Posts

Showing posts from February 24, 2013

உணவுகளில் ஹலால் அவசியமா?

                          بسم الله الرحمن الرحيم              يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.(2:172) இஸ்லாமிய மார்கத்தில் எல்லா விஷயங்களையும் முறையாக செய்ய வேண்டும். பெருமானார் எப்படி சொல்லி கொடுத்தார்களோ அப்படி செய்வதில் பரகத்களும் இருக்கிறது நன்மைகளும் கிடைக்கும். நம்முடைய (தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற   வணக்கங்களாக  இருந்தாலும் சரி, அல்லது  வியாபாரம்,கொடுக்கல்,வாங்கல்,குடும்பங்களை பராமறிப்பது,அண்டை வீட்டாறோடு பழகுவது  போன்றவைகளாக இருந்தாலும் சரி, அல்லது  நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தாலும் சரி. அதை  அல்லாஹ்வும்,ரஸூலும் கற்று தந்த விதத்தில் செய்தால் அதில் ஆயிரம்,ஆயிரம் பலன்கள் இருக்கிறது. அதற்க்கு மாற்றமாக செய்வதினால் நமக்கு ஆபத்துகளும் அதிகம் பாவங்களின் பட்டியலும் அதிகரிக்கும்.   அதேபோல ஒரு மனிதன