Posts

Showing posts from March 20, 2016

அலட்சியமாக கருதப்படும் பாவங்கள் தெடர் - 2 விபச்சாரம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு) அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே! நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை குருப்பில் மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள்  வெளியிட்ட  இந்த வார கட்டுரை. அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல்,பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும்.இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது. விபச்சாரம் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை மட்டுமின்றி அதற்குத் தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது., ஓர் ஆண் அந்நிய பெண் ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள்-பெண்கள் சுதந்திர மாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, (த