Posts

Showing posts from 2012

குற்றம் இல்லா தேசம்

Image
                                        இன்று தமிழகத்தில் மிக அதிகமாக நடந்து கொண்டிருப்பது கொலை,கொள்ளை குறிப்பாக நாடு முழுக்க நடக்கும் கொடூரம் பெண்களை கற்பழிப்பது. மூன்று வயது பெண்  குழந்தையையும் கற்பழிக்கிறார்கள் முதுமை அடைந்த பெண்களையும்  கற்பழிக்கிறார்கள். தினமும்செய்தி தாள்களிலும், மீடியாக்களிலும் நாம் மனம் நொந்து படித்து கொண்டும், பார்த்து கொண்டும் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இந்த கொடுமை நடந்து கொண்டு இருப்பதையும் மீடியாக்கள் அதை மோசமான வார்த்தைகளால் சித்தரிப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த அனைத்து கற்பழிப்புகளும் மக்களுக்கு தெரிந்திருந்தும் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பை மட்டும் உலக அரங்கில் பேசவைத்து டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த காரணம் என்ன? மாணவர்களின் ஆர்பாட்டங்கள் , முற்றுகைகள் , அரசியல்வாதிகளின் போராட்டங்கள், அண்ணாஹசாரேவின் போராட்டம் ஒரு  பக்கம் வழக்கம் போல ராம்தேவின் ஆக்டிங்  ஒரு  பக்கம் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு போலீஸ்காரரின் உயிர் பிரிய காரணமாக இருந்திருக்கிறது. ஒரு கால் இதுவும் கூட அரசியல் வாதிகளின் நாடகமோ என்று நினைக்க தோன்றுகிறது. மும்பை தாஜ் ஹோட்டல் தாக்க

மூட நம்பிக்கைகளும் முழுமையான இஸ்லாமும்

Image
                                                                               الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا சிலர்களின்  முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (18:104) நமது மார்க்கமான தீனுல் இஸ்லாம் மிக உயர்ந்த, சங்கையான, சிறந்த, கண்ணியமான, மார்க்கம். இன்னும் புகழுக்கு என்னென்ன  வார்த்தைகள் இருக்கிறதோ அவை  எல்லா  வார்த்தைகளையும் சொல்லி புகழ்ந்தாலும் புகழ்ந்து விட முடியாத அளவுக்கு மிக உயர்வான மார்க்கம். இதை முஸ்லிம்களான நாம் சொல்லி புகழ்ந்து கொண்டு பெருமை அடிக்கவில்லை உலகின் பிரபல்யமான அறிவாளிகளும், உலக புகழ் பெற்ற விஞ்ஞானிகலும் சொல்லும் வார்த்தை இது. எனவே மிக தூய மார்க்கத்திற்கு சொந்தகாரர்களான நம் பார்வையில் இஸ்லாம் எப்படி இருக்கிறது! பெருமானாருடைய ஹஜ்ஜதுல் விதாவின் உரையில் "அறியாமை காலத்தில் செய்த செயல்களை என் காலுக்கு கீழ்  போட்டு புதைத்து விட்டேன் இனி கியாமத் வரை தூய இஸ்லாத்தை அதன் தூய வழியில் பின்பற்ற வேண்டும்"என்ற நாய

குர்ஆண் பற்றி ஒரு சிறிய அறிமுகம்

Image
                                                                                                                                                                                                                   குர்ஆண் பற்றி ஒரு சிறிய அறிமுகம்      வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது “குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது. திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும்  பெயர்கள்  பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம். அருளப்பெற்ற நாள் நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வ

21-12 2012 உலகம் அழியுமா ? (ஒரு பார்வை)

إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ  ۖ  وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا  ۖ  وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ  ۚ  إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ 31:34 .  நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். இன்று  எல்லா இனைய தளத்திலும் மிக பரவலாக பேசப்படுவது  21:12:2012 ல் உலகம் அழிய போகிறது என்ற செய்தி! இந்த விஷயத்தை பள்ளிக்ககூடங்களில் பயிலும் சிறு,சிறு  பிஞ்ஜி உள்ளங்களிலும் பதித்திருக்கிறார்கள்.பிள்ளைகளும் கூட நம்மிடத்தில் 21:12:2012 ல் உலகம் அழிந்து விடுமா? என்று பயத்தோடு கேட்கிறார்கள். இது முழுக்க,முழுக்க ஒரு பொய்யான தகவல்... இதை பரப்புபவர்களின் நோக்கத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்... கிறிஸ்துவர்களின் நோக்கம் : இதை காரணமாக ச

மாயன்கள் வரலாறு பற்றி சில தகவல்கள்

     மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம்.  இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் . நாகரிகத்தின் மைல்கற்கள்     கி.மு 2600 : மாயன் நாகரிகத்தின் ஆரம்பம் மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர் .     கி.மு 700 : Hieroglyph எனும் சித்திர எழுத்து முறையினை மாயன்கள் ஆரம்பித்தனர் .இச் சித்திர எழுத்து முறையானது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறையாக இருந்தது .     கி.மு 400 : இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.     கி.மு 300 : மன்னர்கள் ,பிரபுக்கள் ,பூசாரிகள் என ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புக்கள்,அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன .     கி.மு 100 : Teotihuacan என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது .இந்த நகரம் இன்றும் இருக்கிறது .கலை,மதம் வர்த்தகம் என்பன இங்கு காணப்பட்டன.     கி.மு 50 : Cerrors என்ற நகரம் உருவாகியது. இத