Posts

Showing posts from April 7, 2013

குர்ஆனும் குழந்தைகளும்

                                     بسم الله الرحمن الرحيم   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும் அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் காவல் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.(66:6) இது நம் பிள்ளைகளின் விடுமுறை காலம்.    தமிழகத்தில் ஏப்ரல் 20 தேதி யிக்குள் அதிகப்படியான பள்ளிக்கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு விடும் இந்த காலங்களை பயன் படுத்திக்கொண்டு நம் பிள்ளைகளை நம் மார்க்கத்தோடும், குர்ஆனோடும் இணைத்து அவர்களை வருங்கால தீனின் பாதுகாவலர்களாக உருவாக்கவேண்டும்.  அல்லாஹ் உலகில் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் மிக சிறந்தது குழந்தை செல்வம். நமக்கு வழங்கிய உடல் ஆற்றல்,கல்வி,பணம்,பதவி,பட்டம்