Posts

Showing posts from November 24, 2013

துஆ இஸ்லாமியர்களின் பேராயுதம்!

                                    بسم الله الرحمن الرحيم    وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ  ۖ  أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ  ۖ  فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ     நபியே! என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்.நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்.அவர்கள் என்னிடமே பிரார்த்தித்துக் கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.(2:186)                                  ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ஆகவே, முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்(7:55) இஸ்லாமிய மார்க்கம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறியை முஸ்லிம்களுக்கு போதித்திருக்கிறது. ஒரு முஸ்லிம் சந்தோஷமான நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். துக்கமான நேரங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் மிக அற்புதமாக வாழ்ந்து காட்டி நமக்கு விளங்கவைத்திருக்