது துஆ கபூலாகும் என்று உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்ய வேண்டும்.  அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது ஒருவர் யாஅல்லாஹ் என்னை மன்னித்து விடு ஆனால் நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும் என்று துஆ செய்து கொண்டே   தவாஃப் செய்து கொண்டிருந்தார் இதை செவியுற்ற  அல்லாமா முஹம்மத்  இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் இப்படி துஆ செய்வது கூடாது அல்லாஹ் நம் துஆவை  ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்யவேண்டும் என்று சொல்லி