அலட்சியமாக கருதப்படும் பாவங்கள் தெடர் - 2 விபச்சாரம்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு)
அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே! நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை குருப்பில் மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள் வெளியிட்ட இந்த வார கட்டுரை.
அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல்,பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும்.இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.
விபச்சாரம் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும்.
இஸ்லாம் விபச்சாரத்தை மட்டுமின்றி அதற்குத் தூண்டுதல் வழங்குகின்ற
அனைத்தையும் விலக்கியுள்ளது., ஓர் ஆண் அந்நிய பெண் ணுடன் அல்லது ஒரு பெண்
அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள்-பெண்கள் சுதந்திர மாகப் பழகுதல்
ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப்
படைப்புக்கள், கெட்ட பார்வை, (திருமணத்திற்கு முன்னர்) காதல் போன்றவற்
றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. விபச்சாரத்தை ஆகக் கொடிய தண்டனை
வழங்கப்பட வேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது..
விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்!
(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்; அது
மானக் கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்)
தீயவழியாகவும் இருக்கின்றது. (17:32)
மதுபானத்தை ஹராமாக்கிய இஸ்லாம் நீங்கள் மதுபானம் குடிக்காதீர்கள்
என்றுதான் கூறியது.
வட்டியை ஹராமாக்கிய இஸ்லாம் நீங்கள் வட்டி வாங்காதீர்கள்,
கொடுக்காதீர்கள் என்றுதான் கூறியது.
ஆனால், விபச்சாரத்தை ஹராமாக்கிய இஸ்லாம் அதனை நீங்கள் செய்யாதீர்கள்
என்று மாத்திரம் கூறவில்லை மாற்றமாக அந்த விபச்சாரத்தின் பக்கம்
நெருங்கக்கூட வேண்டாம் என்று கூறுகிறது.
விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப்
பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி
அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.
கணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால்
சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ,பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது
விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி
கடைசியில் எதை விபச்சாரம் என்று இறைவன் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும்
விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப்
பார்க்கிறோம்.
அதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே! அப்படி நெருங்குவது
அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.
இறைவன் மனிதர்களை நோக்கி “விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறுவதற்குப்
பதில் ’விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்’ என்று விலக்கியிருப்பது
எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘நெருப்பைத்
தொடாதே!’ என்பதை விட ‘நெருப்பின் பக்கமே நெருங்காதே!’ என்றுரைப்பது வலிவு
மிக்கதல்லவா? வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல்
‘விபச்சாரம்’ எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்’ என்று மட்டும் இஸ்லாம்
கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான ‘ஆசைப்பார்வை’ எனும்
சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘விபச்சாரம்
நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக
இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக
விலக்கப்பட்டிருக்கிறது.
"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும்,
பாவத்தையும்,நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த
ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும்,
நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என்
இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன்
7:33)
இந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய
விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது
நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண
காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப்
பேசிவிட்டு,நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர்.
விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லையாயினும் விபச்சாரத்திற்கு நெருங்கி
விட்டார்கள்.
இன்று மிம்பர்களில் விபச்சாரத்தைப் பற்றிப் பேசவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கிறது?
இன்று முஸ்லிம்ளிடமும் அருவருக்கத்தக்க விபச்சாரம் மேடையேறிக் கொண்டிருக்கிறது.-
சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும்
ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் ‘செல்போன்’ மூலம்
வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி
கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. ‘இன்டர்நெட்’ மூலம்
வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது
விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத்
தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
விபச்சாரம் என்பது இன்றுவாழும் சமூகத்தையும் அதன் தலைமுறைகளையும்
சீர்கெடுக்கும் கொடிய பாவம். அதில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான
தண்டனைகள் காத்திருக்கின்றன. இவ்வுலகில் யாராவது இதைச் செய்து இதன்
பாவத்தைக் கழுவிக் களைய விரும்பினால் கசையடி, கல்லெறி தண்டனை போன்றவைகளை
எதிர்கொண்டாலே முடியும் என்னும் அளவிற்கு இறைவனின் பார்வையில் இது
மிகவும் கொடிய பாவமாகும்.
அந்த விபச்சாரத்தை நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா?
உங்களை நீங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்....
= சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து
ஆடுகிற காட்சிகளை நீங்கள் பார்ப்பதுண்டா?
= சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாச செய்திகள், விளம்பரங்கள்
உங்கள் கவனத்தை ஈர்ப்பதுண்டா?
= இரட்டை அர்த்தமுள்ளதும் இல்லாததுமான சினிமா பாடல்கள் உங்கள் காதுக்கு
மகிழ்ச்சி அளிப்பதுண்டா?
= உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் மேற்கண்டவாறு உள்ள பாடல்களையும் உடல்
சேட்டைகளையும் காட்சிகளையும் குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றாக அமர்ந்து
ரசிக்கின்றீர்களா?
‘உண்டு’ என்பது உங்கள் பதிலானால்... விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு
படியில் கால்வைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே
செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது?என்று அதற்குரிய முயற்சியில்
இறங்கிவிட மனம் முயலும். ஷைத்தான் அதற்கான நியாயங்களையும் கற்பித்து
உங்களை கவிழ்த்துவிடவும் வாய்ப்புண்டு!
முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத்
தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம்
மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது
எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி
முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின்
மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் இதைக் கூட்டாக குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பார்க்கும்போது
அதற்கு அங்கு அங்கீகாரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும்
கவனியுங்கள்.
= இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்:
''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால்
மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும்.
அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது
இறைநம்பிக்கையின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:
மஹ்ரமில்லாத ஆண்களோடு பெண்களும் மஹ்ரமில்லாத பெண்களோடு ஆண்களும்
நெருங்கிப் பழகும் சூழல்.
இறையச்சக் குறைவு.
.அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
உடலை காட்டுவதும், பார்ப்பதும்
பெண்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவது
நீண்ட காலப் பிரிவு, தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது.
மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து
கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.
இல்லற சுகத்தில் ஏமாற்றம்.. என இன்னும் பல....
அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் -சுதந்திரமாகப் பழகுதல்
இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத
நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால்
அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.'' (அஹ்மத்)

''உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க
வேண்டாம்.'' (புகாரி, முஸ்லிம்)
வேண்டாம்.'' (புகாரி, முஸ்லிம்)
குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய
உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை
நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க
ஸஹீஹுல் புகாரி)
இறையச்சம் –
தக்வா என்பது ஓர்இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில்உயிரோடும், உணர்வோடும்
இரண்டறக்கலந்திருக்க வேண்டிய ஓர் உயரிய அம்சமாகும்.
இறையச்சம் என்கிற இந்த அம்சம் தான்”நாம் யார்?” என்பதை அல்லாஹ்வின்
திருமுன்அடையாளப்படுத்தும் ஆதாரமாகும்.
ஓர் இறைநம்பிக்கையாளனின் ஈருலகவாழ்க்கையின் வெற்றி,
தோல்விகளைதீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுவதும் இந்தஇறையச்சம் தான்.
அல்லாஹ் தன் திருமறையில் சுமார் 258இடங்களில் தக்வா குறித்து பல்வேறு
வாசகவடிவில் குறிப்பிடுகின்றான். அதிலும் குறிப்பாக,சுமார் 70 இடங்களில்
”நீங்கள் அல்லாஹ்வைப்பயந்து வாழுங்கள்” என்பதாக முஃமின்களைநோக்கி
நேரடியாக ஆணை பிறப்பிக்கின்றான்.
இந்த ஆணைகளின் மூலம் ”வணக்கவழிபாடு, சமூக, பொருளாதார, தனிமனிதவாழ்க்கை,
இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை,நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல்
வாங்கல் எனமனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறஅத்துனை துறைகளிலும்
இறையச்சம் நிச்சயம்இடம் பெற்றிருக்க வேண்டும்” என
அல்லாஹ்வலியுறுத்துகின்றான்.
”இறைவனிடம் நெருக்கத்தைப் பெற்றுத்தருகிற நன்மையான செயல்களில்
ஈடுபடும்போதும் தக்வா இடம் பெற்றிருக்க வேண்டும்.இறை நெருக்கத்தை
விட்டும் தூரமாக்குகிறபாவமான குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கும்போதும்
தக்வா இடம் பெற்றிருக்க வேண்டும்”எனவும் இஸ்லாம் இயம்புகின்றது.
அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும்
ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை
தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது.
(பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)
''அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர்.
முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.'' (அஹ்மத்,
அபூதாவூத்)
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ்
கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம்
பார்வையாகும்.'' (புகாரி)
உடலை காட்டுவதும், பார்ப்பதும்
உடலை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை
என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது
பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக
விளக்குகின்றது.
தேவைக்காக வெளியே வரும்போது கூட- அந்நியர்கள் உங்களால் ஈர்க்கப்படும்
எந்த செயல்பாடுகளிலிருந்தும் உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
என்கிறது.
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு
தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். அல்குர்ஆன் 24:31
ஆடவர்களை திரும்பிப்பார்க்க வைக்கிற நடையே ஆபத்து என்றால்,அடுத்தவர்களை
சுண்டி இழுக்கிற ஆடைகளை என்ன சொல்வது?
பெண்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவது
ஒரு பெண் அவசியத்தேவையின்றி வெளியே வருவதை கண்டிக்கும் அல்குர்ஆன்-
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில்
(பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.-
(அல்குர்ஆன் 33:33)
ஒரு பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். அவள் வீட்டை விட்டு வெளியேறி
விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்' எனக் கூறிய நபி ஸல், அவர்கள்
'கண்களும் விபச்சாரம் செய்கின்றன' எனவே பெண்கள் கண்களை தாழ்த்திக்
கொள்ளுங்கள் என்கிறார்கள்.
"பாவங்களில் பெரும்பாலானவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய
உணர்வுகள் ஏற்பட்டு ஆண்கள் பெண்கள் பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே ‘பார்வையை தாழ்த்தி
கற்பைக் காத்துக் கொள்ளவும்’ என்று ஒவ்வொரு இஸ்லாமியப் ஆணுக்கும்
பெண்ணுக்கும் நபி ஸல், அவர்களால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது."
தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு
மணமுடித்தலின் நோக்கம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சட்ட ரீதியாக பரஸ்பரம்
இல்லற சுகம் அடைவதும் அதன் மூலம் மழலைச் செல்வங்களைப் பெறுவதும் ஆகும்.
இல்லறத்தில் இணைந்த தம்பதியரிடையே தாம்பத்திய சுகத்தைப் பறிமாறிக் கொள்ள
முடியவில்லையெனில் அவர்கள் மணமுடித்துக் கொண்டது அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் இருவரும் தாம்பத்திய சுகத்தைப் பெறுவதில்
பொதுவாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வெளியூர் செல்லும் கணவன், ஒரு
குறிப்பிட்டக் காலத்திற்குள் திரும்புவதாகக் கூறி, மனைவியின்
சம்மதத்துடன் செல்வது. திருமண உறவை ஒப்பந்த உறவாக இஸ்லாம்
அறிவித்திருப்பதால், கணவனிடமிருந்து பெறும் தாம்பத்திய சுகம்
எப்போதெல்லாம் தனக்கு வேண்டும் என்பதையும் மனைவி தீர்மானிக்கலாம். நீண்ட
காலம் கணவனைப் பிரியமுடியாது எனக் கருதும் மனைவி, கணவன் தன்னை நீண்ட
நாள்கள் பிரிந்து செல்வதைத் தாராளமாகத் தடுத்து நிறுத்தலாம். இதற்கான
உரிமை தம்பதியர் இருவருக்கும் உள்ளது!
ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு அல்லது இதைவிட அதிகமான காலம் கணவன் மனைவி
பிரிந்திருக்க நேரிடும் என்ற நிலை ஏற்படின் இதைத் தெரிந்து தம்பதியர்
இருவரும் சம்மதித்தப் பின்னரே ஒருவரையொருவர் பிரிவது
மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு இல்லற சுகம்
இல்லற சுகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மிகத்
தேவையானதாகும். இல்லற சுகத்தில் முன்விளையாட்டு இல்வாழ்வின்
பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகவும் விளங்குகிறது. எனவே எத் தம்பதியரும்
முன்விளையாட்டை அலட்சியப்படுத்த வேண்டாம்.
தம்பதியர் இருவருக்கும் முன்விளையாட்டு முக்கியமானது என்றபோதிலும், கணவன்
உடலுறவுக்குமுன் தன் மனைவிக்கு கிளர்ச்சியூட்டுவது அதிக முக்கியத்துவம்
வாய்ந்தது. பெண்கள் பொதுவாக பாலியல் கிளர்ச்சியடைவதற்கு ஆண்களைவிட
கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால், அவள் தயாராக இல்லாதபோது கணவன்
உடலுறவு கொள்வானெனில், அவனுடைய தேவை பெயருக்கு நிறைவடையலாமே தவிர, அவள்
நிறைவடைய மாட்டாள். இதன் விளைவாக, மனைவிக்கு அதிருப்தியும் ஏமாற்றமும்
ஏற்பட்டு மணவாழ்விற்கே குந்தகம் ஏற்படலாம். தம்பதியர் இருவருக்கும்
முன்விளையாட்டு முக்கியமானது என்றபோதிலும், கணவன் உடலுறவுக்கு முன் தன்
மனைவிக்கு கிளர்ச்சியூட்டுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள்
பொதுவாக பாலியல் கிளர்ச்சியடைவதற்கு ஆண்களைவிட கூடுதல் நேரம் பிடிக்கும்
என்பதால், அவள் தயாராக இல்லாதபோது கணவன் உடலுறவு கொள்வானெனில், அவனுடைய
தேவை பெயருக்கு நிறைவடையலாமே தவிர, அவள் நிறைவடைய மாட்டாள். இதன்
விளைவாக, மனைவிக்கு அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டு மணவாழ்விற்கே
குந்தகம் ஏற்படலாம்.

முன்விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்து அவளும்
ஆயத்தமாகவும், தயார்நிலைக்கு வந்த பிறகுதான் உடலுறவில் ஈடுபட வேண்டும்.
கணவன் தன் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மனைவியை
அதிருப்தியிலும் நிறைவின்மையிலும் விட்டுவிடுவது, அவனுடைய தன்னலத்தையும்
ஆணவத்தையும் தான் காட்டும். இதுபோன்ற கணவன்மார்கள் உண்மையில் தங்கள்
மனைவிமார்களை உண்மையாக நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள்
இச்சையை தீர்த்துக்கொள்வதிலேயே அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள்.

இமாம் திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லும் ஒரு அறிவிப்புத் தொடர் மூலம், நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார்கள்;

"ஒரு முஸ்லிம் விளையாடும் எல்ல விளையாட்டுக்களும் வீணானவையே -
அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன்
விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள். (ஆதாரம்:
ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433).

பல விளையாட்டுக்களை வீணானவை என்று சொல்லும் மார்க்கம் மனைவியுடன்
விளையாடுவதை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை ஊக்குவிக்கவும் செய்கிறது
என்பதை அறியும்போது தாம்பத்ய வாழ்க்கையை செழித்தோங்கச்செய்யும் அத்தனை
வாசல்களையும் இஸ்லாம் திறந்து விட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ!.

புகழ்பெற்ற சட்டமேதை இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
குறிப்பிடும் ஒரு வாசகத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "நீர் அனுபவிக்கும் ஆசையை அவளும்
அனுபவிக்கும் வரை புணர்ச்சியைத் தொடங்காதீர். ஏனெனில், அவளுடைய ஆசை
நிறைவேறுமுன் உம்முடைய ஆசை நிறைவேறிவிடக்கூடும்." (ஆதாரம்:
அல்-முக்னீ :136)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை
அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும்.
"அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட
முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி
ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன்
பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)
விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும்
நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்'
(புகாரி, முஸ்லிம்)
''விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள்
இருக்கின்றன. அவையாவன:
1.முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2.வருமானத்தை அறுத்துவிடும்
3.ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4.நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தப்ராணி)
எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக்
கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை
அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழு
சமூக வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான
பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத்
தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த
தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின்
பேரருளாகும்.
விபச்சாரம் செய்வதால் மனைவி அல்லது கணவன் உளரீதியாக பாதிக்கப் பட்டு
அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழி பிறக்கும். இத்தகைய
நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு
பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு
சின்னாபின்னமாகி விடும்
இவை தவிர, முறைகேடான பாலியல் உறவு களால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்று
கின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய்
முதலான பல் வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை
அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன.
இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் விளைவு
முறைகேடான பாலியல் உறவுகள் என்பதை அறியாதவர் எவரும் இல்லை. மன நோய்கள்
உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று
நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம்
முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடை செய்துள்ளது.
கற்பில் கவனம் தேவை
ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம்
கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே
ஒழுக்கமான வாழ்வு!” என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு ‘கற்பு’
என்று பெயர்.
‘கற்பு’ எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல்
பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. ‘கற்பு’ எனும்
மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை.
இருபாலரின் பொதுவுடைமையாகும். எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை
நோக்கி, “(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து)
காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!”
(குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப்
பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை
(கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள
ஆண்களை நோக்கிக் கூறுவீராக!” என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், “தம்
மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும் (குர்ஆன் 33:35)
அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும்
பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.’ (குர்ஆன் 24:31)
என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச்
சொல்லவில்லை.
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு
விட்டால் மட்டும் ‘பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என உலகம் பேசுகிறதே தவிர
அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள
இணங்கும்போது ‘அவள் கற்பழிக்கப்பட்டாள்’ என் யாரும் குறிப்பிடுவதில்லை.
கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின்
இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன?
மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு
அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, ‘ஆண் கற்பழிக்கப்பட்டான்’ என்றும்
சொல்வதில்லையே !
கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக்
கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன்
மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை
அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது. இவ்வாறு கற்பை
இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர்.
திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர்
‘காதல்’ எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய
அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த
கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான
கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.
.ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப்
பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில்
வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது’ என்றார்கள். ‘இதற்குப்
பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள்
‘உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!’
என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும்
கேட்டதும், நபியவர்கள் அவரை ‘உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர்
விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!’ என்று பதிலளித்தார்கள். அந்நேரம்
அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின்
நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள்.
(கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை
செய்ய மாட்டார்கள்.’ விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்’ எனும் திருவசனத்தை
(குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ,
முஸ்லிம்) அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்)
அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான
விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும்
கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில்
அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால்
தகர்த்தப்படுகிறது.
கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில்
ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர்
சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு
சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5)
உணர்த்துகிறது. ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும்
இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக்
கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப்
பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்” எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி,
புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில்
பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எனவே இம்மையின் அற்ப
ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க
நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட
முனைவோம்.
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள்.
அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல
மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச்
சந்திப்பான். (அல்குர்ஆன் 25:68)
ஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு
ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.
ஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும்
நமக்கு எச்சரித்துள்ளார்கள். அவரது வாழ்நாளில் அவருக்கு மறுமையில்
நரகத்தின் காட்சிகள் காட்டப்பட்டன. அதை இவ்வாறு நமக்கு விளக்குகிறார்கள்:
நேற்றிரவு கனவு கண்டீர்களா? என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்டார்கள்.
நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள், “நான் நேற்று இரவு
ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம்
நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய
செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு
காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரித்தார்கள்.
...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம்
குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ்
நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப்
பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி
குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய
(கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும்
நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் "இவர்கள் யார்?' எனக் கேட்டேன்.....
"அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்''என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ்
சுருக்கம்)
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி),நூல்: புகாரி 1386
(இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும்
பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.)
சட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள்
பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே
சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும்.
அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும்
நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம்
கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை
வர்ணிக்கிறார்கள்..
எனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய
வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக
இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள்.
விபசாரியும், விபசாரனும்-இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி
அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும்
நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை
நிறைவேற்றுவ)தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம்;
இன்னும், அவ்விருவரின் வேதனையையும் நம்பிக்கை யாளர்களில் ஒரு கூட்டத்தார்
(நேரில்) பார்க்கட்டும். (24:2)
இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம்,
மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு
புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.
திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன்
பின்வருமாறு விளக்குகின்றது
''நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே
உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும்
கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில்
உள்ளதாகும்.'' (30:21)
மன நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு வாழ வல்ல ரஹ்மான் உங்களுக்கும், எனக்கும்
துணை புரிவானாக!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Comments
Post a Comment