குற்றம் இல்லா தேசம்

                                       

இன்று தமிழகத்தில் மிக அதிகமாக நடந்து கொண்டிருப்பது கொலை,கொள்ளை குறிப்பாக நாடு முழுக்க நடக்கும் கொடூரம் பெண்களை கற்பழிப்பது. மூன்று வயது பெண்  குழந்தையையும் கற்பழிக்கிறார்கள் முதுமை அடைந்த பெண்களையும் கற்பழிக்கிறார்கள். தினமும்செய்தி தாள்களிலும், மீடியாக்களிலும் நாம் மனம் நொந்து படித்து கொண்டும், பார்த்து கொண்டும் இருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் இந்த கொடுமை நடந்து கொண்டு இருப்பதையும் மீடியாக்கள் அதை மோசமான வார்த்தைகளால் சித்தரிப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இந்த அனைத்து கற்பழிப்புகளும் மக்களுக்கு தெரிந்திருந்தும் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பை மட்டும் உலக அரங்கில் பேசவைத்து டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த காரணம் என்ன?

மாணவர்களின் ஆர்பாட்டங்கள் , முற்றுகைகள் , அரசியல்வாதிகளின் போராட்டங்கள், அண்ணாஹசாரேவின் போராட்டம் ஒரு  பக்கம் வழக்கம் போல ராம்தேவின் ஆக்டிங் 
ஒரு  பக்கம் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு போலீஸ்காரரின் உயிர் பிரிய காரணமாக இருந்திருக்கிறது.


ஒரு கால் இதுவும் கூட அரசியல் வாதிகளின் நாடகமோ என்று நினைக்க தோன்றுகிறது.

மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றி நேர்மையான அதிகாரி ஹேமன்கர்கரேயை கொன்றது போல் இப்படி ஒரு கற்பழிப்பிற்கான போராட்டங்களை அரங்கேற்றி எதையோ செய்ய நினைகிறார்களோ என்ற  எண்ணம் தோன்றுகிறது. ஏன் என்றால்? இந்தியா முழுக்க கற்பழிப்புகள் தினமும் நடந்து கொண்டிருக்க ஏன்? டெல்லியில் மட்டும் ஆர்பாட்டங்கள்.

இதிலே கொடுமை என்னவென்றால் எப்போதுமே எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் அமேரிக்காவும் கருத்து சொல்லியிருப்பது தான்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பட்ரிக் வென்ட்ரலின் கருத்து -

 
 "சமீபத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக டில்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன; இது போன்று இந்தியாவில் பல சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது; பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தாரின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்; பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் போராட வேண்டும் என்பதையும், உடனடியாக கடுமையான நடவடிக்கை தேவை என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது"
                                                                                                      இந்தஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நாம் தடுக்கவோ எதிர்க்கவோஇல்லை.எல்லோரிடத்திலும் சமமாக  நடக்க சொல்கிறோம்.

இஸ்லாம் என்றுமே தவறு செய்தவனை தண்டிக்க வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. அதே நேரத்தில் எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்ள சொல்கிறது.

மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்த அந்த கொடூறர்கள் நீதி மன்றத்தில் நாங்கள் போதையில் கொடுமையான தவறை செய்து விட்டோம் எங்களை தூக்கிலிடுங்கள் என்று கதறி இருக்கிறார்கள்.

இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் சிறிதளவும் மாற்று கருத்து இல்லை.

ஆனால் நம்முடைய கேள்விகளெல்லாம் ஒரு குடிபோதையில் தவறிழைத்த குற்றவாளிகளை தண்டிப்பதில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்,அரசியல்வாதிகள்,அமெரிக்கா  போன்ற நியாயவான்கள் பொது மக்கள் சிந்திக்க வேண்டும் சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்திலே நல்ல திடகாத்திரமுள்ள  எந்த போதையிலும் இல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற ஒரே போதையில் மூழ்கி  கூட்டம்,கூட்டமாக முஸ்லிம் பெண்களை கற்பழித்த அந்த அயோக்கியர்களை எதிர்த்து யாரும் குறள் கொடுக்க வில்லையே என்பது தான் நமக்கு மனவேதனை.

இன்று வரை  முழு உலகில் முஸ்லிம் சமுதாயம்  எல்லா விஷயத்திலும் பாதிக்க பட்டிருக்கிறது.  இது எல்லோருக்கும்    தெரிந்ததுதான்.அது பற்றி எந்த கருத்தும் யாருமே சொல்வதில்லை.

சரி இந்த குற்றங்களை இல்லாமல் ஆக்க என்ன வழி?

சம்பவங்கள்:

1.ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது 
  ஒரு முறை  சந்தைக்கு சென்று ஒரு குதிரையை வாங்க விலை பேசி ஓட்டி  பார்க்க அனுமதி பெற்று ஓட்டி  சென்றார்கள். அந்த குதிரை போகும் போது நன்றாக போனது வரும் போது நொண்டிக்கொண்டு வந்தது இதை குதிரை விற்பவரிடம் சொன்ன போது அவர் நான் உங்களிடம் கொடுக்கும் போது நல்ல குதிரையை  கொடுத்தேன் நீங்கள் என்னிடம் நொண்டி குதிரையை தருகிறீர்கள் எனக்கு இந்த நொண்டி குதிரை வேண்டாம். ஒன்று நான் கொடுத்த நல்ல குதிரையை கொடுங்கள் அல்லது குதிரைக்கான கிரயத்தை கொடுங்கள் என்று கேட்க் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் எவ்வளவு பேசியும் குதிரையை விற்பவர்  கேட்காதுபோது . ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் பகுதியின் நீதிபதியான (காஜி அபு ஷுரைஹ் ரலி )அவர்களிடம்  வாதம் வந்தது. எல்லோரையும் சமமாக பார்க்கும் அந்த ஆட்சியில் ஜனாதிபதி குற்றவாளி  கூண்டில் நின்று நடந்ததை நீதிபதியிடம் சொன்னார்கள் குதிரை வியாபாரியும் தன் தத்துவார்த்தமான வாதத்தை வைத்தார் பல கோணத்தில் நீதிபதியும் அலசி பார்த்து விட்டு ஹழ்ரத் உமர் (ரலி)அவர்களை உமரே நான் பல கோணத்தில் பார்த்து விட்டேன் வேறு வழியே இல்லை எனவே நொண்டி குதிரையை வைத்து கொண்டு பணத்தை கொடுங்கள் என்று தீர்ப்பு கூறினார் . அதே குற்றவாளி கூண்டில் நின்று கொண்டே ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் இதுவல்லவா தீர்ப்பு எங்கே நீங்கள்  எனக்கு பயந்து கொண்டு எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி விடுவீர்களோ என்று பயந்தேன் ஆனால் நியாயமான தீர்ப்பை வழங்கி இருக்கிறீர் இன்று முதல் கூஃபாவின்  தலைமை நீதிபதியாக உம்மை ஆக்குகிறேன் என்று  பதவி உயர்வு  செய்தார்கள் என்பது வரலாறு...
2.ஹழ்ரத் அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கவர்னராக இருந்த பகுதியில் ஒரு நாள்   கிறிஸ்துவர்கள் வணங்க கூடிய சிலை ஒன்றின் மூக்கு உடைக்க பட்டிருந்தது இதை கவர்னரிடம் முறையிட்டு சிலையின் மூக்கை உடைத்தது  யார் என்று கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு மக்கள் கேட்டு கொண்டார்கள் குறித்த நாளில் கண்டு பிடிக்க முடியாததால் மக்கள் ஆவேசம் அடைந்தார்கள். உடனே ஹழ்ரத் 
அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் மக்களை பார்த்து நீங்கள் கோபப்படாதிர்கள்  குற்றவாலளியை கண்டு பிடிக்காதது  என் தவறுதான் அதற்கு பகரமாக என் மூக்கை அறுத்து கொள்ளுங்கள் என்று தன் மூக்கை  அறுக்க முன்வந்தார்கள் இதை பார்த்து கொண்டிருந்த குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியின் நீதத்தை பார்த்து வியந்து போய் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்...

3.பெருமானாரின் காலத்தில்  அம்ர் இப்னு சமுரா (ரலி) என்ற சஹாபி ஒரு ஒட்டகத்தை  திருடி விட்டார்கள் பிறகு தவறை உணர்ந்து பெருமானாரிடம் வந்து நான் திருடிவிட்டேன் 
என் மீது அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று கேட்க! அவர்கள் செய்த தவறு ஊர்ஜீதமான பிறகு பெருமானார் அவர்களின் கையை வெட்டும் படி உத்தரவிட்டார்கள். 
 அம்ர் இப்னு சமுரா (ரலி) அவர்களின் கை வெட்டப்பட்டது . வெட்டி தொங்கி கொண்டிருந்த கையை பார்த்து  அம்ர் இப்னு சமுரா (ரலி) அவர்கள் ஓ திருட்டு கையே உன்னை விட்டு என்னை பரிசுத்தப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று சொல்லி விட்டு உன்னை மட்டும் நான் துண்டிக்காவிட்டால் நீ என் முழு உடலையும் நரகத்திற்கு இழுத்து சென்றிருப்பாய் ஆனால் நான் உன்னை மட்டும் வெட்டி விட்டு என் உடலை பாதுகாத்து கொண்டேன் என்று சொன்னார்கள்...


முதல் இரண்டு சம்பவத்தின் மூலம்  எல்லோருக்கும் சமமான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், மூன்றாவது சம்பவத்தின் மூலம் சரியான தண்டனைகள் வழங்குவதால்
குற்றம் இல்லா தேசம் உருவாக்க முடியும் அதே போல செய்து விட்ட குற்றதிற்கான பரிகாரமும் நமக்கு கிடைக்கும் என்பது விளங்குகிறது.

இதன் மூலம் தான் ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும்,பொது மக்களும், எல்லோருமே  அவரவர்களின் தரப்பில் மிக சரியாக நடந்து கொள்ள முடிந்தது.
யாரிடத்திலும் குற்றமில்லாமல் மிக நேர்மையான சமூகமாக வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்று  தவறுகளுக்கு  கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று எல்லோரும் ஆர்பாட்டங்கள் செய்கிறோம் பல கோணங்களில் போராடுகிறோம்.அதே நேரத்தில் தவறுகளை இல்லாமல் ஆக்க என்ன செய்கிறோம்.

இன்று தவறுகளின் எல்லா வாசல்களையும்  திறந்து வைத்துகொண்டு தண்டனைகள் மட்டும் மிக கடுமையாக வேண்டுமென்றால் அது சாத்தியமில்லாத செயல்.

3 வயது
குழந்தையை 57வயது கிழவன் கற்பழித்திருக்கிறான்,53வயது முதிய பெண்ணை 27வயது வாலிபன் கற்பழித்திருக்கிறான் என்ன காரணம்?
இது போன்று ஒன்று,இரண்டல்ல சொல்லி முடிக்க முடியாதளவு  தினமும் நடந்து கொண்டே இருக்கிறது.

இதோ வரயிருக்கிற  புது வருடத்திற்கு முந்திய இரவு எத்தனை  பெண்கள் கற்பழிக்க படுவார்கள்  பாருங்கள்.இது சாபமல்ல  உண்மை ஒவ்வொரு புது 
வருடத்திற்கு முந்திய இரவிலும் புது வருட கொண்டாட்டம் என்ற பெயரில் பல பெண்கள் கற்பழிக்க படுகிறார்கள்.

இந்த அனைத்து தவறுகளின் ஆணிவேர் எது? இவ்வளவு பெரும் வன் கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடப்பதற்கு காரணம் தான் என்ன?

எல்லோருக்கும் தெரிந்தது தான்.  மது  என்ற மானக்கேடான பானம் தான் இந்த அனைத்து கொடுமைகளுக்கும் காரணம்.
மது அருந்தியவன் தன்னை அறியாமலேயே போதையில் தான் யார் என்று அறியாமல், யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல், என்ன செய்கிறோம் என்று விளங்காமல், இந்த தவறுக்கு என்ன தண்டனை என்று கூட உணர முடியாத நிலையில் பல கொடுமைகளை செய்கிறான்.

நாம் போதையில் தவறு செய்தவனை மிக வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று துடிக்கிறோம். வாஸ்துவமான பேச்சு  தான்.
மது அருந்தியவனை கண்டித்தால் தான் வேறு யாரும் மதுவின் பக்கம் செல்ல மாட்டார்கள்,   மதுவை வெறுக்க  வாய்ப்பு ஏற்படும். 
எனவே மது அருந்தியவனை கண்டிக்க வேண்டும்.

ஆனால் இஸ்லாம் அந்த கொடுமையான செயலை செய்ய வைத்த மதுவை ஒழிக்க சொல்கிறது.

நன்றி உள்ள ஜீவன் என்று அழைக்க படுகிற பிராணியை  கூட யாராவது கல்லால் அடித்தால் கல்லை பார்த்து குறைப்பதில்லை மாறாக யார் அடித்தானோ அவனை பார்த்து தான் குறைக்கிறது. இந்த சாதாரண அறிவு கூடவா  நம்மிடத்தில் இல்லை.

எனவே தவறே  இல்லாமல் ஆக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து போராட வேண்டும்.

மதுவை ஒழித்தால் தான் நம் நாட்டை குற்றமில்லா நாடாக்க முடியும்.

இங்கு கொடுமை என்ன?

மது கடைகளை அரசாங்கம் நடத்துகிறது, மதுவின் வருமானத்தை கொண்டு  மக்களுக்கு சேவைகள் செய்வதாக பெருமை அடிக்கிறது.

மதுவை குடிக்க வைத்து பல குடும்பங்களை அழித்து விட்டு பிறகு யாருக்கு மிக்ஸியையும்,கிரைண்டரையும் கொடுக்க போகிறார்கள் என்று தெரிய வில்லை.

எனவே பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண நிதி கொடுப்பதினாலும்,தவறு செய்தவனை மிக கடுமையாக தண்டிப்பதினாலும் மட்டும் தவறை தடக்க முடியாது.

இந்த இந்திய திரு நாட்டை விட்டு மதுவை ஒழிக்க வேண்டும்.

அதே போல நம் இந்திய திரு நாடு இறையாண்மை நிறைந்த நாடு இந்த நாட்டின் 
இறையாண்மையையும்,  ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பது  ஒவ்வொரு குடி மக்களின்   மீதும் கடமை.

இதற்கு மாற்றமாக மேற்கத்திய கலாச்சாரத்தின் மிக கேவலமான ஆடைகளை நம் நாட்டு பெண்கள் அணிந்து கொண்டு சுற்றுவது, இரவு நேரங்களில் தனியாக தேவை இல்லாமல் வெளியே செல்வது தவறு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

எனவே தான் இஸ்லாம் தவறுகள் நடப்பதற்கு முன்பே அதன் வாயில்களை அடைத்திருக்கிறது.

ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும்,  
யாருடன்பேச வேண்டும்,யாருடன் பேசக்கூடாது, யாருடன் வெளியே செல்ல வேண்டும்  என்று பெண்களின் கண்ணியத்தை  காப்பதற்காக, மிக தெளிவாக இஸ்லாம் சொல்லி கொடுதுள்ளது .

ஆண்களின் பார்வையை  பற்றியும்,பெண்களின் 
ஆடையை பற்றியும் திரு குர்ஆன் சொல்வதை கேளுங்கள் 
(24:30,31)
 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

எவ்வளவு தெளிவான வசனம். ஆண்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும், பெண்களின் ஆடையும் அவர்கள் யாருக்கு முன் அலங்காரம் செய்ய வேண்டும்,அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை பற்றி மிக துல்லியாக விளக்குகிறது.

   மேலும் ,


நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.(33:32)


இந்த வசனத்தின் மூலம் ஒரு பெண் மற்ற ஆண்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது கூட மிகத்துல்லியமாக சொல்லி கொடுக்கிறது.

இது போன்று பெண்களின் உயர்வுக்காக பல வசனங்களை  திரு குர்ஆன் தமக்குள் வைத்திருக்கிறது.

யாருக்கெல்லாம் நம் தாய் திரு நாடு மிக தூய்மையாக இருக்க வேண்டும் என்றும்,குற்றம்  இல்லாத தேசத்தை பார்க்க வேண்டும் என்றும் உண்மையிலேயே  ஆசை இருக்கிறதோ அவர்கள்  தங்கள்  வாழ்கையில் ஒரு முறையாவது புனித குர்ஆனை எடுத்து வாசித்து பார்க்கட்டும் .

எனவே இப்போது நம் நாட்டில் நடக்கின்ற பெண்களுக்கெதிரான குற்றங்களை அகற்ற பெண்களிடம் சீர்திருத்தம் தேவை,பெண்கள் கண்ணியமான ஆடைகளை அணிந்தால் எவனும் அவர்களை சீண்ட முன்வரமாட்டான்.

பெண்கள் பார்க்கவே மிக அருவருப்பான ஆடைகளை அணிவது இந்திய கலாச்சாரத்தின் படியே மிக தவறான செயல். நாம் நாகரீகம் என்று சொல்லி அநாகரீகத்தை கையில் எடுத்து கொண்டோம்.
இது பெரும் குற்றம் என்பதையே நாம் இன்னும் விளங்கவில்லை. எப்போது நம் குற்றங்கள் நமக்கு குற்றமாக தெரிகிறதோ அப்போது தான் அதிலிருந்து மீளும் வாய்ப்பு கிடைக்கும் நமக்கு நம் குற்றங்கள் குற்றமாகவே தெரியாவிட்டால் எங்கிருந்து அதை சரி செய்ய போகிறோம்.

நாமே தவறுகளுக்கு காரணமாக இருந்து கொண்டு தவறு செய்தவனை தண்டிப்பது உகந்ததல்ல.


தவறு செய்தவனை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் அதற்கு முன்பு தவறுகளை களைய வேண்டும்.

 நமது தாய் திரு நாட்டில் மதுவுடைய வாடை கூட இல்லாமல் ஆக்க வேண்டும்.
பெண்களை நாட்டின் கண்களாக மதிக்க அவர்களின் ஆடை அலங்காரம் சீராக வேண்டும்.

இன்று சினமாவும் மக்களை நாசமாக்குகிறது!
சினிமாவில் ஹீரோக்கள் மது அருந்துவது, ஹீரோயின்கள் அரைகுறை ஆடையில் வலம் வருவது, கொலை செய்வது எப்படி?கொள்ளை அடிப்பது எப்படி?போன்ற எல்லா தவறுகளின் அடித்தளமாகவும் சினிமாக்கள் அமைந்திருப்பதால் சினிமாவின் மூலமும் மக்கள் சீர்கெடுகிறார்கள்  எனவே சினிமாக்களையும் அடியோடு  அழிக்க வேண்டும்.  
 
இவைகள் தான் தவறுகளை அழித்து, நன் மக்களை உருவாக்கும் வழியாக இஸ்லாம் சொல்லித்தரும் பாடம்.
இவைகளை சீர்செய்து சரியாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்   








Comments

  1. நல்ல முயற்சி..அருமையான கருத்துக்கள்..தொடரட்டும்..தொய்வு இல்லாமல்

    ReplyDelete
  2. jazakallah hazrath thangalin varugaikum valthukalukkum nandri

    ReplyDelete
  3. குற்றம் இல்லா தேசம் உருவாக்குவோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!