Posts

Showing posts from February 2, 2014

நாம் செய்யும் அமல்களை பாதுகாப்போம்!

                                      بسم الله الرحمن الرحيم                                      وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் காவல் தேடுகிறேன்.(113:5) இன்று முழு உலகத்திலும் குறிப்பாக நமது பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் அமல்கள் செய்வதில் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்.  கடமையான   தொழுகை முதல் கொண்டு  மற்றெல்லா வணக்கங்களிலும் முஸ்லிம்கள் அதிக ஆர்வம் காட்டுவது போற்றக்கூடியது.   பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நாம் செய்யக்கூடிய இந்த அமல்களை பாதுகாப்பதும் மிக மிக அவசியமான செயல் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும். ஏனென்றால் நாம் சிரமப்பட்டு செய்யும் அமல்களை பாதுகாக்காவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்கும் போது அமலே செய்யாதவனை போல ஆகும் நிலைமை ஏற்பட்டுவிடும்.  நாம் உலகின் சில விஷயங்களை பாதுகாக்க என்னென்னே முயற்சிகளை எல்லாம் செய்கிறோம்.  நம் செல்வங்களை வங்கியில் வைத்து பாதுகாக்கிறோம்,நம்முடைய வியாபார பொருட்களை அதற்குரிய தகுந்த ஏற்பாடு செய்து பாதுகாக்கிறோம், நம் கடைகளிலுள்ள பொருட்களை