அரஃபா தினத்தின் சிறப்புகள்!
அரஃபா தினத்தின் சிறப்புகள்!
பாவமன்னிப்பு!
அரஃபா தினத்தின் மாலைப் பொழுதில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத்தின் பாவமன்னிப்பிற்காக நீண்ட நேரம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதற்கு உடனே செவி சாய்த்தான். நாயகமே தங்களது கோரிக்கையை நான் ஏற்று கொண்டேன். அதே நேரம் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு செய்த அநியாயத்தை தவிர. பாதிக்க பட்டவன் மன்னித்தாலே தவிர.என்று அல்லாஹு சொல்லிவிட்டான்.
மீண்டும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ் நீ நினைத்தாள் பாதிக்கப்பட்டவனுக்கு நன்மையை வழங்கிவிட்டு அநீதம் செய்தவனை மன்னிக்கலாமே என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இந்த கோரிக்கைக்கு அப்போது பதில் கிடைக்க வில்லை ஆனாலும் நபிகளார் விடவில்லை. மறுநாள் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அல்லாஹ் அதையும் ஏற்று கொண்டான்.நபியே உங்கள் உம்மத்திற்கு மன்னிப்பு வழங்கி விட்டேன் என்றான். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகம் மலர்ந்தார்கள்.
தோழர்கள் நாயகமே என்றுமில்லாத ஆனந்தமும் சிரிப்பும் உங்களின் முகத்தில் தெரிகிறதே காரணம் என்ன? என்று கேட்டார்கள்.
உடனே மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்லீஸின் இழிநிலை கண்டு தான் இந்த சிரிப்பு! என் உம்மத்திற்காக நான் வைத்த கோரிக்கையை அல்லாஹ் ஏற்று கொண்டான். அதை அறிந்த இப்லீஸ் தாங்க முடியாமல் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு கதறி அழுகிற காட்சியை கண்டு தான் மகிழ்கிறேன் என்றார்கள்.

நரக விடுதலை அதிகமாக நடைபெறும் நாள்:
அல்லாஹ் நரகவிடுதலை அளிப்பதில் அரஃபா தினத்தைவிட அதிகமாக வேறு தினங்களில் அளிப்பதில்லை.
அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி பிரசன்னமாகிறான். அவர்களைக்குறித்து அமரர்களிடம் சிலாகித்து பெருமை பாராட்டுகிறான். இவர்களுக்கு என்ன தேவை? என்று பிரியத்தோடு கேட்கிறான்.7
அல்லாஹ் தன் அடியார்கள் குறித்து பெருமிதம் அடைகிற நாள்:
ஆயிஷா ரலி-அன்ஹா கூறுவார்களாம்:
அரஃபா நாள் பெருமிதத்திற்குரிய நாள்’’ என்று. அப்படிஎன்றால் என்ன? என்று மக்கள் விளக்கம் கேட்கிறபோது, அன்னை கூறுவார்களாம்:
அரஃபா அன்று அல்லாஹ் உலக வானிற்கு வந்து அமரர்களை அழைத்து, “இதோ பாருங்கள் என் அடியார்களை!
இவர்களுக்கு ஒரு தூதரை அனுப்பினேன். அவரை நம்பினார்கள். வேதத்தை அனுப்பினேன் அதையும் நம்பினார்கள். தற்போது உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் என்னிடம் வந்திருக்கிறார்கள் நரக
விடுதலையை என்னிடம் வேண்டுகிறார்கள். இதோ நான் தந்துவிட்டேன். அரஃபா நாளைவிட அதிகமாக நரகவிடுதலையை காண முடியாது” என்று கூறுகிறான்.
அல்லாஹ்வின் அருள் அதிகமாகப் பொழியும் நாள்:
''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு'' என்று . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?'' என்று அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு கேட்டார்கள் .''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன் . (முஸ்லிம்: அபூதாவூது)
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின்
வாசல்களில் 30ஐ திறக்கிறான்; தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.” 9
இந்தநாளில்என்னவெல்லாம்செய்யலாம்?
நோன்பு ,துஆ , பாவமன்னிப்பு, புலன்களை அடக்கி பாவத்தைத்த விர்ந்து கொள்ளுதல்
அன்று அதிமகமாக துஆவில் ஈடுபடவேண்டும்.
''அரஃபா நாளில் செய்யும் துஆ சிறந்த துஆவாகும்.''
அலி ரலி அறிவிக்கிறார்கள் நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்: நானும் எனக்கு முன்னுள்ள நபிமார்களும்
அரஃபாவில் அதிகம் ஓதிய துஆ:
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ اجْعَلْ فِي سَمْعِي نُورًا ، وَفِي بَصَرِي نُورًا ، وَفِي قَلْبِي نُورًا ، اللَّهُمَّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَأَعُوذُ بِكَ مِنْ وَسْوَاسِ الصُّدُورِ ،12
ஐம்புலன்களைப் பாதுக்காக்க வேண்டும்.
‘’
யார் அரஃபா நாளில் தன் செவி, பார்வை, நாவு இவற்றைப் பாதுகாக்கிறாரோ அவரை இந்த
அரஃபாவிலிருந்து அடுத்த அரஃபா வரை அல்லாஹ் பாதுகாக்கிறான்.’’
Comments
Post a Comment