21-12 2012 உலகம் அழியுமா ? (ஒரு பார்வை)
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
31:34. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
இன்று எல்லா இனைய தளத்திலும் மிக பரவலாக பேசப்படுவது 21:12:2012 ல் உலகம் அழிய போகிறது என்ற செய்தி!
இந்த விஷயத்தை பள்ளிக்ககூடங்களில் பயிலும் சிறு,சிறு பிஞ்ஜி உள்ளங்களிலும் பதித்திருக்கிறார்கள்.பிள்ளைகளும் கூட நம்மிடத்தில் 21:12:2012 ல் உலகம் அழிந்து விடுமா? என்று பயத்தோடு கேட்கிறார்கள்.இது முழுக்க,முழுக்க ஒரு பொய்யான தகவல்...
இதை பரப்புபவர்களின் நோக்கத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்...
கிறிஸ்துவர்களின் நோக்கம்: இதை காரணமாக சொல்லி எல்லோரையும் தன் மதத்தை தழுவ வைக்கலாம் என்ற பேராசை..
யூதர்களின் நோக்கம் : இதை பரப்பி உலகில் வாழும் எல்லோரையும் முஸ்லீம்கள் உட்பட பெரும் பாவங்களில் முல்கடிக்கலாம் என்ற கேவலமான எண்ணம்.உலகில் உள்ள எல்லோரையும் மது அருந்த வைப்பது,விபச்சரங்களில் ஈடுபடுவது போன்ற பெரும் பாவங்களை செய்ய வைத்து எல்லோரையும் நரகில் சேர்ப்பது தன் அவர்களில் நோக்கம்.நாம் போக முடியாத சொர்க்கத்திற்கு யாரும் போக கூடாது என்பது தான் அவர்களின் கொள்கை...
அதே போல சில பஞ்சாங்க பண்டிதர்கள் மாயன் காலண்டரின் முடிவு
21-12-12 ல் முடிந்து விடுகிறது.எனவே அதோடு உலகம் அழிந்து விடும் என்று உளறுகிறார்கள்..அது என்ன மாயன் காலண்டர் என்பதை தெரிந்துகொள்ள,முதலில் மாயன்களின் வரலாறை படித்து தெரிந்து கொள்வோம்..
சரி இதற்கு முன்பு இதை போன்ற வதந்தியை 1843 ரிலும்,2000 திலும் பரப்பினார்களே என்ன ஆனது!உலகம் அழிந்து விட்டதா? பயத்தில் மக்கள் தற்கொலை செய்து கொண்டும்,பாவங்கலின் உச்சகட்டதை அடைந்து வீணாக போனதுதான் மிச்சம்...
சரி உலகம் அழியுமா?அழியாதா?
உலகிலுள்ள எல்லா மதங்களும்,சமயங்களும் அறிவியளுக்கு
முரனானகருத்துகளை சொல்லும் பொது இஸ்லாம் மட்டும் தான் அறிவியலுக்கு உண்மையை சொல்லி கொடுத்திருக்கிறது உலக விஞ்ஞாநிகழ் எல்லோரும் சேர்ந்து பூமி தட்டையாக இருக்கிறது என்று சொன்னபோது அவர்களுக்கு உலகம் உருண்டை என்பதை கற்று கொடுத்ததே இஸ்லாம்தான்.
இதே போன்று பல விஷயங்களை சொல்லலாம்.இதுவரை இஸ்லாமுடைய கருத்துக்கள் அறிவியலுக்கு முரணானதாக இருந்ததே இல்லை.இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் தான் உலகை பற்றிய பல உண்மைகளை ஆய்வாளர்களுக்கு கற்று கொடுத்தது.
எனவே உலக அழிவை பற்றி இஸ்லாமிய கருத்தென்ன?
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைபிற்கும் நிச்சயம் அழிவுண்டு.அது போல உலகமும் ஒரு நாள் கண்டிப்பாக அழியும் அதில் மாற்று கருத்தே கிடையாது.ஆனால் அந்த அழிவு எப்போது என்பதை தான் இனி பார்க்க போகிறோம்...
குர்ஆனில் ஒரு வசனத்திலே;
31:34 إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
31:34. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்....
இந்த இறை வசனத்தின் கருத்து படி உலக அழிவு நாள் இறைவனின் கரத்தில் உள்ளது.இருந்தாலும் பெருமானார் (ஸல்)அவர்கள் உலக அழிவு நாள் எப்போது வரும் என்று சில சிறிய அடையாளங்களையும், சில பெரிய அடையாளங்களையும் சொல்லி தந்திருக்கிறார்கள்.அவற்றில் சிறிய அடையாளங்களை முதலில் பாப்போம்...
1.அறிவு ஞானம் குறைந்துவிடும்... அறியாமை அதிகமாகிவிடும்... 2.பெரும்,பெரும் அடுக்கு மாடிகள் கட்டுவார்கள்...
3.அறிவற்றவர்களிடம் ஆட்சி,அதிகாரம் செல்லும்...
4.விபச்சாரம் பெருகிவிடும் 5. மதுபானங்களுக்கு பல பெயர்களை வைத்து மக்கள் அருந்துவார்கள்...
6.பெண்கள் அதிகமாகி விடுவார்கள்...
7.ஆண்கள் குறைந்து விடுவார்கள்...
8.பூகம்பம் அதிகமாகும்...
9.கொலைகள் அதிகமாக நடக்கும்...
10.அதேபோல சிலர்கள் வெளிரங்கத்தில் நண்பர்களை போன்று இருப்பார்கள் உள்ரங்கத்தில் பகைமையாக வாழ்வார்கள் என்றும்.
11.மக்கள் علم இல்லாமல் அதிகமாக عمل செய்வார்கள் என்றும்
12.அரேபிய பாலைவனம் நந்தவனமாக மாறும் என்றும் சொன்னார்கள்...
இது போன்ற விஷயங்களை பட்டியலிட்ட பெருமானார் இன்னும் பல விஷயங்களை சொன்னார்கள்!
- உலகம் அழியும் வேலையில் முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற மாட்டார்கள். குர்ஆணை மக்கள் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். பெரும், பெரும் பள்ளி வாசல்கள் இருக்கும் ஆனால் தொழுகைக்கு ஆளிருக்காது...
- யூத, கிறிஸ்துவ ஆலயங்களை அலங்காரம் செய்வது போல் முஸ்லிம்கள் பள்ளி வாசல்களை அலங்காரம் செய்வார்கள்...
- சாப்பிடுபவர் தன் தட்டின் பக்கம் எல்லோரையும் சாப்பிட அழைப்பது போல் முஸ்லிம்களை கொல்ல மக்கள் வொன்றுசேர்வார்கள் .என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன போது அப்போது முஸ்லிம்கள் மிக குறைவாக இருப்பார்களா?என்று சஹாபாக்கள் கேட்க! மிக அதிகமாக இருப்பார்கள் ஆனால் கடல் நுரையை போன்றுதான் இருப்பார்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் உலக மோகமும்,மரண பயமும் ஏற்பட்டுவிடும் என்று நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்..
- அதே போல காலம் மிக வேகமாக செல்லும். ஒரு வருடம் ஒரு மாதத்தை போன்றும்,ஒரு மாதம் ஒரு வாரத்தை போன்றும்,ஒரு வாரம் ஒரு நாளை போன்றும் ஒரு நாள் தீக்குச்சியை பற்ற வைத்து அணைப்பது போல வேகமாக கழியும். இது இப்போது நிதர்சனமாக நாம் பாக்கிறோம். நம்முடைய முன்னோர்களின் வாழ்கையில் இருந்த பரகத் இப்போது நம் வாழ்கையில் இல்லை.
(இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் வாழ்ந்தது வெறும் 55வருடம் தான் அதிலே 1000 கிதாபுகளை எழுதி முடித்து விட்டார்கள்.அதிலே 100 கிதாபுகளை கூட முழுமையாக நம் வாழ்கையில் படித்து முடிக்கமுடியாது.
இமாம் சுயூத்தி (ரஹ்)அவர்களின் 22 வயதில் تفسيرالجلالين நை எழுதினார்கள் நமக்கு 2வருடம் ஓதி கொடுத்தாலும் முடிக்க முடியாத கிதாபை வெறும் 40நாளில் எழுதி முடித்து விட்டார்கள்)
பெருமானார் (ஸல்)அவர்கள் சொன்ன சிறிய அடையாளங்கள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டே வருகிறது
.இன்னும் பெருமானார் சொன்ன பெரிய அடையாளங்களும் இருக்கிறது!
நிறைய போர்கள் நடைபெறும். உலக முஸ்லிம்களுக்கும் ஒரு கலீபா இருப்பார் அவர் ஷஹிதாக்க படுவார் பிறகு உலக முஸ்லிம்கள் கலிபாவை தேடி கொண்டு இருப்பார்கள்.அப்போது இமாம் மஹ்தி இன் வருகை!
இமாம் மஹ்தி !
இமாம் மஹ்தி அவர்கள் நபியின் குடும்பமான ஹழ்ரத் ஹசன்(ரலி) அவர்களின் வம்சத்தில் பிறப்பார்கள். இவர்களின் பெயர் நமது நபியின் பெயராகவும், இவர்களின் தந்தையின் பெயர் நமது நபியின் தந்தையின் பெயராகவும் இருக்கும்.(முஹம்மது பின் அப்துல்லாஹ்) அவர்களின் நெற்றி அகன்று இருக்கும்,முக்கு நீலமாக இருக்கும்..இவர்களின் சொந்த ஊரு மதீனாவாக இருக்கும்.
இமாம் மஹ்தி வருவதற்கு முன் ஒரு ரமலான் மதத்தின் முதல் பிறையில் சந்திர கிரகணமும்,பிறை 15இல் சூரிய கிரகணமும் ஏற்ப்படும்.உலகம் படைக்க பட்ட நாள் முதல் ரமலானில் இது போன்று ஏற்பட்டதே இல்லை..அப்படி ஏற்பட்டால் இமாம் மஹ்தியின் வருகை.....
அந்த ரமலானின் பிறை 15ஆம் நாளிலே ஜும்மாவின் இறவிலே உலகம் முழுக்க ஒரு பெரும் சப்தம் கேட்கும் அந்த சப்தத்தால் யாராலும் தூங்க முடியாது.அந்த ஜும்மாவின் பஜரை நீங்கள் தொழுதால் வீட்டிற்க்கு சென்று கதவுகளையும் ,ஜன்னல்களையும் மூடி கொள்ளுங்கள்..உங்களின் காதுகளை அடைத்து கொண்டு போர்வையை பொத்தி படுத்து கொள்ளுங்கள்.இதற்கு பின்னும் அந்த சப்தத்தை நீங்கள் கேட்டால் சஜ்தாவில் விழுந்து ( சுப்ஹன மலிகில் குத்தூஸ்)என்று ஓதுங்கள்.யார் இப்படி செய்கிறாரோ அவர் தப்பித்து கொள்வார்.என்று பெருமானார் சொன்னார்கள்..
இமாம் மஹ்தி வரும் வருடம் அதிகம் நிலா நடுக்கங்கள் ஏற்படும்,அதிகம் குளிர் காலமாக இருக்கும்..இவை அணைத்து நபிகளார் சொன்ன அடையாளங்கள்.
பிறகு இமாம் மஹ்தி அவர்கள் நம்மை கலிபாவாக யாரும் ஆக்கிவிட கூடாது என்று மதீனாவிலிருந்து மக்காஹ் விற்கு சென்று பைத்துல்லாஹ்வை தவாப் செய்து கொண்டு இருப்பார்கள், அவர்கள் ஹஜருல் அஸ்வதை தாண்டி போகும் போது வானிலிருந்து இவர் தான் மஹ்தி பூமியிலுள்ள எல்லோரும் இவரிடத்தில் பைஅத் செய்யுங்கள் என்று சப்தம் வரும் உடனே எல்லா முஸ்லிம்களும் ஹஜருல் அஸ்வதுகும்,மகாமே இப்ராஹிமுக்கும் மத்தியில் வைத்து இமாம் மஹ்தியிடம் பைஅத் செய்வார்கள்..அப்போது ஷாமிலிருந்து ஒரு குட்டம் அவர்களை எதிர்த்து வரும் போது பைலா என்ற இடத்தில பூமி அவர்களை விழுங்கி விடும்.
இதை பார்த்து ஷாம் தேசத்தின் பெரும் வலிமார்களும், இராக்கின் பெரும் அபுதால்களும் இமாம் மஹ்தி இடத்தில் பைஅத் செய்வார்கள்.பிறகு உலக முஸ்லிம்களுக்கு இமாம் மஹ்தி அவர்கள் கலீபாவாக இருப்பார்கள்.முழு உலகத்தையும் நீதத்தோடு ஏழு வருடம் ஆட்சி புறிவர்கள்...
அப்போது இமாம் மஹ்தி அவர்கள் ஐரோப்பியர்களை எதிர்த்து யுத்தம் செய்வார்கள். எல்லா யுத்தங்களிலும் வெற்றி பெறுவார்கள்.அவர்கள் முதல் முதலில் கைபற்றும் இடம் குஸ்தும் தீனியா தான்..அவர்கள் யுத்தம் செய்யும் போது அவர்களின் ஆயுதம் (சுபுஹனல்லாஹ் வல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்) என்று உறக்க சொல்லுவார்கள்.அப்போது பெரும் பெரும் கோட்டைகள் நோரிங்கிவிடும்.அந்த யுத்தத்தின் போது உலகில் உள்ள எல்லா பொருள்களும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யும்,உதரணமாக மரங்கள் பேசும் முஸ்லிமே உன் எதிரி எனக்கு பின்னால் மறைந்து இருக்கிறான் வந்து கொலை செய்து கொல் என்று மரம் சொல்லும்..கர்கின் என்ற மரம் மட்டும் யூதர்களை காட்டி கொடுக்காது..(எனவே தான் எதற்கும் பலன் இல்லாத மரத்தை பல கோடிகள் செலவு செய்து யூதர்கள் வளர்கிறார்கள்) அதற்கு பிறகு இமாம் மஹ்தியின் ஆட்சியில் யூதர்கள் கொள்ளபடுவார்கள்.அப்போது தான் முஸ்லிம்களுக்கு நிறைய கனீமத் பொருள்கள் கிடைக்கும்.....பிறகு தஜ்ஜாலின் வருகையை பற்றி அறிவிப்பு செய்யப்படும்.
தஜ்ஜால் !
தஜ்ஜாலின் வலது கண் குருடாக இருக்கும்,அவன் நெற்றியில் காபிர் என்று எழுதப்பட்டு இருக்கும்,அவன் வலது பக்கம் சொர்க்கம் இருக்கும்,இடது பக்கம் நரகம் இருக்கும்.அவனை ஏற்று கொண்டவர்களை அவன் சொர்க்கத்தில் போடுவன்,அது அவர்களுக்கு நரகமாக மாறும்..அவனை மறுப்பவர்களை அவன் நரகத்தில் போடுவன்,அது சொர்கமாக மாறும்..
அவனால் மக்கஹ்விலும்,மதீனாவிலும் நுழைய முடியாத அளவு 7இடங்களில் மலக்குகளை வைத்து தடுக்க படுவான்..பலஹினமான முஸ்லிம்கள் அவனை ஏற்று கொள்வார்கள்.உறுதியான முஸ்லிம்களுக்கு அவன் பெரும் பெரும் அநீதம் புரிவான்.இப்படி தஜ்ஜாலின் அநீதம் மிகைக்கும் போது தான் ஈஸா (அலை) வருவார்கள்.....
ஈஸா(அலைஹி வஸல்லம் )
சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸில் உள்ள மஸ்ஜித் உமையா என்ற பள்ளிவாசலின் கிழக்கு திசையில் உள்ள வலது மினராவின் மீது இரண்டு மலக்குமார்களின் தோலில் கையை போட்டு கொண்டு பஜர் நேரத்தில் இறங்குவார்கள்..
அவர்களை பார்த்த உடன் இமாம் மஹ்தி அவர்கள் ஈஸா(அலை) அவர்களை பஜர் தொழவைக்கும் படி கேட்டு கொள்வார்கள்..ஈஸா(அலை) அவர்கள் இமாம் மஹ்தியையே தொழவைக்க சொல்ல அவர்களே தொழ வைப்பார்கள்..
ஈஸா(அலை) பூமிக்கு வந்த உடன் தஜ்ஜால் உப்பை போன்று கரைவான்,அவர்களை கொண்டு கிறிஸ்துவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்வார்கள்..சிலுவைகள் உடைக்க படும்,பன்றிகள் கொள்ளப்படும்.முஸ்லிம் அல்லாத மக்களிடம் ஜிஸ்யா வசூலிக்க படும்..பிறகு இஸ்ரேலில் உள்ள லுத் என்ற இடத்தில் வைத்து தஜ்ஜாலை கொன்று தன் ஈட்டியில் அவனின் ரத்தத்தை கட்டுவார்கள்..இப்போது முழு உலகிலும் பரகத் நிலவும்..
அடுத்து அல்லாஹ் ஈஸா(அலை) அவர்களுக்கு
யஃஜுஜ், மஃஜுஜ் வருவதை அறிவித்து நீங்களும் முஸ்லிம்களும் தூர்சினா மழைக்கு சென்று விடும் படி கட்டளை விடுவான்..முஸ்லிம்கள் அனைவரும் சென்று விடுவார்கள்....
யஃஜுஜ், மஃஜுஜ் !
பல இமாம்கள் கருத்துப்படி இவர்கள் குட்டையாக இருப்பார்கள்,ஆனால் எண்ணிகையில் மிக அதிகமாக இருப்பார்கள்.. சிரியாவில் முகைரா தப்ரியா என்று உலகிலேயே பெரும் குளம் உள்ளது இவர்களின் முதல் கூட்டம் அந்த குளத்தை கடந்து வரும்,பின்னால் வருபவர்கள் இந்த குளத்தில் தண்ணீர் இருந்ததா? என்று கேட்கும் அளவுக்கு முந்தியவர்கள் தண்ணீரை குடித்து காலி செய்து விடுவார்கள்..
இவர்கள் பூமியில் பெரும் நாசத்தை ஏர் படுத்துவார்கள் அப்போது முஸ்லிம்களின் உணவு தஸ்பிஹ் தான்..இறுதியாக அந்த கூட்டம் அம்புகளை எடுத்து நாங்கள் பூமியில் உள்ளவர்களை கொன்று விட்டோம்,இப்பொழுது வானில் உள்ளவர்களை கொள்ள போகிறோம் என்று வானை நோக்கி அம்பு விடுவார்கள்.அந்த அம்பு திரும்ப கிழே வந்து அவர்களை கொன்று விடும்..
பிறகு அல்லாஹ் ஒரு மிருகத்தை அனுப்புவான் அது அவர்களின் உடலை அல்லாஹ் சொல்கிற இடத்தில் போட்டு விடும்.அவர்கள் பயன் படுத்திய பொருள்களை முஸ்லிம்கள் 7வருடமாக எரித்தாலும்,எரித்து முடிக்க முடியாது..உலகமே நாற்றம் அடிக்கும்,பிறகு அல்லாஹ் ஒரு மழையை இறக்குவான் அந்த மழை உலகம் முழுக்க பெய்யும் அதன் முலம் பூமி சுத்தமாகிவிடும் ..
பிறகு மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்,பெரும் பரக்கத் ஏற்படும்....ஒரே ஒரு மாதுளம் பலத்தை ஒரு குடும்பம் சாப்பிடும் அளவுக்கு பரகத் ஏற்பட்டு விடும்..
பிறகு வானிலிருந்து ஒரு புகை வரும் அதை முஸ்லிம்கள் நுகர்ந்தால் வெறும் தும்மல் மட்டும் ஏற்படும்,காபிர்கள் நுகர்ந்தால் பின் துவாரம் வழியாக வெளியேறும்.
பிறகு தாபத்துள் அர்ல் என்ற மிருகம் சபா மலையை பிளந்து கொண்டு வரும் நான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று என்று பேசும்,அதன் முலம் மக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும்..
பிறகு எமன் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து தென்றல் காற்று வீசும் அதை நுகர்ந்த எல்லா முஸ்லிம்களும் இறந்து விடுவார்கள்....அதற்கு முன்பே ஈஸா(அலை) இறந்து நபியின் ரவ்லாவில் அடக்க படுவார்கள்..
பிறகு உலகம் முழுக்க காபிர்கள் மட்டும் வாழ்வார்கள் அப்போது தான் கஃபதுல்லாஹ்வை உடைத்து கடலில் கொட்டுவார்கள்...மிருகத்தை போல வாழ்வார்கள்..வீதியிலே விபச்சாரம் செய்வார்கள்..
பிறகு சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும்,அன்று தான் சூர் ஊதப்படும்,அன்று தான் உலகமும் அழியும்.....
அதன் பிறகு அர்ஷை சுமக்கும் மலக்கு மார்களை அல்லாஹ் மரணிக்க வைப்பான்.அதன் பிறகு ஹழ்ரத் ஜிப்ரயீலை மரணிக்க செய்வான்..பின் அல்லாஹ் வின் அர்ஷ் ஜிப்ரயீளுக்கும் மரணம் இருகிறதா என்று கேட்கும்..எல்லோருக்கும் மரணம் உண்டு என்று அல்லாஹ் சொல்லுவான்...கடைசியாக ஹழ்ரத் இஸ்ராபில் மரணிப்பார்கள்.......
இப்படி தான் உலகம் அழியும்,இவை அனைத்துமே பெருமானாரின் வாக்குகள்.எல்லாம் ஒன்று ஒன்றாக நடந்து கடைசியில் சூர் ஊதப்பட்டு உலகம் அழியும்..எனவே மாயன்கள் சொன்னார்கள்,மந்திர வாதிகள் சொன்னார்கள்,பஞ்சாங்க காரர்கள் சொன்னார்கள் என்றெல்லாம் நாம் ஏமாற கூடாது.நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்..
கிருக்கர்களை போல பூமி அழிந்து விட்டால் சந்திரனில் பொய் வாழ்ந்து கொள்ளலாம்,கடலுக்குள் சென்று கப்பலின் முலம் தப்பித்து கொள்ளலாம் என்றெல்லாம் கனவு காண கூடாது...நூஹ் நபி காலத்தில் அவர்களின் மகனையும் வெள்ள பிரளயம் அளித்தது போல உலகத்தில் உள்ள எல்லோரும் அழிவார்கள்...
உலகம் அழிவு என்பது நம்முடைய ரப்பை சந்திக்கும் நேரம் அது. எனவே அதற்காக பரிபுரனமாக தயார் ஆகுவது அவசியம்..(ஒரு சஹாபி பெருமானார் இடத்தில் கியாமத் எப்போது வரும் என்று கேட்க அதற்காக என்ன தயாரித்து வைதிருகிறிர்கள் என்று நாயகம் கேட்ட ஹதிஸ் ஞாபகம் வருகிறது) எனவே உலகம் அழியும் முன் நம்மை நாம் தயார் செய்ய வேண்டும்...
உலகம் கண்டிப்பாக அழியும் ஆனால் அது எப்போது? ஏக இறைவன் கையில்...

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ
22:1. மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُم بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்...பிறகு உலகில் யாருமே இல்லாமல் எல்லாம் அழிந்து விடும்...அதன் பிறகு அர்ஷை சுமக்கும் மலக்கு மார்களை அல்லாஹ் மரணிக்க வைப்பான்.அதன் பிறகு ஹழ்ரத் ஜிப்ரயீலை மரணிக்க செய்வான்..பின் அல்லாஹ் வின் அர்ஷ் ஜிப்ரயீளுக்கும் மரணம் இருகிறதா என்று கேட்கும்..எல்லோருக்கும் மரணம் உண்டு என்று அல்லாஹ் சொல்லுவான்...கடைசியாக ஹழ்ரத் இஸ்ராபில் மரணிப்பார்கள்.......
இப்படி தான் உலகம் அழியும்,இவை அனைத்துமே பெருமானாரின் வாக்குகள்.எல்லாம் ஒன்று ஒன்றாக நடந்து கடைசியில் சூர் ஊதப்பட்டு உலகம் அழியும்..எனவே மாயன்கள் சொன்னார்கள்,மந்திர வாதிகள் சொன்னார்கள்,பஞ்சாங்க காரர்கள் சொன்னார்கள் என்றெல்லாம் நாம் ஏமாற கூடாது.நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்..
கிருக்கர்களை போல பூமி அழிந்து விட்டால் சந்திரனில் பொய் வாழ்ந்து கொள்ளலாம்,கடலுக்குள் சென்று கப்பலின் முலம் தப்பித்து கொள்ளலாம் என்றெல்லாம் கனவு காண கூடாது...நூஹ் நபி காலத்தில் அவர்களின் மகனையும் வெள்ள பிரளயம் அளித்தது போல உலகத்தில் உள்ள எல்லோரும் அழிவார்கள்...
உலகம் அழிவு என்பது நம்முடைய ரப்பை சந்திக்கும் நேரம் அது. எனவே அதற்காக பரிபுரனமாக தயார் ஆகுவது அவசியம்..(ஒரு சஹாபி பெருமானார் இடத்தில் கியாமத் எப்போது வரும் என்று கேட்க அதற்காக என்ன தயாரித்து வைதிருகிறிர்கள் என்று நாயகம் கேட்ட ஹதிஸ் ஞாபகம் வருகிறது) எனவே உலகம் அழியும் முன் நம்மை நாம் தயார் செய்ய வேண்டும்...
உலகம் கண்டிப்பாக அழியும் ஆனால் அது எப்போது? ஏக இறைவன் கையில்...
மாஷா அல்லாஹ் எவ்வளவு அருமையான வலைப்பதிவு..இவ்வளவு நாள் கண்ணில் படாமலேயே இருந்துவிட்டதே..
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ். நல்ல நல்ல கட்டுரைகள். வாழ்த்துக்கள்.
thangalin varugai ikkum vaalthugalukkum miga nandri
ReplyDelete