துஆ இஸ்லாமியர்களின் பேராயுதம்!
بسم الله الرحمن الرحيم
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
நபியே! என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்.நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்.அவர்கள் என்னிடமே பிரார்த்தித்துக் கேட்கட்டும். என்னையே நம்பட்டும்.அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.(2:186)
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً
ஆகவே, முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்(7:55)
ஒரு முஸ்லிம் சந்தோஷமான நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். துக்கமான நேரங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் மிக அற்புதமாக வாழ்ந்து காட்டி நமக்கு விளங்கவைத்திருக்கிரார்கள்.
ஒரு முஸ்லிம் இவ்வுலக வாழ்க்கையை எப்படி அமைத்து கொண்டால் அவன் ஜெயம் பெறுவான் என்பதை கற்றுத்தந்தது போன்றே அவன் வாழும் காலங்களில் அவனுக்கு தேவைகள் ஏற்படும் பொது அதை யாரிடத்தில் கேட்டால் அவன் தேவை நிறைவேறும் என்பதையும் நாயகம் நமக்கு மிக சரியாக போதித்திருக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு மனிதன் சக மனிதனிடத்தில் தன் தேவையை சொல்லி கேட்கும் பொழுது அவன் எப்படி நடந்து கொல்வான் என்பது நமக்கு நன்றாக தெரியும். அதை கவனத்தில் கொண்டு நமது நாயகம் ஸல் அவர்கள் நம்மை அல்லாஹ்வோடு இனத்து வைத்தார்கள்.
அல்லாஹ்விடத்தில் மனிதன் தன் தேவைகளை கேட்பதற்கு (துஆ) பிராத்தனை என்று சொல்லப்படும்.
இது போன்ற ஹதீஸ்களை சொன்னதோடு மட்டுமில்லாமல் முன் காலத்து நபிமார்கள் எப்படி எல்லாம் பிராத்தித்தார்கள் என்பதையும் அற்புதமாக சொல்லிகொடுத்தார்கள்.
பாவ மன்னிப்பிற்காக செய்த துஆ:
சைய்யதினா ஆதம் (அலை)அவர்கள் சுவர்க்கத்திலிருந்து இந்த பூபிக்கு அனுப்பப்பட்ட வரலாறு நமக்கு நன்றாக தெரியும்.
சுவர்கத்தில் இறைவன் சாப்பிட கூடாதென்ற கனியை ஷைத்தானுடைய சூழ்ச்சியின் காரணமாக சாப்பிட்டதினால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்.
அதன் பிறகு பல ஆண்டுகள் இறைவனிடத்தில் இப்படி பிராத்தித்தார்கள்.
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
நபியே! என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்.நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்.அவர்கள் என்னிடமே பிரார்த்தித்துக் கேட்கட்டும். என்னையே நம்பட்டும்.அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.(2:186)
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً
ஆகவே, முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்(7:55)
இஸ்லாமிய மார்க்கம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறியை முஸ்லிம்களுக்கு போதித்திருக்கிறது.
ஒரு முஸ்லிம் சந்தோஷமான நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். துக்கமான நேரங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் மிக அற்புதமாக வாழ்ந்து காட்டி நமக்கு விளங்கவைத்திருக்கிரார்கள்.
ஒரு முஸ்லிம் இவ்வுலக வாழ்க்கையை எப்படி அமைத்து கொண்டால் அவன் ஜெயம் பெறுவான் என்பதை கற்றுத்தந்தது போன்றே அவன் வாழும் காலங்களில் அவனுக்கு தேவைகள் ஏற்படும் பொது அதை யாரிடத்தில் கேட்டால் அவன் தேவை நிறைவேறும் என்பதையும் நாயகம் நமக்கு மிக சரியாக போதித்திருக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு மனிதன் சக மனிதனிடத்தில் தன் தேவையை சொல்லி கேட்கும் பொழுது அவன் எப்படி நடந்து கொல்வான் என்பது நமக்கு நன்றாக தெரியும். அதை கவனத்தில் கொண்டு நமது நாயகம் ஸல் அவர்கள் நம்மை அல்லாஹ்வோடு இனத்து வைத்தார்கள்.
அல்லாஹ்விடத்தில் மனிதன் தன் தேவைகளை கேட்பதற்கு (துஆ) பிராத்தனை என்று சொல்லப்படும்.
அது பற்றிய ஹதீஸ்கள்;
1.துஆ முஃமீன்களின் ஆயுதம்....
2.துஆ ஒரு தனியான அமல்....
3.துஆ அமல்களின் சாரம்.....
இது போன்ற ஹதீஸ்களை சொன்னதோடு மட்டுமில்லாமல் முன் காலத்து நபிமார்கள் எப்படி எல்லாம் பிராத்தித்தார்கள் என்பதையும் அற்புதமாக சொல்லிகொடுத்தார்கள்.
பாவ மன்னிப்பிற்காக செய்த துஆ:
சைய்யதினா ஆதம் (அலை)அவர்கள் சுவர்க்கத்திலிருந்து இந்த பூபிக்கு அனுப்பப்பட்ட வரலாறு நமக்கு நன்றாக தெரியும்.
சுவர்கத்தில் இறைவன் சாப்பிட கூடாதென்ற கனியை ஷைத்தானுடைய சூழ்ச்சியின் காரணமாக சாப்பிட்டதினால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்.
அதன் பிறகு பல ஆண்டுகள் இறைவனிடத்தில் இப்படி பிராத்தித்தார்கள்.
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால். நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம்.(7:23)
இந்த நீண்டகால பிராத்தனைக்கு பிறகு அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பது வரலாறு.
அடுத்ததாக ஹழ்ரத் யூனுஸ் (அலை) அவர்கள் அவர்கள் சமூகத்தினரிடத்தில் கோபித்து கொண்டு வேறு ஊருக்கு கப்பலில் பயணம் மேற்கொண்டபோது கப்பலில் இடமில்லாமல் தண்ணீரில் குதித்த சம்பவம் திரு குர்ஆனில் சூரத்துல் அம்பியாவில் சொல்லப்படுகிறது அப்போது அவர்கள் செய்த பிராத்தனை!
وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும் கோபமாக வெளியேறிய போது பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால் அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார். எனவே அவர் மீன் வயிற்றின் ஆழ்ந்த இருளிலிருந்து உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை நீ மிகவும் தூய்மையானவன் நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன் என்று பிரார்த்தித்தார்.(21:87)
இந்த துஆவை நாம் கேட்பதினால் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நமது நாயகம் நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.
செல்வங்களுக்காக, ஆட்சிக்காக செய்த துஆ:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக. எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.(2:201)
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَّا يَنبَغِي لِأَحَدٍ مِّن بَعْدِي ۖ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக. அன்றியும் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடை அளிப்பாயாக. நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்.(38:35)
இந்த துஆவினால் கிடைத்த பிரதி பலன் ஹழ்ரத் சுலைமான் அவர்களுக்கு கொடுத்தது போன்று ஆட்சியை அல்லாஹ் யாருக்கு தரவில்லை.
நோய் நிவாரணத்திற்காக செய்த துஆ:
சைய்யதினா அய்யூப் (அலை) அவர்களுக்கு 70 வயதிற்கு பிறகு 7 ஆண்டுகள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள் இறுதியாக அவர்களின் இந்த துஆவின் மூலம் அல்லாஹ் குனமளித்தான்.
وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِن ضُرٍّ
ஐயூப் தம் இறைவனிடம் நிச்சயமாக என்னை நோயினாலான துன்பம் தீண்டியிருக்கிறது. இறைவனே! கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய் என்று பிரார்த்தித் போது.
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்.(21:83,84)
குழந்தை வேண்டி துஆ :
செய்யதிணா ஜகரிய்யா (அலை) அவர்கள் தனது 90 வயதிற்கு பிறகு குழந்தை வேண்டி துஆ செய்து பெற்றுக்கொண்டார்கள்.
وَزَكَرِيَّا إِذْ نَادَىٰ رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ ۚ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ
ஜகரிய்யா தம் இறைவனிடம் என் இறைவா! நீ என்னை சந்ததியில்லாமல் ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் என்று பிரார்த்தித் போது!
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்காக அவருடைய மனைவியை மலட்டுத் தனத்தை நீக்கி சுகப்படுத்தி அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம். நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள்.இன்னும் அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும் அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.(21:89,90)
இதற்காக வேண்டி மட்டுமல்லாமல் வரம்பு மீறிய சமூகத்தை அழிப்பதற்காகவும் நபிமார்கள் துஆ செய்திருக்கிறார்கள்.
சைய்யதினா நூஹ் (அலை) அவர்கள் 950 வருடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்து கடுமையான பல சோதனைகளை தாங்கிகொண்ட பிறகு கடைசியாக
رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا
என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.(71:26)
அதேபோல சைய்யதினா மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னுடைய கொடுமையான அநீதங்களுக்கு பிறகு
رَبَّنَا اطْمِسْ عَلَىٰ أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.(10:88)
இதுபோல தேவைகேற்ப எல்லா நபிமார்களும் நல்லடியார்களும் கேட்ட துஆகளை நாயகம் சொல்லிகொடுத்ததோடு சஹாபாக்களுக்கு இன்னல்களும் சிரமங்களும் வருபோதேல்லாம் தேவையான துஆகளை கற்றுக்கொடுத்தார்கள்.
ஒரு முறை ஹழ்ரத் அபு உமாமா (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்திருந்ததை பார்த்த நாயகம் ஸல் அவர்கள் என்ன அபு உமாமாவே தொழுகை அல்லாத நேரத்தில் பள்ளி வாசலில் இருக்குறீர்களே என்று கேட்ட போது என்னுடைய கடனும் கவலையும் தான் தான் என்னை பள்ளி வாசலில் அமரவைத்து விட்டது என்று பதில் சொன்னார்கள்.உடனே நாயகம் ஒரு அற்புதமான துஆவை சொல்லிகொடுத்து ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் அதை ஒத சொன்னார்கள்.
அந்த துஆ
اللهم إني أعوذ بك من الهم و الحزن و أعوذ بك من العجز و الكسل و أعوذ بك من الجبن
அந்த துஆவை தொடர்ந்து ஓதிவந்த ஹழ்ரத் அபு உமாமா (ரலி) அவர்கள் சில காலங்களிலேயே அவர்களின் கடனும் கவலையும் நீங்கியதாக அறிவிக்கும் ஹதீஸ் மிஷ்காத்தில் பதிவாகி இருக்கிறது.
இது போன்று சஹாபாகளுக்கு நிறைய துஆகளை நாயகம் கற்று கொடுத்துகொண்டே இருந்தார்கள்.சஹாபாக்களும் தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடத்தில் கேட்டு பெற்றுகொண்டார்கள்.
நபிமார்கள், நபி தோழர்கள் மட்டுமில்லாமல் மக்கள் எப்போதெல்லாம் தன் தேவைகளை இறைவனிடத்தில் கேட்டார்களோ அப்போது இறைவன் மிக அற்புதமாக உதவி செய்திருக்கிறான்.
துஆவினால் ஏற்பட்ட பலன்கள்:
ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் ஜெருசலத்தை ஐரோப்பியர்கள் கைபற்றிகொண்டு சுமார் 90 வருடங்கள் ஜும்மா விற்கு கூட அனுமதிக்காமல் முஸ்லிம்களை சித்திரவதை செய்தார்கள். சுமார் 38.000 முஸ்லிம்களை கொன்றார்கள்,சிறு பிள்ளைகளின் கால்களை பிடித்து சுவரில் அடித்து கொன்றார்கள்,அப்போதுதான் ஹழ்ரத் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் தலைமையில் சிலுவை யுத்தம் நடந்தது. சிலுவை யுத்தத்திற்கு முந்தைய இரவு இஷா தொழுகையை முடித்துவிட்டு மறுநாள் ஃபஜர் தொழுகைவரை சஜ்தாவிளிருந்து ஹழ்ரத் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் துஆ செய்தார்கள். ஃபஜர் தொழுகை முடிந்தவுடன் வீதியில் நடந்து வரும்போது ஒரு பெரியவரை பார்த்து ஹழ்ரத் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் நடக்கவிருக்கும் யுத்தத்தில் ஐரோப்பியர்களுக்கு உதவி செய்ய மிகப்பெரும் நேவி கப்பலில் ஆயுதங்கள் வரும் செய்தி கிடைத்ததா? என்று கேட்க ஆம் ஸலாஹுத்தீன் கிடைத்தது இருந்தாலும் நேற்றிரவு நீங்கள் வடித்த கண்ணீர் அந்த கப்பல் ஆயுதங்களோடு மூழ்கடிக்கப்பட்டது என்று சொல்லி மூன்று நாட்களில் அந்த கப்பலும் கவிழ்ந்தது ஜெருசலமும் வெற்றிகொள்ளப்பட்டது. (பார்க்க:பாலஸ்தீன வரலாறு தமிழ் புத்தகம்)
இது போன்ற பல வரலாறுகள் துஆவின் மூலம் நிகழ்ந்திருக்கிறது.
1998 ல் பாகிஸ்தானில் முதல் முறையாக ஏவுகணையை விட படோகிஸ்தானில் ஷாஹி என்ற இடத்தில் 150 விஞ்ஞானிகள் தயாராக இருக்கும் போது திடிரென்று பாலைவன புயல் காற்று வீசியது அப்போது அந்த விஞ்ஞானிகளின் தலைவர் டாக்டர் முபாரக் என்பவர் சிறிது நேரம் துஆவில் அமர்ந்தார் சுற்றி இருந்த விஞ்ஞானிகளெல்லாம் கேலி செய்யும் அளவு துஆ செய்தார் 10 நிமிடத்தில் அந்த புயல் சரியாகி ஏவுகணையை சரியான நேரத்தில் விண்ணில் செலுத்தினார்கள் என்று 20:05:1998 ல் இங்கிலாந்திலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.
எனவே துஆ என்பது நபிமார்களுக்கும், நபி தோழர்களுக்கும், நல்லடியார்களுக்கும் எப்படி பயனளித்ததோ அதே போன்று நாமும் பிராத்தித்தால் பயனளிக்கும். ஆனால் நாம் துஆவை முழு நம்பிக்கையோடு கேட்கவேண்டும்.
துஆவினால் மூன்று பலன்கள் கண்டிப்பாக ஏற்படும் என்று நாயகம் சொல்லியிருக்கிறார்கள்.
1.நாம் கேட்டதையே அல்லாஹ் கொடுத்துவிடுவான்.
2.நமக்கு வரவிருந்த ஆபத்துகளை நீக்கிவிடுவான்.
3.மறுமையில் முழுமையான கூலியை தருவான்.
இந்த நம்பிக்கையோடு நம் துஆக்கள் அமைய வேண்டும்.
ஹழ்ரத் மூஸா அலை அவர்கள் ஃபிர்அவ்னை அழிப்பதற்காக துஆ செய்து 40 வருடங்களுக்கு பிறகு தான் அல்லாஹ் ஃபிர்அவ்னை அழித்தான்.
எனவே நாம் அஸரில் துஆ கேட்டுவிட்டு மகரிபில் என் துஆ கபூலாகவில்லை என்று புலம்பக்கூடாது.முழு நண்பிகையோடு துஆ செய்ய வேண்டும்.
அதேபோல ஹராமை விட்டு முழுமையாக ஒதுங்கி இருக்க வேண்டும். உணவிலோ,உடையிலோ,உடலிலோ நம் சம்பாத்தியத்திலோ ஹராம் கலந்து விட்டால் நம் துஆ கபூலாகாது.
இன்று இஸ்லாமிய சமூகம் உலக முழுக்க பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது.தேவை இல்லாமல் பல அவ பெயர்களை சுமந்துகொண்டு வாழ்கிறது.எங்கு பார்த்தாலும் கடன், எங்கு பார்த்தாலும் கஷ்டம்,எங்கு பார்த்தாலும் நிம்மதியின்மை இப்படி எல்லா முஸ்லிம்களும் ஒரு வித மன அழுத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் எனவே இவைகள் அனைத்திலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற நாம் செய்து விட்ட பாவங்களுக்காக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு அதிகம் அதிகம் துஆ செய்ய வேண்டும்.
வல்லோன் அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து முஸ்லிம்கள் இழந்து தவிக்கும் சிறப்புகளை, கண்ணியங்களை,மாண்புகளை நம் துஆவின் மூலம் கிடைக்க செய்வானாக ஆமீன்.
Comments
Post a Comment