தற்பெருமையும் ஆணவமும்

இஸ்லாம் மனிதனுக்கு வழங்கிய அனைத்து கடமைகளும் “படைத்தவனுக்கு எல்லா
காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பணிந்து வாழ வேண்டும்  எனும்   உயரிய
தத்துவத்தை போதிக்கும்முகமாகவே அமைந்திருக்கின்றன.

மனித வாழ்வில்  ஏற்றத்தாழ்வுகள் இடம்  பெற்றிருப்பது  இன்றியமையாத  ஓர்
அம்சமாகும். சிலரை விட அல்லாஹ் சிலரை சில விஷயங்களின் மூலம் மேன்மை
படுத்தி இருக்கின்றான். சிலருக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ்
வழங்கியிருக்கின்றான். இன்னும் சிலருக்கு கல்வியறிவு,  இன்னும் சிலருக்கு
 செல்வம், இன்னும் சிலருக்கு கௌரவம், அந்தஸ்து இன்னும் சிலருக்கு ஆட்சி,
அதிகாரம் என்று.
இந்த பிரபஞ்சத்தை படைத்து அதில் உயிரினங்களை தோற்றுவித்து அவைகள் உண்டு
புசித்து களைப்பாறுவதற்கு ஏற்றாற்போல் இந்த பூமியை வடிவமைத்துக் கொடுத்த
சர்வ வல்லமை பொறுந்திய இறைவன் ஒருவன் மட்டுமே பெருமைக்குரியவன்;அவனல்லாது
வேறு யாருக்கும் பெருமை வரக் கூடாது என்பதற்காக பெருமை, வல்லமை இரண்டும்
எனக்குரியது அதில் யாரும் போட்டி இடக் கூடாது என்று இறைவன் கூறுவதாகவும்
மீறினால் அதற்கு தண்டனை நரகத்தைத் தவிற வேறில்லை என்று இறைவனின்
இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்து
விட்டார்கள்
தற்பெருமை அற்பமானது; பொற்புடையது அல்ல. எனவே தற்பெருமையை தவிர்க்க
வேண்டும். தற்பெருமையை தவிர்ப்பதால் அற்ப செயல்கள் நம்மை அண்டாது;
வேண்டாத செலவுகளும் ஏற்படாது; விரையத்திற்கு இரையாகாமல் இருக்கலாம்;
வீணான விவகாரங்களிலிருந்தும் விலகிவிடலாம்; வாழ்வும் இலகுவாய் இலங்கும்.
தற்பெருமையால் அழிந்தவர்களின் இழிந்த வரலாற்றை இடித்துறைக்கிறது இறைமறை
குர்ஆன்
பெருமை அல்லாஹ்வுக்கே உரியது: -
5114 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِىُّ حَدَّثَنَا عُمَرُ
بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا الأَعْمَشُ
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ أَبِى مُسْلِمٍ الأَغَرِّ أَنَّهُ
حَدَّثَهُ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ وَأَبِى هُرَيْرَةَ قَالاَ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الْعِزُّ إِزَارُهُ
وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِى عَذَّبْتُهُ  صحيح مسلم
ـ مشكول وموافق للمطبوع - (8 / 35)
”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும்
என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்”
என அல்லாஹ் கூறியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் (5114)
(ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
தன்னிடம் இருப்பதைக் கொண்டு  பெருமை அடைபவர்களை ஒரு போதும்  அல்லாஹ் நேசிப்பதில்லை.
إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ ()

காரூணிடம் அவனுடைய சமூகத்தார் கூறினார்கள்:“உன்னிடம் உள்ள செல்வ வளத்தைக்
கொண்டு நீ பூரித்துவிடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் ஒரு
போதும்நேசிப்பதில்லை”.           ( அல்குர்ஆன்: 28:76 )
இதைப் போன்று நான், எனது, என்னுடையது என பேசியவர்கள்  எவரின் முடிவையும்
அல்லாஹ் அழகானதாய் அமைத்திடவில்லை. ஆதம் நபியினும் உயர்ந்த படைப்பு என்று
தன்னைத் தானே பெருமை படுத்திக்கொண்டு அல்லாஹ் அறிவித்தபடி ஆதம் நபிக்குப்
பணிய மறுத்த இப்லீஸ் இறைவனின் நிரந்தர சாபத்திற்கு ஆளானான்.
قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ()
“ஆதமை விட நான் தான் சிறந்தவன்; என்னை நீநெருப்பால் படைத்தாய்; அவரை நீ
களிமண்ணால் படைத்தாய்”என்று கூறிய ஷைத்தானின் முடிவை அல்லாஹ்
மோசமாய்அமைத்தான். நானே உயர்ந்தவன் என்று இறைவனிடம் தர்க்கம் செய்தக்
காரணத்தால் தான் அவன் மீது இறைவன் கடும் கோபம் கொண்டு சிறுமை அடைந்தவனாக
இங்கிருந்து வெளியேறு என்றுக் கூறி விரட்டினான்.

""பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான். பெருமை உடையோருடன் சாத்தான்
இருக்கிறான்'' என்று இமாம் கஸ்ஸôலி (ரஹ்) கூறுகிறார்
எகிப்தை ஆண்ட அரசன் பிர் அவ்ன் ஆளும் அரசனும் அவனே அகிலத்தைக் காக்கும்
காவலனும் அவனே என்று தற்பெருமையுடன் தருக்கி திரிந்ததால் நைல் நதியில்
மூழ்கடிக்கப்பட்டான். பெருஞ்செல்வத்தால் பெருமை கொண்டு பேராபத்தைத் தேடி
கொண்டவன் காரூன். அவனின் அரண்மனையையும் அத்தனை செல்வங்களையும் மொத்தமாய்
விழுங்கியது பூமி.

وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ
مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ
() أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ
يُبِينُ () فَلَوْلَا أُلْقِيَ عَلَيْهِ أَسْوِرَةٌ مِنْ ذَهَبٍ أَوْ
جَاءَ مَعَهُ الْمَلَائِكَةُ مُقْتَرِنِينَ ()

ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என்மக்களே!  எகிப்தின்
அரசாட்சி  என்னுடையதல்லவா?  இந்த ஆறுகள் எனக்கு கீழேயல்லவா
ஓடிக்கொண்டிருக்கின்றன?  என்ன,உங்களுக்குத் தெரியவில்லையா?  நான்
சிறந்தவனா?  அல்லது கேவலமானவரும் (தன்னுடைய கருத்தை) தெளிவாக
எடுத்துக்கூறவும் இயலாதவருமான இந்த ( மூஸா {அலை}… ) சிறந்தவரா? இவருக்கு
தங்கக்காப்புகள் ஏன் இறக்கித் தரப்படவில்லை?அல்லது வானவர்களின்  குழு
ஒன்று ஏன் இவருடன் வரவில்லை”. ( அல்குர்ஆன்: 43:51 – 53 ) என்று கூறிய
ஃபிர்அவ்னின் முடிவைகேவலமாய் அமைத்தான்.
قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي
காரூண் தன் சமூகத்தாரை நோக்கிக் கூறினான்: “எனக்கு கிடைத்திருக்கின்ற
செல்வ வளங்கள் அனைத்தும் என்னிடமுள்ளஅறிவினால் தான் எனக்குக்
கிடைத்திருக்கின்றன!” ( அல்குர்ஆன்: 28:78)  என்று  கூறிய  காரூணின்
முடிவை  பரிதாபகரமாய் அமைத்தான்.
خَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ
يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ
(81)  [القصص : 81 ، 82]
அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம்.
அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை.
அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தை ஏற்றவர்களைத் தூற்றி துன்புறுத்தி
கொன்று தற்பெருமை செருக்கில் போரிட வந்த அபுஜஹில் முதலிய குறைஷிகள்
பத்ரில் பரிதாபமாக மடிந்தனர்.
.தற்பெருமை வீணான வம்பு சண்டைகளுக்கு வித்தாகும் ""வம்பு சண்டையிடுவோர்
அலலாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றனர்'' என்று அன்னை ஆயிஷா (ரலி)
அறிவிப்பது புகாரியில் பதிவாகியுள்ளது.
"எனக்குத் தெரியும்" என்பதற்கும் "எனக்கு மட்டும்தான் தெரியும்"
என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை,
எதுவும் தெரியாத மனிதனும் இல்லை" என்ற உலக உண்மையை மறந்த மனிதன்தான் இந்த
தற்பெருமை வலையில் விழுந்து அவமானப் படுகிறான்
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி
பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை
சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.”
(ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)
தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!
அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன்
தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ
அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன்
அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
 அணுவளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: -
இறைவன் பெருமையடிப்பவர்கள், கர்வம் கொள்பவர்கள் பற்றி அதிகமான இடங்களில்
தனது திருமறையில் சொல்லுகிறான். அவர்கள் இறைவசனத்தை பொய்ப்பிபதில் பெருமை
கொள்வார்கள். மேலும் அவர்களை தவறின் பால் விட்டுவிடுகின்றான் என்பதற்கு
கீழுள்ள வசனங்கள் தக்க சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து)
பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள்
திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்
அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம்
செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)
وعن ابن مسعود رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل
الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل: : يا رسول الله إن
الرجل يحب أن يكون ثوبه حسنا، ونعله حسنة، فقال: إن الله جميل يحب
الجمال، الكبر بطر الحق، وغمط الناس رواه مسلم ومعنى بطر الحق: دفعه
وغمطهم: احتقارهم،
لا يدخل شىء من الكبر الجنة . قال قائل : يا رسول الله ; إنى أُحِبُّ أن
أَتَجَمَّل بجلاَزِ سَوْطى وشِعْ نَعلىْ . فقال صلى الله تعالى عليه وآله
وسلم : إن ذلك ليس من الكبر إن الله جميل يحب الجمال وإن الكْبِرَ من سفه
الحق وغَمصَ الناس
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”யாருடைய உள்ளத்தில்
அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க
வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார்.
(இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை
என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக
மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ
அறிவிக்கிறார்கள் (ஆதாரம் : முஸ்லிம்)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு
நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக்
கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத்
திரிபவருமாவார்.” . ஹாரிஸா இப்னு வஹப்  رَضِيَ اللَّهُ عَنْهُ
அறிவிக்கிறார்கள்  (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப்
பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில்
பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி) அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ
عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
5469 - حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِى
الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ -صلى الله عليه وسلم- « احْتَجَّتِ النَّارُ وَالْجَنَّةُ
فَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِى الْجَبَّارُونَ وَالْمُتَكَبِّرُونَ.
وَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِى الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ فَقَالَ
اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ أَنْتِ عَذَابِى أُعَذِّبُ بِكِ مَنْ
أَشَاءُ - وَرُبَّمَا قَالَ أُصِيبُ بِكِ مَنْ أَشَاءُ - وَقَالَ
لِهَذِهِ أَنْتِ رَحْمَتِى أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ
وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا . صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8
/ 150)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:நரகமும் சொர்க்கமும்
வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும் ஆணவம்
கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்'' என்று சொன்னது. சொர்க்கம்,
"பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்'' என்று சொன்னது. அப்போது
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், "நீ எனது வேதனை. உன்
மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்'' என்றும்,
சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள்
புரிகிறேன்'' என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), "உங்களில்
ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்க ளிடையே) உள்ளனர்'' என்று சொன்னான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் (5469)
39:72. “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில்
தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக்
கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
அழகிய உபதேசம்.
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம்
முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான
உபதேசமாகும்.
அல்லாஹ்வை மட்டும் வணங்கு,அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே,சகமனிதர்களைப்
பார்த்து முகத்தை திருப்பாதே, பெருமை அடிக்காதே, கர்வம்
கொள்ளாதே,சப்தத்தை உயர்த்தாதே, நடையில் நடுநிலையை பேணு.
இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க
மாட்டான்,மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக்
கூறினார்கள்.
  وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில்
கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ்
விரும்ப மாட்டான். 31:18
 وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ
الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக்
கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும்
அறிவுரை கூறினார்).  31:19
மனிதர்களில் சிலர் இப்படியும் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதை
நன்கறிந்த இறைவன் தன் தூதர் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக
அவர்களின் மகனுக்கு மேற்காணும் அறிவுரைகளை கூறச் செய்து அதை முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளிய இறுதி வேதம்
திருமறைக்குர்ஆனிலும் இடம் பெறச் செய்தான்.
நேர்வழி கிடைக்காது
سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ
بِغَيْرِ الْحَقِّ وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا
وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِنْ
يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ذَلِكَ بِأَنَّهُمْ
كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ (146) [الأعراف :
146(
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும்
திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப
மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள
மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக்
கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை
அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 7:146)
إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ
قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ (22) [النحل : 22]
உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை)
மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.
(அல்குர்ஆன் 16:22)
الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ
كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ وَعِنْدَ الَّذِينَ آمَنُوا كَذَلِكَ
يَطْبَعُ اللَّهُ عَلَى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ (35) [غافر :
35]
அவர்கள் தங்களுக்கு எந்த சான்றும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில்
தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது
பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாகும். இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும்
ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான். (அல்குர்ஆன்
40:35)
ஆணவம் கொள்ளத் தகுதியில்லை
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ
وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا (37) كُلُّ ذَلِكَ كَانَ سَيِّئُهُ
عِنْدَ رَبِّكَ مَكْرُوهًا (38)  [الإسراء : 37 ، 38]
பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின்
உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம்
வெறுக்கப்பட்டதாகும். (அல்குர்ஆன் 17:37,38)
5376 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو
أُسَامَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ
أَخْبَرَنِى عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
-صلى الله عليه وسلم- « يَطْوِى اللَّهُ عَزَّ وَجَلَّ السَّمَوَاتِ
يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى ثُمَّ
يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ
ثُمَّ يَطْوِى الأَرَضِينَ بِشِمَالِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ
أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ  صحيح مسلم ـ مشكول
وموافق للمطبوع - (8 / 126)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க
அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக்
கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள்
எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?'' என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது
இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு "நானே அரசன்.
அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?'' என்று கேட்பான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் (5376)
அனைவருக்கும் பணிவு வேண்டும்
122- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ : حَدَّثَنَا
سُفْيَانُ قَالَ : حَدَّثَنَا عَمْرٌو قَالَ : أَخْبَرَنِي سَعِيدُ بْنُ
جُبَيْرٍ ، قَالَ : قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ
يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ.إِنَّمَا هُوَ
مُوسَى آخَرُ فَقَالَ كَذَبَ عَدُوُّ اللهِ ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ
كَعْبٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : قَامَ مُوسَى
النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَيُّ النَّاسِ
أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ ... رواه
البخاري صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (1 / 41)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள்,
(பின்வருமாறு) அறிவித்தார்கள்: (ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ
இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்றுகொண்டிருந்த போது
அவர்களிடம், "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?'' என்று வினவப்பட்டது.
அதற்கு மூசா (அலை) அவர்கள் "(நான் அறிந்த வரையில்) நானே மிகவும்
அறிந்தவன்'' என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ்
கண்டித்தான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (122)
பெருமையடிக்கும் ஏழை
172 - و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ
وَأَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
وَلَا يُزَكِّيهِمْ قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ
وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ
مُسْتَكْبِرٌ  صحيح مسلم ـ مشكول - (1 / 279)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று பேரிடம் மறுமை
நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான். -
அபூமுஆவியா அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவும்மாட்டான்'
என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு:
விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை
ஆகியோர்(தாம் அம்மூவரும்). அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  முஸ்லிம்
(172)
பெருமைக்காக செல்வந்தவர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்து
2819 - وَحَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ
سَمِعْتُ زِيَادَ بْنَ سَعْدٍ قَالَ سَمِعْتُ ثَابِتًا الأَعْرَجَ
يُحَدِّثُ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم-
قَالَ « شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُمْنَعُهَا مَنْ
يَأْتِيهَا وَيُدْعَى إِلَيْهَا مَنْ يَأْبَاهَا وَمَنْ لَمْ يُجِبِ
الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ   صحيح مسلم ـ مشكول
وموافق للمطبوع - (4 / 154)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு,
மறுப்பவர்கள் (செல்வர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட
உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய
தூதருக்கும் மாறு செய்துவிட்டார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
முஸ்லிம் (2819
ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில்
பார்க்க மாட்டான்: -
""தன் கால் சட்டை தரையில் தோய தற்பெருமையுடன் செல்பவன் மறுமையில்
அல்லாஹ்வின் அருள் பார்வையில் படமாட்டான்'' என்று பண்பு நபி (ஸல்)
அவர்கள் பகர்ந்ததைப் பகிர்ந்து கொள்கிறார் இப்னு உமர் (ரலி) நூல்
-புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, நஸஈ.
""தொழும்பொழுது கால் சட்டை கணுக்காலுக்குக் கீழ் தொங்குவது கூடாது''
என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்து சொல்கிறார்
இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- அபூதாவூத்.
""உன் உடையில் நீ நடுத்தரமாக இருப்பாயாக! உன் குரலைத் தாழ்த்தி கொள்''
என்று கூறுகிறது குர்ஆனின் 31-19 ஆவது வசனம்.
)அண்ணல் நபி  அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன்
பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும்
பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )”
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “நான் பிடித்து வைத்த
வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே
போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து
விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை
இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள். (புகாரி) அறிவிப்பாளர் :
இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி  அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள்,
விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும்,
வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)
தற்பெருமை கடலின் ஆழத்தில் உள்ள இருளுக்கு ஒப்பானது தற்பெருமை
அறியாமையின் ஆணவத்தால் உருவாவது. எல்லா அறியாமையும் தற்பெருமை ஆகாது.
ஆனால் எல்லா தற்பெருமையும் அறியாமையே
எனவே நாம் பெருமைகொள்ளாமல் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வோமாக.

Comments

Post a Comment

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!