சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

                                       بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.{49:10}



அன்று இவ்வுலகில் இஸ்லாம் பரவிய பல காரணங்களில் ஒன்று சத்திய ஸஹாபாக்கள் தங்களுக்கு மத்தியில்  சகோதரத்துவத்தோடு வாழ்ந்தது தான்.


இன்று இஸ்லாமை பற்றி தவறாக பேசப்படும் பல 
காரணங்களில் ஒன்று நாம் நமக்கு மத்தியில்  சகோதரத்துவத்தோடு வாழாதது தான்.
அன்று நாயகம் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் இஸ்லாம் பரவியது. இன்று நமக்கு மத்தியில்  சகோதரத்துவம் எற்படாததின் மூலம் முஸ்லிம்களே மதம் மாறும் அவநிலையை பார்க்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு கொருக்குபேட்டையில் சில முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டதாக பத்திரிக்கையில் பரவலாக வந்ததையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் கூட்டம் கூட்டமாக சென்று கேட்ட போது நாங்கள் பிறந்தது முதல் இன்று வரை கஷ்டப்படும் போது யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.ஒரு வேலை உணவு கூட இல்லாமல் பல நாட்களாக கஷ்டப்பட்டோம்,உடுத்த சரியான துணி 
கூட இல்லாமல் பல நாட்களாக கஷ்டப்பட்டோம்,நோயிக்கு சரியான மருத்துவம் கூட பார்க்க முடியாமல் பல நாட்களாக கஷ்டப்பட்டோம் அப்போதெல்லாம் இவர்கள் தான் உதவினார்கள்.இவர்கள் யாரும் எங்களை மதம் மாற்றவில்லை நாங்களாக மனம் மாறி கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டோம்,கிறிஸ்துவ ஆலயத்தில் பணி செய்வதை புண்ணியமாக கருதுகிறோம் என்று நம் முகத்தில் காரி துப்பாத குறையாக விரட்டியடித்ததை நாம் இன்னும் மறக்கவில்லையே!

அன்று நாயகம் வறுமை மனிதனை குஃப்றிலே சேர்த்துவிடும் என்று சொன்னது இன்று எதார்த்தமாக நடக்கிறது. வறுமை தான் அவர்களை குஃப்ரிலே சேர்த்தது என்றாலும் நாம் சகோதரத்துவத்தோடு வாழாததும் இதற்கு காரணம். 

பிரபல்யமான சம்பவம் ஒன்று  ஒரு சஹாபி (ரலி) போரிலே வெட்டப்பட்டு உயிர் போகும் நிலையில் தண்ணீர் குடிக்க குவளையை வாயில் வைக்கும் போது அருகாமையில் வெட்டுப்பட்டு  இருந்த இன்னொரு  சஹாபி தண்ணீர் என்று சப்தம் கொடுத்த போது இவர்கள் தண்ணீர் அருந்தாமல் அவருக்கு கொடுக்கும் படி சைக்கினை செய்தார்கள் அதேப்போல அந்த சஹாபியும் அடுத்த சஹாபிக்காக விட்டுக்கொடுத்து இருதியில் மூவருமே தண்ணீர் அருந்தாமல் சகோதரத்துவத்தை வாழ வைத்து அவர்கள் மரணித்தார்கள் என்பது வரலாறு.

ஆனால் இன்று யார் நரகிற்கு சென்றாலும் சரி,பசியால் வாடினாலும் சரி, நோயினால் மரணித்தாலும் 
சரி, உடையே இல்லாமல் மானம் இழந்து வாழ்ந்தாலும் சரி  நாமும் நம்முடைய பல தலைமுறைகள் வாழ்ந்தால் மட்டும் போதும் என்று சகோதரத்துவத்தை நாம் சாகடிக்கிறோம்.

சில குடும்பங்கள் மதம் மாறிவிட்டதால் அவர்கள் மட்டும் மாறவில்லை அவர்களின் பரம்பரையையே மாற்றிவிட்டார்கள் என்பதை 
நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் அமேரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் படித்தவர்கள், அறிவாளிகள், செல்வந்தர்கள் ஏன்? இஸ்ரேலின் யூத கருவியல் விஞ்ஞானி ராபர்ட் கில்ஹம் போன்றவர்கள், இன்னும் சொல்லப்போனால் பிறந்தது முதல் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத யாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாத மக்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பு அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை ஏற்று  சுவர்கத்தில் நுழைந்து
  கொண்டிருக்க! சுவர்கத்திர்காக படைக்கப்பட்ட மக்கள் நரகை நோக்கி பயணம் செய்கிறார்களே!

எவ்வளவு பெரும் வேதனை.நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும்.

நாயகம் இந்த தீனுல் இஸ்லாத்தை அறிமுக படுத்துவதற்கு முன் பரம்பரை, 
பரம்பரையாக சண்டையிட்டு கொண்டிருந்தவர்களை பெருமானார் இந்த சன் மார்கத்தின் கொள்கையான சகோதரத்துவத்தை ஏற்படுத்தியதின் மூலம் உலகமே வியந்து பார்க்கும் அளவு   
சகோதரத்துவத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
 

பெருமானார் மக்காவிலும் சஹாபாக்களை  சகோதரத்துவத்தோடு வாழவைத்தார்கள். மதீனா வந்தவுடன் முதல் வேலையாக முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

ஒரு சபையில் ஒவ்வொரு முஹாஜிரையும் ஒரு அன்சாறியோடு நாயகம் இணைத்து 
சகோதரத்துவத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள் எல்லா முஹாஜிர்கலையும் அன்சாரிகளோடு இணைத்து விட்டார்கள் ஹழ்ரத் அலி (ரலி)அவர்களை யாரோடும் இனைக்கவில்லை பொருத்து,    
 பொருத்து பார்த்த ஹழ்ரத் அலி (ரலி)அவர்கள் சபையிலிருந்து நாயகமே என் முதுகெலும்மு உடைந்து போலிருக்கிறது ஏன்?என்னை யாரோடும் சகொதரராக்கவில்லை என்று கத்தினார்கள் உடனே பெருமானார் அலியே எனக்கு சகோதரராக உம்மை வைத்திருக்கிறேன் என்ற உடன் அமைதியானார்கள்.

இப்படி எல்லா நேரத்திலும் சஹாபாக்களை 
சகோதரத்துவத்தோடு பெருமானார் வாழவைத்தார்கள்.  
அதே போல நாயகமும் சஹாபாக்களோடு சகோதரத்துவத்தோடு வாழ்ந்தார்கள்.

ஒரு முறை பெருமானார் சில சஹாபாக்களோடு மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்து பெசிக்கொண்டிந்தார்கள்  அப்போது ஒரு சஹாபி (ரலி) அவர்கள் 
மஸ்ஜிதுன் நபவியிக்குள் வருவதை பார்த்த நாயகம் தன் கால்களை மடக்கி ஒடுக்கி சற்று சுருக்கி வந்த சஹாபிக்கு இடம் தருவதை போல் பாவனை செய்தார்கள் இதை பார்த்த அந்த சஹாபி  நாயகமே மஸ்ஜிதிலே நிறைய இடம் இருக்க தாங்கள் ஏன்  இடம் இல்லாததை போல பாவனை செய்கிறீர்கள் என்று கேட்க? மஸ்ஜிதில் இடம் இருக்கிறது என் உள்ளத்திலும் இடம் இருப்பதை காட்டுவதற்காக இவ்வாறு செய்தேன்.அது மட்டுமல்ல கியாமத் வரை வரும் மக்களுக்கு இப்படித்தான் ஒரு முஸ்லிமோடு நடக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக அப்படி செய்தேன் என்றார்கள்.    
         
இந்த சம்பவம் நமக்கு பெரும் பாடத்தை கற்பிக்கிறது. நாம் நம் சக முஸ்லிமோடு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை ஒரே அமர்விலே நாயகம் நமக்கு உணர்த்திவிட்டார்கள்.

நாயகம் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் சகோதரத்துவத்தை நமக்கு போதித்து கொண்டே இருந்தார்கள்.

யாராவது கீழே விழுந்து விட்டால் விழுந்தவர் முஸ்லிமா காஃபிரா என்றெல்லாம் பார்க்காதீர்கள் முதலில் விழுந்தவரை தூக்கிவிட்டு அவருக்கு உதவி செய்யுங்கள் என்று நாயகம் சொன்னார்கள்.

ஆனால் இன்று நம்மை கீழே தள்ளிவிடுவதே முஸ்லிம்கள் தான்.முஸ்லிம்கள் யாரும் யாருக்கும் உதவ தயாராக இல்லை .

அதிலும் இயக்கங்கள் என்ற பெயரில் சகோதரத்துவத்தை சாகடிக்கும் மகான்கள் தான்  இன்று இருக்கிறார்கள். ஒரு இயக்கத்தில் இருப்பவர் இன்னொரு 
இயக்கத்தில் இருப்பவருக்கு ஸலாம் சொல்வதில்லை, பேசுவதில்லை, இவர் அவரை பற்றி குறை சொல்வது அவர் இவரை பற்றி குறை சொல்வது இப்படியே சகோதரத்துவத்தை விட்டு மிக தூரமாகத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

சகோதரத்துவத்தை முன் வைத்து நாயகம் போதித்த ஹதீஸ்களை பாருங்கள்...

1.மனிதனின் உள்ளத்தில் குரோதங்கள், போட்டி, போறாமை போன்ற அழுக்குகளை அழித்து மனிதனை தூய்மை படுத்தும் ஒரே சாதனம் உன்னதமான சகோதரத்துவம் தான். இது தான் முஸ்லிம்களின் வாழ்கையை சூழ்ந்து கொள்ளவேண்டும்.இதன் மூலம் சமுதாய வாழ்க்கை பரஸ்பர அன்பு,ஒற்றுமை என்ற உறுதியான அடித்தளத்தின் மீது அமையும்.இன்னும் இதன் மூலமே சமுதாய கட்டிடம் சூழ்ச்சி, வஞ்சகம், பொறாமை, அநீதம் போன்ற விரிசல்களிலிருந்து பாதுகாப்பு பெரும்...


2.யாருடைய கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக!நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழையமாட்டீர்கள்.உங்களுக்கு கிடையே சகோதரத்துவம் கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்...


மனிதனின் உள்ள அழுக்குகளை  நீக்க சகோதரத்துவம் தேவை, நாம்  ஈமான் கொண்டவர்களாக 
சகோதரத்துவம் தேவை.என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.
இன்னொரு ஹதீஸிலே 
        ஒரு முஸ்லிம்  இன்னொரு முஸ்லிம் சகோதரனோடு மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து இருப்பது ஆகுமானதல்ல எவர் மூன்று நாட்களுக்கும் அதிகமாக நட்பை முறித்து அதே நிலையில் மரணித்துவிட்டால் அவர் நரகம் செல்வார்.

நாம் சுவனம் செல்லவே சகோதரத்துவம் தேவை என்பதை நாம் நன்றாக உணர வேண்டும்.

நோயாளியை நலம் விசாரித்தால் அல்லாஹ் கிடைப்பான் என்ற ஹதீஸ்,பசித்தவருக்கு உணவளித்தால் 
அல்லாஹ் கிடைப்பான் என்ற ஹதீஸ்களெல்லாம் நமக்கு          உச்சக்கட்ட சகோதரத்துவத்தை தூண்டுகிறது.

இது போன்ற ஹதீஸ்கள் தான் சஹாபாக்களை சகோதரத்துவத்தோடு வாழ வைத்தது.

ஒரு அன்சாரி சஹாபி முஹாஜிருக்காக தன் வீட்டில் பாதியை கொடுத்தார்,சொத்தில் பாதியை 
கொடுத்தார் எல்லாவற்றுக்கும் மேலாக தன் மனைவியை தலாக் கொடுத்து முஹாஜிர் சஹாபிக்கு திருமணம் முடித்து வைத்தார் என்றால் சகோதரத்துவத்தின் உண்மையான பலனை சஹாபாக்கள் விளங்கி இருந்தார்கள்.

ஆனால் இன்று நாம் யாருக்காவது உதவி தேவைப்படும் நேரத்தில் தான் ஓடிவிடுகிறோம்.நம்மால் நம்முடன் பிறந்த சகோதரனுக்கு கூட உதவ முடியவில்லை. 

நம்முடன் பிறந்தவர் மிக சிரமத்திலிருக்கிறார் நம்மிடத்தில் அவருக்கு உதவும் அளவு செல்வம் இருப்பினும் நாம் உதவுவது கிடையாது.

இன்னும் கொடுமை யாரினுடைய சகோதரராவது இறந்து விட்டால் அவரின் மனைவியும் பிள்ளைகளும் கல் சுமந்து, மண் சுமந்து கஷ்டப்பட்டாலும் சரி நாம் போய் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது.

நம்முடன் பிறந்தவரின் நிலையே இப்படி என்றால் நாம் எங்கே பிற முஸ்லிம்களை கவனிக்கப்போகிறோம்.

ஒன்று மட்டும் உறுதி யாரோடும் 
சகோதரத்துவத்தோடு வாழாமல் கோடி கொடியாக சொத்துக்கள் சேர்த்தாலும் சரி அதன் மூலம் ஒரே ஒரு பைசாக்கூட நமக்கு இரு உலகிலும் பயனலிக்காது.


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது ஒரு 
சகோதரரின் தேவையை நிறைவேற்ற 
 இஃதிகாஃபை முறித்து விட்டு வெளியே சென்றார்கள் காரணம் கேட்டபோது இஃதிகாஃபை விட ஒரு சகோதரரின் தேவையை நிறைவேற்றுவது மிக அதிக நன்மையை தரக்கூடியது என்றார்கள்.

எனவே நாம் நமக்கு மத்தியிலும் 
சகோதரத்துவத்தோடு வாழ்ந்து, பிற சமய மக்களோடும் சகோதரத்துவத்தோடு
வாழ்ந்து இந்த உன்னத மார்கத்தின் மாண்புகளை உலகம் முழுக்க பரப்புவோம்.

அதற்கு அல்லாஹ் தவ்பீஃக் செய்வானாக ஆமீன்!
 
   


      

  
 

 


 
 























Comments

Popular posts from this blog

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!