Posts

Showing posts from December 16, 2012

மூட நம்பிக்கைகளும் முழுமையான இஸ்லாமும்

Image
                                                                               الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا சிலர்களின்  முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (18:104) நமது மார்க்கமான தீனுல் இஸ்லாம் மிக உயர்ந்த, சங்கையான, சிறந்த, கண்ணியமான, மார்க்கம். இன்னும் புகழுக்கு என்னென்ன  வார்த்தைகள் இருக்கிறதோ அவை  எல்லா  வார்த்தைகளையும் சொல்லி புகழ்ந்தாலும் புகழ்ந்து விட முடியாத அளவுக்கு மிக உயர்வான மார்க்கம். இதை முஸ்லிம்களான நாம் சொல்லி புகழ்ந்து கொண்டு பெருமை அடிக்கவில்லை உலகின் பிரபல்யமான அறிவாளிகளும், உலக புகழ் பெற்ற விஞ்ஞானிகலும் சொல்லும் வார்த்தை இது. எனவே மிக தூய மார்க்கத்திற்கு சொந்தகாரர்களான நம் பார்வையில் இஸ்லாம் எப்படி இருக்கிறது! பெருமானாருடைய ஹஜ்ஜதுல் விதாவின் உரையில் "அறியாமை காலத்தில் செய்த செயல்களை என் காலுக்கு கீழ்  போட்டு புதைத்து விட்டேன் இனி கியாமத் வரை தூய இஸ்லாத்தை அதன் தூய வழியில் பின்பற்ற வேண்டும்"என்ற நாய