Posts

Showing posts from May 25, 2014

மிஃராஜ்

Image
                                                                      سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا  ۚ  إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக அவ்வாறு அழைத்துச் சென்றோம். நிச்சயமாக அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்.(17:1) ரப்புல் ஆலமீன் அவனுடைய பல தூதுவர்களுக்கு பல அற்புதங்களை வழங்கியது போல் நமது நாயகத்திற்கு வழங்கப்பட்ட பல அற்புதங்களில் மிஃராஜும் ஒரு மிக பெரும் அற்புதமாகும்.  இதில் முஸ்லிம்களுக்கு நிறைய படிப்பினைகள் இருக்கிறது. மிஃராஜில் அல்லாஹ்வினுடைய ஆற்றல் வெளிபடுகிறது ,  நமது நாயகத்தின் கண்ணியம் விளங்குகிறது, மனிதன்