Posts

Showing posts from February 3, 2013

வரலாறுகளை தெரிந்துகொள்வோம்

                            بسم الله الرحمن الرحيم  இஸ்லாமிய மார்கத்தில் எல்லா விஷயங்களையும்  மிக தெளிவாகவும், துல்லியமாகவும்  ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்லியிருக்கிறான். ஹழ்ரத் ஆதம் (அலை)படைக்கப்பட்டது முதல் எல்லா நபிமார்களின் வரலாறுகளையும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறான். பெருமானார் (ஸல்)அவர்களும் சத்திய சஹாபாக்களின் மூலம் நம்மக்கு முழுமையாக ஒப்படைத்துவிட்டார்கள். நாம் அந்த அணைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு அவைகளை பாதுகாப்பது நம் கடமை. நம் மார்கத்தினுடைய கொள்கைகளை, சட்ட திட்டங்களை.ஹலால் ஹராம்களை, சுய ஒழுக்கங்களை,இன்னும் நாயகம் நமக்கு என்னவெல்லாம் கற்று தந்தார்களோ அவை அனைத்தையும் தெரிந்துகொண்டு அவைகளை  பாதுகாப்பது எப்படி நம்மீது கடமையோ!அதுபோல் பெருமானார் (ஸல்)அவர்கள் நமக்கு சொல்லி தந்த நம் முன்னோர்களின்  வரலாறுகளையும்  பாதுகாப்பது நம்மீது கடமை என்பதை உணர்ந்து நம் வரலாறுகளை பாதுகாக்க வேண்டும். நமக்கு வரலாறுகளின் மகத்துவம், அதன் சிறப்பும்  விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் உலக பொது மறையில் ஏறத்தாள 1000 வசனங்களுக்கு மேலாக  முன்னோர்களின்  வரலாறுகளை நமக்கு  ரப்புல்