உள்ளம் தூய்மை பெற !
بسم الله الرحمن الرحيم
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
இன்று மன நிம்மதியை தேடி மக்கள் அழைகிறார்கள். நிம்மதிக்காக சிலர்கள் மலைகளை தேடியும் இன்னும் சிலர்கள் கடல் மணல்களை தேடியும் இன்னும் சிலர்கள் பூங்காக்களை தேடியும் இன்னும் பலர்கள் மருத்துவ மனைகளை தேடியும் அழைகிறார்கள்.
பணம் இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு சென்று பல சுஹ துக்க நிகழ்வுகளுக்கு கூட வரமுடியாமல் பணம் சம்பாதித்தும் சிலர்களுக்கு நிம்மதி இல்லை.
பெண் இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று பல பெண்களை மனம் முடித்து முதுகெலும்பு தேய்ந்தது தான் மிச்சம் நிம்மதி கிடைக்க வில்லை.
நிம்மதி என்பது பணத்தின் மூலமோ, பெண்களின் மூலமோ, மருந்து மாத்திரைகளின் மூலமோ ஏற்பட கூடியதல்ல
நிம்மதி என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளம் தூய்மையாகிவிட்டால் வாழ்கையில் தானாக நிம்மதி வந்துவிடும்.
உள்ளம் என்பது முழுக்க முழுக்க அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்டது.நம்முடைய செயல்களை கணக்கெடுக்க தனி மலக்குகள் இருக்கிறார்கள்
كِرَامًا كَاتِبِينَ
அவர்கள் கண்ணியம் நிறைந்த எழுத்தாளர்கள் மனிதர்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள்.(82:11,12)
அதேபோல நம்மடைய சொற்களை பதிவு செய்ய தனி மலக்குகள் இருக்கிறார்கள்.
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
ஆனால் நம் எண்ணங்களை மலக்குமார்களை வைத்து பதிவு செய்யவில்லை அல்லாஹ்வே பதிவு செய்வதாக சொல்கிறான்
وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)
இன்று மன நிம்மதியை தேடி மக்கள் அழைகிறார்கள். நிம்மதிக்காக சிலர்கள் மலைகளை தேடியும் இன்னும் சிலர்கள் கடல் மணல்களை தேடியும் இன்னும் சிலர்கள் பூங்காக்களை தேடியும் இன்னும் பலர்கள் மருத்துவ மனைகளை தேடியும் அழைகிறார்கள்.
பணம் இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு சென்று பல சுஹ துக்க நிகழ்வுகளுக்கு கூட வரமுடியாமல் பணம் சம்பாதித்தும் சிலர்களுக்கு நிம்மதி இல்லை.
பெண் இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று பல பெண்களை மனம் முடித்து முதுகெலும்பு தேய்ந்தது தான் மிச்சம் நிம்மதி கிடைக்க வில்லை.
நிம்மதி என்பது பணத்தின் மூலமோ, பெண்களின் மூலமோ, மருந்து மாத்திரைகளின் மூலமோ ஏற்பட கூடியதல்ல
நிம்மதி என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளம் தூய்மையாகிவிட்டால் வாழ்கையில் தானாக நிம்மதி வந்துவிடும்.
உள்ளம் என்பது முழுக்க முழுக்க அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்டது.நம்முடைய செயல்களை கணக்கெடுக்க தனி மலக்குகள் இருக்கிறார்கள்
كِرَامًا كَاتِبِينَ
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
அவர்கள் கண்ணியம் நிறைந்த எழுத்தாளர்கள் மனிதர்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள்.(82:11,12)
அதேபோல நம்மடைய சொற்களை பதிவு செய்ய தனி மலக்குகள் இருக்கிறார்கள்.
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் மனிதனிடம் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50:18)
ஆனால் நம் எண்ணங்களை மலக்குமார்களை வைத்து பதிவு செய்யவில்லை அல்லாஹ்வே பதிவு செய்வதாக சொல்கிறான்
وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ
அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்(50:16)
எனவே உள்ளம் என்பது அல்லாஹ்வின் கைவசம் உள்ளது.
எப்போது உள்ளம் தூய்மையாகுமோ அப்போது நிம்மதி தானாக வந்துவிடும்.
பெருமானார் ஒரு ஹதீஸில்:
உங்கள் உடலில் ஒரு உருப்பிருக்கிறது அது சீராகிவிட்டால் உடல் முழுக்க சீராகிவிடும் அது சீர்கெட்டு விட்டால் உடல் முழுக்க சீர் கெட்டுவிடும் அது தான் உள்ளம் என்று பெருமானார் சொன்னார்கள்
அதேபோல இன்னொரு ஹதீஸில்:
அல்லாஹ் உங்கள் செல்வங்களையோ ,வெளி தோற்றங்கலையோ பார்பதில்லை மாறாக உள்ளங்களையும் செயல்களையும் பார்கிறான். என்று பெருமானார் சொன்னார்கள்.
ஆக நிம்மதி என்பது உள்ளம் சார்ந்தது. உள்ளத்தை சரி செய்து விட்டால் நிம்மதி தானாக வந்துவிடும்.உள்ளம் என்பது எண்ணங்கள் உதிக்கும் இடம் நம் எண்ணங்களை சரியாக்க வேண்டும். நம் மார்க்கத்தில் எண்ணங்கள் இல்லாமல் எந்த அமல்களும் இல்லை தொழுகை,நோன்பு,ஜகாத் ஹஜ், போன்ற எல்லா அமல்களுக்கும் எண்ணங்கள் தான் அடிப்படையாக இருக்கிறது அந்த எண்ணங்களை சரி செய்ய வேண்டும்.
நம் உள்ளம் போர்களத்தை போன்றது அங்கு மலக்குமார்களும் ஷைத்தான்களும் போர்புரிகிரார்கள் மலக்குமார்கள் நன்மையை ஏவுவார்கள் ஷைத்தான் பாவம் தூண்டுகிறான் இறுதியில் மலக்குகள் வென்றால் நாம் நன்மைகளை செய்கிறோம் ஷைத்தான் வென்றால் நாம் பாவங்களை செய்கிறோம்.
எனவே நமக்கு நிம்மதி வேண்டுமென்றால் நம் உள்ளம் தூய்மையாக வேண்டும். நம் உள்ளம் தூய்மையாக வேண்டுமென்றால் அதற்க்கு நாம் அதிகம் சிரமங்களை சகித்து கொள்ள வேண்டும்.
நம் உள்ளத்திற்கு பலரின் மூலம் நிறைய சிரமங்கள் ஏற்படும் என்று பெருமானார் சொன்னார்கள்
ஒரு ஹதீஸில் : ஒரு முஃமினின் மீது இன்னொரு முஃமின் பொறாமை கொள்வான், முனாஃபிக் கோபத்தோடு இருப்பான், காஃபிர் கொலை செய்ய நாடுவான், ஷைத்தான் வழி கெடுப்பான், நஃப்ஸ் சண்டையிடும். என்று பெருமானார் சொன்னார்கள்.
இந்த அனைவர்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டே நம் உள்ளத்தை சுத்தப்படுத்தி நம் வாழ்கையை நிம்மதியாக்கி கொள்ள வேண்டும்.
பெருமானார் சொன்னார்கள் உள்ளம் என்பது சிட்டுக்குருவியை போன்றது சிட்டுக்குருவி எப்படி ஒரே இடத்தில் அமராமல் தவ்வி கொண்டே இருக்குமோ அது போன்று நம் உள்ளமும் ஒரே நிலைபாட்டில் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும்.
நாம் தான் அதை பெருமானார் சொன்ன வழியை நடை முறை படுத்தி சீராக்கி கொள்ள வேண்டும்.
ஒரு மனிதர் ஹழ்ரத் கிள்ர் (அலை) அவர்களை பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்து கொண்டே இருந்தார் ஒரு நாள் இறைவன் அந்த பாக்கியத்தை அவருக்கு கொடுத்தான் ஹழ்ரத் கிளுர் (அலை) அவர்களிடம் நான் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்க உலகில் யாராவது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தால் என்னிடம் அவர்களை அழைத்து வாருங்கள் அவரை வைத்து நான் உங்களுக்கு துஆ செய்கிறேன் நிங்களும் அவரை போல நிம்மதியாக வாழலாம் என்று சொல்ல அந்த மனிதரும் ஊர் முழுக்க சுற்றி விட்டு இருதியாக ஊரிலே யாருமே நிம்மதியாக வாழ வில்லை ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்ல ஹழ்ரத் கிளுர் (அலை) அவர்கள் அந்த மனிதருக்கு நிம்மதியாக வாழ 6 விஷயங்களை சொல்லி கொடுத்து இவைகளை செய்தால் உங்கள் வாழ்வில் நிம்மதி கிடைத்து விடும் என்று சொல்லி அந்த 6 விஷயங்களில் முதலாவதாக
அல்லாஹ்வை திக்ர் செய்வதினால் மனம் தூய்மை அடைந்து வாழ்வில் நிம்மதி வந்துவிடும் என்று சொல்லி திக்ரை அதிகமாக செய்யுங்கள் என்று சொன்னார்கள்.
குர்ஆனிலே அல்லாஹ் சொல்லவன்
எனவே திக்ரின் மூலம் தான் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பதை நாம் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும்.
குர்ஆனிலே அல்லாஹ் சொல்லவன்
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
நேர் வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் தாம் முற்றிலும் ஈமான் கொண்டவர்கள் மேலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)
திக்ர் தான் மனிதனின் உள்ளத்திற்கு நிம்மதி தருகிறது என்று அல்லாஹ் சொல்கிறான். ஏனென்றால் மனிதன் எதை செய்தால் எது கிடைக்கும் என்று அல்லாஹ்வுக்கு த்தான் தெரியும் அவன்தான் நம்மை முழுமையாக உருவாக்கியவன் எனவே நாம் திக்ர்களை அதிகமாக செய்யவேண்டும்.
பெருமானாரும் ஒரு ஹதீஸில் :திக்ர் செய்பவர் உயிர் உள்ளவர் திக்ர் செய்யாதவன் செத்த பிணத்திற்கு சமம் என்று சொல்லுவார்கள்.
ஒரு சஹாபி பெருமானாரிடத்தில் ஜிஹாதில் அதிகம் நன்மை தரக்கூடிய ஜிஹாத் எது என்று கேட்டார்கள் எந்த ஜிஹாதில் அதிகம் திக்ர் செய்ய படுகிறதோ அதில் தான் அதிகம் நன்மை உண்டு என்று பெருமானார் சொல்ல மீண்டும் அந்த சஹாபி நோன்பில் அதிகம் நன்மை தரக்கூடியது எது என்று கேட்க பெருமானார் எந்த நோன்பில் அதிகம் அல்லாஹ்வை திக்ர் செய்ய படுகிறதோ அந்த நோன்பிற்கு அதிகம் கூலி உண்டு என்றார்கள் மீண்டும் அந்த சஹாபி தொழுகை, ஜகாத்து, ஹஜ் போன்ற வணக்கங்களை பற்றி கேட்க பெருமானார் அதே பதிலை சொன்னார்கள்.
எனவே திக்ர் தான் நம் உள்ளதை பக்குவபடுத்தும் சாதனம்.
பெரும் பெரும் இறை நேசர்கள் அல்லாஹ்விடத்தில் உயர்பதவியை அடைந்து கொண்டது இந்த திக்ரை வைத்துதான்.
சத்திய சஹாபாக்களின் வாழ்க்கை பயணம் மாறியதற்கு காரணமும் இந்த திக்ர் தான்.
ஹழ்ரத் உமர் (ரலி) வற்றி போன நயில் நதியை கடிதம் எழுதி போட்டு ஓட வைத்தார்கள் என்று நாம் படிக்கிறோமே அதற்கு காரணம் இந்த திக்ர் தான்.
மிருகங்களாக வாழ்ந்தவர்களை மனித புனிதர்களாக மாற்றியது இந்த திக்ர் தான்.
ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்திருந்தார்கள் அந்த சமயம் ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுக்குள் வந்தார்கள் ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்களின் கண்களை பார்த்து விட்டு என்ன அனஸே உங்கள் கண்களில் விபச்சாரத்தின் அடையாளங்கள் தெரிகிறதே என்று சட்டென கேட்க ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அதிர்ந்து போய் நான் விபச்சாரமெல்லாம் செய்து விட வில்லை மஸ்ஜிதிற்குள் நுழைவதற்கு முன் ஒரு அந்நிய பெண்ணை பார்த்து விட்டேன் அவளவுதான் என்றார்கள் உடனே ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்களுக்கு சென்று அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள் என்று உபதேசம் செய்தார்கள்.
இந்த நிலை சஹாபாகளுக்கு திரின் மூலம் தானே கிடைத்தது
இது போன்று நிறைய சம்பவங்களை சொல்லி கொண்டே போகலாம்.
பெருமானார் ஒரு ஹதீஸில் : சுவர்கவாசிகளுக்கு உலகில் திக்ரு செய்யாமல் கழித்த நேரத்தை பற்றிதான் சுவர்கத்தில் அதிகம் கவலை ஏற்படும் என்றார்கள்.
அதேபோல அதிகம் திக்ர் செய்பவர் முனாபிக் ஆகமாட்டார் என்றும் , ஆதமுடைய மக்களின் அமல்களில் கப்ர் வேதனையை திக்ர் தான் குறைக்கும் என்றும் பெருமான்னர் சொன்னார்கள்.
எனவே நாம் அதிகம் திக்ர் செய்யும் மக்களாக மாறிவிட வேண்டும் என்னேரமும் நம்முடைய நாவுகள் திக்ரிலேயே இருக்க வேண்டும்.
சில கொள்கை என்ற பெயரில் குழப்பம் செய்யும் குழப்பவாதிகள் தான் மற்ற சுன்னத்தான அமல் களை விட்டு மக்களை துரமாக்கி விட்டது போல் திக்ரை விட்டும் துரமாக்கி விட்டார்கள்.
அதற்க்கு ஆதாரமில்லை இதற்க்கு ஆதாரமில்லை என்று சொல்லி சொல்லியே அமல்களின் ஆர்வத்தை மக்களின் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டவர்கள். முனாபிக்குகளுக்கு மட்டும் தான் அமல்கள் செய்ய கஷ்டமாக இருக்கும் குறிப்பாக திக்ர் விஷயத்தில் பெருமானாரே திக்ர் நயவஞ்சக தனத்தை போக்கிவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள் அப்படி என்றால் திக்ர் செய்வதை தடுப்பவன் முனாபிக் தானே அவன் யூதர்களின் கைக்கூலி என்று உலமாக்கள் அவ்வப்போது நிருபித்து கொண்டிருக்கிறார்கள். அவன் யூதர்களிடம் வாங்கிய பணத்திற்கு வேலை செய்து விட்டு போகட்டும் நாம் நம் கப்ரை பற்றியும் நம் மஹ்ஷரை பற்றியும் எண்ணி அதிகமாக நல் அமல்களை செய்வோம் குறிப்பாக திக்றுகளை அதிகமாக செய்து அல்லாஹ்வின் அன்பையும் நாயகத்தின் அன்பையும் பெறுவோம் இறை நேசர்களாக மாற முயற்சி செய்வோம்.
அல்லாஹ் நம் எல்லா அமல்களையும் கபுள் செய்துகொண்டு நம்மை நல்லவர்களின் கூட்டத்தில் செர்பானாக ஆமீன்
ஹதீஸ் அற்புதம் ஆனால் ஆதாரம் பதிவு செய்தால் மிக நன்று
ReplyDelete