உள்ளம் தூய்மை பெற !
بسم الله الرحمن الرحيم الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28) இன்று மன நிம்மதியை தேடி மக்கள் அழைகிறார்கள். நிம்மதிக்காக சிலர்கள் மலைகளை தேடியும் இன்னும் சிலர்கள் கடல் மணல்களை தேடியும் இன்னும் சிலர்கள் பூங்காக்களை தேடியும் இன்னும் பலர்கள் மருத்துவ மனைகளை தேடியும் அழைகிறார்கள். பணம் இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு சென்று பல சுஹ துக்க நிகழ்வுகளுக்கு கூட வரமுடியாமல் பணம் சம்பாதித்தும் சிலர்களுக்கு நிம்மதி இல்லை. பெண் இருந்தால் நிம்மத...