உணவுகளில் ஹலால் அவசியமா?
بسم الله الرحمن الرحيم
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُتَعْبُدُونَ
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.(2:172)
இஸ்லாமிய மார்கத்தில் எல்லா விஷயங்களையும் முறையாக செய்ய வேண்டும். பெருமானார் எப்படி சொல்லி கொடுத்தார்களோ அப்படி செய்வதில் பரகத்களும் இருக்கிறது நன்மைகளும் கிடைக்கும்.
நம்முடைய (தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களாக இருந்தாலும் சரி, அல்லது வியாபாரம்,கொடுக்கல்,வாங்கல்,குடும்பங்களை பராமறிப்பது,அண்டை வீட்டாறோடு பழகுவது போன்றவைகளாக இருந்தாலும் சரி, அல்லது நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தாலும் சரி. அதை அல்லாஹ்வும்,ரஸூலும் கற்று தந்த விதத்தில் செய்தால் அதில் ஆயிரம்,ஆயிரம் பலன்கள் இருக்கிறது.
அதற்க்கு மாற்றமாக செய்வதினால் நமக்கு ஆபத்துகளும் அதிகம் பாவங்களின் பட்டியலும் அதிகரிக்கும்.
அதேபோல ஒரு மனிதன் தன்னுடைய அன்றாட தேவைகளையும் எப்படி நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்பதயும் மிக தெளிவாக பெருமானார் வழிகாட்டி இருக்கிறார்கள்.
நம்முடைய பசியை எப்படி திர்த்துகொள்ள வேண்டும், நம்முடைய தாகத்தை எப்படி தீர்த்து கொள்ள வேண்டும், நம்முடைய வயது மாற்றங்கள் ஏற்படும்போது நமது உணர்ச்சிகளை எந்த முறையில் தீர்த்து கொள்ள வேண்டும், அந்த உணர்ச்சிகளை எந்த முறையில் அடக்கி கொள்ள வேண்டும். என்றெல்லாம் நமக்கு விளக்கி தந்துள்ளார்கள்.
இவை அனைத்துமே மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்படும் சுய தேவைகள்.
ஆனால் ஒரு முஸ்லிம் இவைகளை கூட மார்க்கம் சொல்லிக்கொடுத்த முறைகளில் தான் செய்ய வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் விருப்பம்.
யார் அல்லாஹ்வின் விருப்பத்திற்கினங்க தன் வாழ்கையை அமைத்து கொள்கிறாரோ அவருக்கு இவ்வுலக வாழ்வும் இன்பமாகும் நாளை மறுமையிலும் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார்.
எனவே தான் பெருமானார் மதீனா வந்த பிறகு சஹாபாக்களுக்கு மலம் ஜலம் கழிக்கும் முறையையும் பிறகு எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் கற்று தந்தார்கள். இதை பார்த்த யூதர்கள் இவரென்ன நபியா மக்களுக்கு மலம் ஜலம் போவதையெல்லாம் கற்றுத்தருகிறார். இதற்க்கு ஒரு நபி தேவையா? என்று கின்டல் செய்தார்கள்.அந்தளவு நம் மார்கத்தில் எல்லா விஷயங்களும் சொல்லி தரப்பட்டிருக்கிறது.
அந்தடிப்படையில் உணவு உன்பது மனிதனின் இயற்கை தேவை. மனிதன் உணவு உண்டால் தான் அவனுடைய உடலுக்கு ஆற்றல் வரும், அவனால் எந்த விஷயத்தையும் செய்ய முடியும், அல்லாஹ்வை வணங்குவதற்கு கூட உடல் ஆற்றல் தேவை. அந்த உணவை உண்ணும்போது கூட சில வழிமுறைகளை அல்லாஹ் வைத்திருக்கிறான்.அல்லாஹ் எந்த வழி முறைகளில் நம்முடைய உணவுகளை அமைத்துக்கொள்ள சொன்னானோ அப்படி அமைத்து கொண்டால் அந்த உணவின் மூலம் பரகத்தும்,உடலுக்கு ஆரோக்கியமும், இறை பொருத்தமும் ஏற்படும். அதற்க்கு மாற்றமாக அமைத்து கொண்டால் அதன் மூலம் கெடுதிகளும், நோய்களும், பாவங்களும் ஏற்படும்.
வெந்ததை சாப்பிட்டு விதிவந்தால் சாகுவது மிருக குணம் மனிதர்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அலாஹ்வின் கட்டளைகள் படி தான் தன் வாழ்கையை அமைத்து கொள்ளவேண்டும்.
உணவு உண்ணும் போது கூட நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும் என்றால்! யாஅல்லாஹ் இந்த உணவினால் ஏற்படும் ஆற்றல்களை உன்னுடைய மார்கத்திர்காக செலவு செய்வேன் என்று எண்ணத்தோடு சாப்பிட்டால் அந்த உணவு உண்ணுதலும் மறுமையின் வணக்கமாக மாறும்.
அதேபோல எந்த உணவை அல்லாஹ் நமக்கு உண்ண அனுமதித்தானோ அந்த உணவை உண்டால் தான் நமக்கு ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்.
எனவே தான் எந்த உணவை அல்லாஹ் நமக்கு ஹலாலாக ஆக்கினானோ அந்த உணவை தையிபாத் அழகானது என்றும் எதை ஹராமாக்கிநானோ அதை கபிசாத் அசிங்கமானது என்றும் சொல்கிறான்.
குர்ஆணிலே அல்லாஹ் சொல்லும் போது
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள் சொல்கிறான். (2:172)
நாக்குக்கு பிடிக்கிறது என்பதற்காக கண்டதையெல்லாம் சாப்பிட்டால் நம் உடலுக்கு அது அழிவை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் விளங்க வேண்டும்.
நாம் உண்ணும் உணவு கூட ஹலாலானது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று எந்த மதத்திலும்,எந்த இசத்திலும்,எந்தசமயத்திலும் சொல்ல படவில்லை.
ஆனால் அல்லாஹ்வின் மார்க்கம் அதையும் கூட மிக தெளிவாக நமக்கு பிரித்து காட்டிறுக்கிறது.
ஏனென்றால் அல்லாஹ்வினுடைய இந்த தீனுல் இஸ்லாம் இயற்கை மார்க்கம்.
அல்லாஹ் எதை நமக்கு ஹலாலாக்கினானோ அதை சாப்பிடுவதின் மூலம் நாம் இவ்வுலகத்தில் மிக சந்தோஷமாக ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ முடியும்.அல்லாஹ் எதை நமக்கு ஹராமாக்கினானோ அவைகளை உண்ணுவதின் மூலம் நம் உடல் சீர்கெட்டு நாசமாகி விடுவதோடு பெரும் பாவங்களை செய்தவர்களாக ஆகிவிடுவோம்.
அதேபோல அல்லாஹ் எதை நமக்கு ஹலாலாக்கினானோ அவைகளில் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதை மட்டும் சாப்பிட வேண்டும்.
அல்லாஹ்வின் பெயர் சொல்லி அருக்கப்படாததையும், காஃபிர்கள் அருத்ததையும் நாம் அறவே சாப்பிடக்கூடாது.
முஸ்லிம்கள் இதில் உருதியாக இருக்க வேண்டும் முஸ்லிம் அல்லாதவர்கள் அறுத்ததை நாம் சாப்பிட்டுவிட்டால் நம்முடைய அமல்கள் அனைத்தும் வீணாகிவிடும்.
ஒரு முஃமினின் வயிற்றில் ஒரு முறை ஹராமான உணவு சென்று விட்டால் அவரின் துஆ அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது என்று பெருமானார் சொன்னார்கள்.
இந்த விஷயத்தில் சஹாபாக்கள் மிக எச்சரிக்கையாக இருந்தார்கள்.
ஒரு ஹழ்ரத் அபூ பக்கர் சித்தீக் (ரலி)அவர்களின் அடிமை பெண் ஒரு கோப்பையில் பால் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஹழ்ரத் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடத்தில் எப்போது எந்த பொருள் வந்தாலும் விசாரித்து விட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் கடுமையான பசியின் காரணமாக எதையும் விசாரிக்காமல் குடித்து விட்டார்கள் குடித்து முடித்த பிறகு ஏது இந்த உணவு என்று கேட்க அந்த அடிமை பெண் நான் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒருவருக்கு மந்திரித்தேன் அதற்கவர் இப்போது எனக்கு கொடுத்த அன்பளிப்பு தான் இது என்றவுடன் என் எல்லா அமல்களையும் வீணாக்கிவிட்டாயே என்று திட்டிவிட்டு வாயினுள் விரல்களை விட்டு வாந்தி எடுத்தார்கள் வராத பட்சத்தில் தண்ணீரை குடித்து குடித்து வாந்தி எடுத்தார்கள்.
இந்தளவு சஹாபாக்கள் பேணுதலாக வாழ்ந்தார்கள்.
அதேபோல பெருமானார் பிரயாணியின் துஆ விற்கு அல்லாஹ்விடத்தில் மறுப்பே இல்லை என்று சொன்ன நாயகம் ஒரு பிரயாணி நீண்ட தூரம் பிரயானம் செய்து விட்டு மிகுந்த களைப்பிளும் பரட்டையான கோலத்திலும் பார்க்கவே பாவமான நிலையில் அல்லாஹ்விடத்தில் ரப்பீ
ரப்பீ என்று மன்றாடுகிறார் ஆனால் அவரின் உடையும் உணவும் ஹராமாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் அவரின் துஆவை அங்கீகரிக்க மாட்டன் என்று சொன்னார்கள்.
இவைகளை தெரிந்து கொண்ட யூதர்களும், கிறித்துவர்களும் நம் அமல்களையும்,துஆக்களையும் அழிப்பதற்காக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் K.F.C, MCDONALDS, PIZZA HUT இவை அனைத்திலும் அறுக்கப்படும் கோழிகள் ஹலாலான முறையில் அறுக்கப்படவில்லை.நம்மை ஏமாற்றுவதற்காக போலியான ஒரு ஹலால் போடை மாற்றி நம்மை ஏமாற்றுகிறார்கள். நாமும் ருசிக்காக வேண்டி இங்கு சாப்பிட்டுவிட்டால் நம் ஈமான் பறிபோகும் சூழல் ஏற்பட்டு விடும் என்பதிலே கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல MCDONALDS, PIZZA HUT ல் பெப்ரோனி என்று ஒரு உணவு தயாரிக்க படுகிறது அது முழுக்க முழுக்க மாட்டு இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் கலந்து செய்யப்படும் உணவு.எனவே இந்த கடைகளின் பக்கம் செல்லாமல் இருப்பதுதான் நம் ஈமானுக்கு பாதுகாப்பு.
K.F.C, MCDONALDS, PIZZA HUT இந்த மூன்று கடைகளுக்கும் கோழி சப்ளே செய்வது சுகுணா சிக்கன் தான் சுகுணா சிக்கனுடைய ஃபேக்ட்ரி மடத்து குளம் என்ற கிராமத்தில் இருக்கிறது அங்கு சரியான முறையில் இஸ்லாமியர்களை வைத்து அறுக்க வில்லை என்பது உண்மையான தகவல் (பார்க்க MAKKAHMASJID .COM)
இங்கிருந்து தான் தமிழக முழுக்க சப்ளே ஆகிறது எனவே இது போன்ற கடைகளில் சாப்பிடுவது ஹராம். வெறும் தமிழிலும், அரபியிலும் ஹலால் போர்டை பார்த்து ஏமாறாமல் நம் ஈமானை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்
அடுத்து கிறிஸ்மஸ் தினங்களில் ஃப்லம் கேக் தயாரிக்க படுகிறது அதிலே மது கலக்க படுகிறது அதுவும் நமக்கு ஹராம் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
எனவே இத்தகைய ஹராமான உணவிலிருந்து நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.அல்லாஹ் எவைகளை ஹலாலாக ஆக்கினானோ அவைகளை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதை மட்டும் சாப்பிட்டு அதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெற்று அதிகம் அதிகம் நன்மைகளை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் தருவானாக ஆமீன்

Comments
Post a Comment