Posts

Showing posts from May 19, 2013

வறுமையை ஒழிப்போம்!

Image
                                                         بسم الله الرحمن الرحيم                                                                                                        إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ  ۚ  وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ   நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் நன்மை, தீமைகளில் அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம் எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். (36:12) பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த சண் மார்கத்தை அந்த அரேபிய தீபகற்பத்தில் அறிமுக படுத்துவதற்கு முன்புவரை அந்த மக்கள் பெரும் பெரும் பாவங்களை மிக சர்வசாதரணமாக செய்து கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. ஆனால் இன்று அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற மாபெரும் நல்லடியார்கள். அவர்களை போன்று இனி உலகம் அழியும் வரை யாரும் ஆக முடியாது என்ற அளவில் அல்லாஹ்விடத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.  எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது ?  நமது நாயகம் அவர்கள் மீது உழைத

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

உடல் நிலை தொடர்பாகவும் குடும்பச் சூழ்நிலை வேலை கடன் போன்றவை தொடர்பாகப் பிரச்சினை உள்ளவர்களும் இளமையாக வாழ உறுதி கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதுதான் ஒருவர் இளமையாக செயல்துடிப்புடன் வாழ்கிறார் என்பதற்கு அர்த்தம். அடிக்கடி தலைவலி வயிற்றுக் கோளாறுகள் இரத்தக் கொதிப்பு பசியின்மை முதலியவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா? அப்படியானால் உணவில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் உங்கள் மனமும் உடலும் புதுப்பிக்கப்பட்டு பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் வழி கண்டுபிடித்து விடலாம். முதலில் மனக் கவலையை அகற்ற காலையில் ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது பால் சேர்த்த தேநீர் அருந்துங்கள். மதியமும் இரவு சாப்பாட்டிற்கு முன்பும் பழச்சாறோ அல்லது ஒரு கப் தயிரோ சாப்பிடுங்கள்.  மற்ற உணவு வகைகளைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அன்னாசிப்பழம்,பப்பாளி,காராமணி போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள். இனிப்புப் பழங்களைக் குறையுங்கள். பேரீச்சம்பழம் தேன் உலர் திராட்சை என்ற கிசுமுசுப் பழம் போன்றவற்றை இனிப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவில் ஜீனி அதிகம் சேரும்போது கு