மணவாழ்வு மகிழ்வு பெற மனைவியை காதலியுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு)
அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே! நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை என்ற குரூப்பில் ஒவ்வொரு வாரமும் காலத்திற்கு தோதுவான தலைப்புகளிள்   ஜும்ஆ பயான்களை நமது பாசத்திற்குரிய மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள் மிக அழகாக தந்து கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ். ரப்பினுடைய அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் அந்த பயானை அவர்களின் அனுமதியோடு இனி வரும் வாரங்களில் நமது இந்த இணையத்தளத்திலும் வெளியிடுவோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.            



அல்லாஹூதஆலா மனித சமுதாயத்தில் பல உறவுகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.அத்தகைய உறவுகளில் மிக முக்கியமான உறவாக, குடும்பத்தில் பாலமாக இருக்கக் கூடிய உறவாக கணவன் மனைவி உறவு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும்விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள்திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல்,  பிரியம், நெருக்கம்,  தாம்பத்யம்,  கருணை,  கனிவு, பரிவு,விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.
கணவன் மனைவி உறவைப்பற்றி அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டியநெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை. குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்?
ஆணைப் படைத்தஇறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும்ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே,பெண்ணிடத்தில் ஒருகவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான். ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆணனை விரும்புகிறாள்.
ஆண்-பெண் இருவரும் விரும்பி இணைய வேண்டும் என்ற காரணத்தினால்,

وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٲجً۬ا وَجَعَلَ لَكُم مِّنۡ أَزۡوَٲجِڪُم بَنِينَ وَحَفَدَةً۬ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ‌ۚ أَفَبِٱلۡبَـٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَتِ ٱللَّهِ هُمۡ يَكۡفُرُونَ
‘அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளைப் படைத்திருக்கிறான். அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன். பேத்திகளையும் உற்பத்தி செய்து, உங்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான்’ என்று கூறுகிறான். (ஸூரத்துன் நஹ்ல்:72)

وَمِنۡ ءَايَـٰتِهِۦۤ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٲجً۬ا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَڪُم مَّوَدَّةً۬ وَرَحۡمَةً‌ۚ إِنَّ فِى ذَٲلِكَ لَأَيَـٰتٍ۬ لِّقَوۡمٍ۬ يَتَفَكَّرُونَ
உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள் மனைவிகளை அல்லாஹ்படைத்துள்ளான். நீங்கள் அவர்களிடம் மன அமைதியுறுவதற்காக உங்களுக்கிடையில் அன்பையும்,  நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான்.’ (ஸூரத்துர் ரூம்: 21))
அன்பு ஒன்றினால்தான் மனிதன் முழு மனிதனாகின்றான். அவனது உள்ளத்தின் ஆழத்திலே புதைந்து கிடக்கின்ற நீண்ட ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றக் கூடியது அன்பு மட்டுமே.
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவதில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .
அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும்,  நாளையும்,  மகிழ்வையும்,கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள்.
நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள்.உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள் தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும் போது அவள்தான் உங்கள் முக்கிய மந்திரி. உங்கள் மனைவி தான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள் .காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல்காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.
சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும் போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா,மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள்தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!
கணவன் மனைவி உறவைப்பற்றி அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்,நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (ஸூரா அல்-பகரா 2:187).
எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன. மரியாதையையும்,  மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப்பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபார்த்தாலே அதன் அருமை புரியும். அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும்,கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவிதான்.
இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல்,  பிரியம்,  நெருக்கம்,  தாம்பத்யம்,  கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை.அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.
இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்துபெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாகஇருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது
وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
மேலும், அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (ஸூரா அல்-நஹ்ல்16:72)
அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْأَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன் தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (ஸூரா: அல்-ரூம்30:21).
ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள்மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக்கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.
நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்கு மென்று எண்ணி விடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.
திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து,பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.
அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும் உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள். ஆகவே,  நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது,வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களாயினும் சரியே.
தம்பதியர் இணங்கி; இருப்பதும்,தங்களது மரணம் வரைஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும்,அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களதுகுடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும்உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒருவிஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.
நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதைநம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்சசியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் என்று மறுமையில் அவர்களுக்கு கூறப்படும்.
இந்த வசனத்தை உண்மையாக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:
இருபத்தை ந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.
தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களதுவீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரிகளாவாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.
ஹாலா பின்த்து குவைலித் – கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி – இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா – ரலி – அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, ‘இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்” என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)” என்று கேட்டேன். புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).
மனைவி ஒரு பொக்கிஷம்          
இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.
பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். அடுத்தாற் போல் இங்கிதம். இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும். அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு - இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள். இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத்துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. கணவனுக்கு காதல் புரிவது என்பது அவன் வாழ்வில் ஒரு பகுதியே! ஆனால், மனைவிக்கோ வாழ்வு முழுவதும் அதுதான். இன்சொல்லோடு கணவனுடைய கொஞ்சுதலும் கெஞ்சுதலும் மனைவியை இன்பலாகிரியில் ஆழ்த்திவிடும்.
பெண்களை (-மனைவியை) இன்ப ஊற்றாகவே மதிக்கலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. வெறும் உயிரற்ற பொருளாகக் கருதி அலட்சியப்படுத்தக்கூடாது. மனைவியுடன் பேசும்போது கண்களைக்கூர்மையாக சந்தித்துப் பேச வேண்டும். அதுதான் ரசிப்புத்தன்மை. பெண்களின் அன்பும், அரவனைப்பும் ஆண்களின் கண்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். பல இல்லங்களில். மனைவியின் காதலுணர்வு விளக்கமில்லாமலேயே வீணாகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட காதல்
திருமணத்திற்குப் பின் கணவன், மனைவிக்கிடையில் ஏற்படும் காதல் தான் அங்கீகரிக்கப்பட்டதாகும், உண்மையானதாகும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ  (ابن ماجة)                         بَاب مَا جَاءَ فِي فَضْلِ النِّكَاحِ -وَالْمَعْنَى فَلَوْ كَانَ بَيْنهمَا نِكَاح مَعَ تَلِك الْمَحَبَّة لَكَانَتْ الْمَحَبَّة كُلّ يَوْم بِالِازْدِيَادِ -إذا جرى بين المتحابين وصلة خارجية ازدادت الوصلة الباطنية (مرقاة)
நபி ஸல் அவர்களின் நற்குணத்தை தெரிந்து கொண்ட பின் உடனே அவர்களை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த கதீஜா ரழி அவர்களும், திருமணத்திற்குப் பின் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட உண்மையான அன்பும்..
بَاعَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ سِلْعَتَهُ الّتِي خَرَجَ بِهَا وَاشْتَرَى مَا أَرَادَ أَنْ يَشْتَرِيَ ثُمّ أَقْبَلَ قَافِلًا إلَى مَكّةَ وَمَعَهُ مَيْسَرَةُ فَكَانَ مَيْسَرَةُ - فِيمَا يَزْعُمُونَ - إذَا كَانَتْ الْهَاجِرَةُ وَاشْتَدّ الْحُرّ يَرَى مَلَكَيْنِ يُظِلّانِهِ مِنْ الشّمْسِ - وَهُوَ يَسِيرُ عَلَى بَعِيرِهِ فَلَمّا قَدِمَ مَكّةَ عَلَى خَدِيجَةَ بِمَالِهَا بَاعَتْ مَا جَاءَ بِهِ فَأَضْعَفَ أَوْ قَرِيبًا وَعَمّا كَانَ يَرَى مِنْ إظْلَالِ الْمَلَكَيْنِ إيّاهُ وَكَانَتْ خَدِيجَةُ امْرَأَةً حَازِمَةً شَرِيفَةً لَبِيبَةً مَعَ مَا أَرَادَ اللّهُ بِهَا مِنْ كَرَامَتِهِ فَلَمّا أَخْبَرَهَا مَيْسَرَةُ بِمَا أَخْبَرَهَا بِهِ بَعَثَتْ إلَى رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَتْ لَهُ -فِيمَا يَزْعُمُونَ- يَا ابْنَ عَمّ 1 إنّي قَدْ رَغِبْتُ فِيك لِقَرَابَتِك وَسِطَتِكَ فِي قَوْمِك وَأَمَانَتِك وَحُسْنِ خُلُقِك وَصِدْقِ حَدِيثِك ثُمّ عَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا وَكَانَتْ خَدِيجَةُ يَوْمئِذٍ أَوْسَطَ نِسَاءِ قُرَيْشٍ نَسَبًا وَأَعْظَمَهُنّ شَرَفًا وَأَكْثَرَهُنّ مَالًا كُلّ قَوْمِهَا كَانَ حَرِيصًا عَلَى ذَلِكَ مِنْهَا لَوْ يَقْدِرُ عَلَيْهِ فَلَمّا قَالَتْ ذَلِكَ لِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ ذَكَرَ ذَلِكَ لِأَعْمَامِهِ فَخَرَجَ مَعَهُ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطّلِبِ رَضحَتّى دَخَلَ عَلَى خُوَيْلِدِ بْنِ أَسَدٍ فَخَطَبَهَا إلَيْهِ فَتَزَوّجَهَا قَالَ ابْنُ هِشَامٍ وَأَصْدَقَهَا رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ عِشْرِينَ بَكْرَةً2 (السيرة لابن كثير
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا رَأَيْتُهَا وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ فَرُبَّمَا قُلْتُ لَهُ كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ فَيَقُولُ إِنَّهَا كَانَتْ وَكَانَتْ وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ (بخاري) باب تَزْوِيجُ النَّبِىِّ صلى الله عليه وسلم خَدِيجَةَ- كتاب مناقب الانصار
கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே” என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது” என்று பதில் கூறினார்கள்.
நோயற்று வாழ காதலியுங்கள்!
அதீத காதலும், அன்பும் கொண்ட தம்பதியர் உறவில் ஈடுபடும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்பொழுது சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது. எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. உயர்ரத்த அழுத்த நோய் குணமடைகிறது என்று 229 தம்பதியரிடையே மேற்கொண்ட ஆய்வில் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதயநோய் வராது
திருமணம் மூலம் ஏற்படும் குடும்ப உறவு, தம்பதியருக்கிடையே ஏற்படும் அந்நியோன்யமான தாம்பத்யம் இதயநோய்களை தடுக்கிறது என்று பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்பான உறவு மூலம் கிடைக்கும் நேசம் பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறதாம் இதனால் இதயநோய் ஏற்படுவது குறைகிறது என்கின்றார் கொல்கத்தாவில் பிஎம். பிர்லா இதய ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் அனில் மிஸ்ரா.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தம் துணையுடன் வாரம் இரண்டுநாள் உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
உடலும் உள்ளமும் பொலிவாகும்
காதலோடு இணைந்த உறவு மூலம் உடலின் ரத்த ஓட்டம் சீரடைகிறது. இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, செக்ஸ் மூலம் ஆஸ்ட்ரோஜன் – புரோஜெஸ்ட்ரோன் ஹார்டோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன. சருமம் பொலிவடைகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து காணமல் போவதால் உடலும் அழகாகிறது என்று நிரூபித்துள்ளார்.
மனைவி தான் சிறந்த பொக்கிஷம்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவிப்பவர்: உமர் (ரலீ) அபூதாவூத் 1412
இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே! என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் முஸ்லிம் 2911
வீட்டில் சிறந்தவர் தான் வெளியில் சிறந்தவர்:
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலி) திர்மதி 1082
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்:
ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
நிறைகளை மட்டும் பார்ப்போம்:
கணவன்மார்களே! உங்கள் மனைவி நல்லவளோ, கெட்டவளோ, ஏழையோ, பணக்காரியோ, அழகியோ, குரூபியோ அவள் எப்படிப்பட்டவளாய் இருந்தாலும் அவளை உங்கள்பால் அன்பும், காதலும்,  அக்கரையும் கொண்டவளாக மாற்றி விடுங்கள். இது உங்கள் தலையாய பணி. மனைவியின் இதயத்தில் நீங்கள் இடம்பெற்று விட்டீர்களென்றால், அது ஒன்றே போதும். மற்ற நலன்கள் யாவும் தன்னாலேயே உங்களை வந்தடையும்.
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலீ) முஸ்லிம் 2915
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மண விலக்கச் செய்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்:அபூ{ஹரைரா (ரலி): முஸ்லிம் 2913
அடிமை அல்ல! வாழ்க்கை துணை! நம்மில் சிலர் மனைவியை ஆடுமாடுகளை அடிப்பதுபோல் அடிப்பதும், மிதிப்பதும் ஒரு கட்டாய கடமைப்போல் நினைத்து செயல்படுத்தியும் வருகின்றனர். அவர்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன. அவர்களும் நம்மைபோல் மனித இனம் தான் என்பதை மறந்து விடுகின்றனர்.
''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) புகாரி 5204
உண்ணும் போதும், உடுத்தும் போதும்மனைவியை விட்டு விடாதீர்கள்.மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிரவேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி)  நூல்:அஹ்மத் 19160
மனைவியை திருப்தியடைய செய்த நபிகளார்:
நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) புகாரீ 2481
(ஒரு முறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், ''என் தலைவலியே!'' என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நான் உயிரோடு இருக்கும் போதே அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்'' என்று சொன்னார்கள்.அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''அந்தோ! அல்லாஹ்வின் ஆணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே சென்று நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ''இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது) நான் தான் (இப்போது), 'என் தலைவலியே!' என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால் தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக செயல்படும் படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (அவ்வாறு விரும்பினேன்) ஆனால் பின்னர் '(அபூபக்ரைத் தவிர வேறொருவரை பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள்' என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)'' என்று சொன்னார்கள்.                                     அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் புகாரி
குடும்பத்தை கவனிக்காதவன் பாவி:
''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) அபூதாவூத் 1442
இல்லற வாழ்விலே, நிறைவை - வெற்றியை - சந்தோஷத்தை அடைய விரும்பும் தம்பதியர் முதலில் தம் வசமாக்கிக் கொள்ள வேண்டியது களங்கமற்ற காதலை மட்டுமே. அதுவும் பெண்ணின் அன்பு இருக்கிறதே, அதன் பரிமாணங்கள் அளவிடற்கரியவை. பெண்ணின் அன்பு ஒரு சஞ்சீவி மருந்து. இல்லறத்தின் இன்னல்கள் யாவற்றையும் தீர்க்கக்கூடிய மருந்து ஒன்று உண்டென்றால், அது அன்புடைய மனைவி மட்டுமே!
தெரிந்து கொள்ளுங்கள் - அன்பு ஒன்றுதான் அன்பைக்கொண்டு வரும். முதலில் உங்கள் மனைவியை நீங்கள் நேசியுங்கள். உள்ளது உள்ளவாறு அவளை நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அவளது தேவைகளுக்கு உகந்த கவனம் தந்து அவலது சிரமங்களைப் புரிந்து கொண்டவராய் அவளை அவளுக்காகவே நேசியுங்கள்.
நீங்கள் உங்கள் மனைவியின்பால் ஒரு மடங்கு அன்பைக் காட்டினீர்கள் என்றால் அவள் உங்கள்பால் நூறு மடங்கு அன்பைப் பொழிவாள். பெண்மைக்கே உள்ள இந்த தாராள மனப்பான்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மனைவியை நேசிப்பது என்றால், "I LOVE YOU, I LOVE YOU" என்று அவளிடம் போய் ஒப்பிப்பதல்ல. உங்கள் அன்பு, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட வேண்டும். உங்களது பார்வையில் அது பிரதிபலிக்க வேண்டும். மிகக் குறிப்பாக, திருமணமான புதிதிலே, பெண்ணுக்கு இத்தகையதோர் அன்பும், கவனிப்பும், கரிசனமும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன.
திருமணமான உடனேயே மனைவியானவள் அனைத்தையும் துறந்துவிட்டு, தனக்கு சேவகம் செய்யத் துவங்க வேண்டும் என்று, பல கணவன்மார்கள் நினைக்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம்.
தாய் அல்லது சகோதரிகளின் பேச்சைக்கேட்டுக் கொண்டு, வேண்டாத சட்ட திட்டங்களை மனைவியின் மீது திணிப்பது, அடக்குமுறைகளைக் கையாண்டு ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவை அநாகரிகமானவை மட்டுமல்ல, அவற்றால் பயன் விளையாது. மாறாக பாதகங்கள் மட்டுமே எழும்.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமுள்ள "அன்யோன்யம்" உங்கள் இருவரால் மட்டுமே முடிவு செய்யப்படுவதாக இருக்கட்டும். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து வெளியேற்றி, நீங்கள் இருவரும் நிறைய மனம் விட்டுப்பேசி, ஒருவர் மற்றவர்பால் உள்ளத்தால் நெருங்கிவரும் சாதகமான சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கல்யாணமான புதிதிலே, தனது பெற்றோர் மீதும், உடன் பிறந்தோர் மீதும், மனைவி எண்ணமிட்டபடி இருப்பதும், பிறந்த வீட்டுக்குச் சென்றுவர அவள் அடிக்கடி விருப்பம் தெரிவிப்பதும் மிகவும் இயற்கை. இதில் தவறேதுமில்லை. சொல்லப்போனால், இயற்கையின் கட்டாயத் தேவையே. ஏனெனில், உயிர் வாழ்க்கை வளமானதாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் "இரத்தப் பாசத்தை" பெண்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இறைவன் வழங்கியிருக்கின்றான்.
பிறந்த வீட்டின்பால் மனைவிக்கு ஏற்படும் நாட்டம் வெகு பல குடும்பங்களில் பெரிதுபடுத்தப்பட்டு, விகாரப் படுத்தப்படுகிறது. இது சரியன்று, முறையன்று. பிறந்த வீட்டுக்குச் சென்றுவர மனைவியை அனுமதிப்பதால் தீமை எழுவதில்லை. மாறாக நன்மை மட்டுமே விளைகின்றன.
உங்கள் மனைவி எனும் அந்தஸ்தோடு பிறந்த வீட்டுக்குச் சென்று வரும்போது அவளுக்குள் இரட்டிப்பு பலமும் சந்தோஷமும் எழுகின்றன. அவளுடைய மனதில் உள்ள இறுக்கம் யாவும் தளர்ந்து விலகுகின்றன. அவளுக்குள்ளே மன ஆரோக்கியம் வளரத் தொடங்குகின்றன. அவளுடைய நியாயமான - அடிப்படையான - அதுவும் இயற்கையான உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள். அதலால், அவளுடைய உள்ளத்தில் உங்களைப்பற்றிய "நல்லபிப்ராயம்" கிடு கிடுவென உயர்கிறது.
அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா]
மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.
1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)
மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.
2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.
3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)
நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.
5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.
காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக் கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.
ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ''பிஸி, மற்றும் நேரம் இல்லை'' போன்ற குரல்களே ஒலிக்கின்றன. ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள்.
வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும்
விவரணம் இதோ :
''பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது,
நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)
7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல்.
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு
குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.
8. மணைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !
நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது. அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல்,அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.
பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம்,அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.
இது போன்றவர்கள் நபியவர்களின் வாழ்வில் இருந்து நிறையவே படிப்பினை பெற வேண்டியுள்ளது. ஏன் என்றால் நபியவர்களே தங்கள் மணைவியரிடத்தில் தனக்குத் தேவையான ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.
அப்படியிருக்க நாம் ஏன் பெண்களிடம் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது?
நபியவர்கள் உம்ராச் செய்வதற்காக தங்கள் சகாபாக்களை அழைத்துக் கொண்டு வந்த நேரம் எதிரிகள் அதற்கு நபியவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
அந்நேரம் நபியவர்கள் எதிரிகளுடன் ஹுதைபிய்யா என்ற ஒப்பந்தத்தை போடுகிறார்கள். அப்போது நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!” என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 2732
இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இப்படிப்பட்ட பாராட்டத்தக்க ஒரு யோசனை சொன்னவர் ஒரு பெண்தான் ஆணல்ல.
மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சொல்வதைப் போல் நபியின் மனைவியரும்,நபித் தோழர்களின் மனைவியரும் குடும்ப வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டதையும், தேவையான சந்தர்ப்பங்களில் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதையும், கணவன் சொல் பேச்சைக் கேட்டு நடந்ததையும் மேற்கண்ட செய்திகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டி தந்த வழியில் நம்முடைய மனைவிமார்களை கவனித்து, அவர்களுக்குரிய உரிமைகளை கொடுத்து, அவர்களுக்கு அன்பையும் பாசத்தையும் பொழிந்து. அவர்களின் மனம் நோகாமல் நடந்து, இவ்வுலக வாழ்வில் அவர்களிடம் பெறக்கூடிய இன்பங்களை பெறுவதை முக்கியக் குறிக்கோளாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மறுமையிலும் மனைவி கொடுமைப்படுத்துவதன் மூலம் நஷ்டவாளியாகி விடாமல், அவர்களை நல்லமுறையில் நடத்தி வெற்றி பெற முயல வேண்டும்.
அல்லாஹ் நம்முடைய இம்மை மற்றும் மறுமை வாழ்க்கைகளை சிறப்பானதாக ஆக்குவானாக.வஸ்ஸலாம்.
கணவனுக்கு சில குறிப்புகள்
1.அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
8. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
9. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
10. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
11. ஒளிவு மறைவு கூடாது.
12. மனைவியை நம்ப வேண்டும்.
13. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
14. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
15.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
16 .தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
17. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
18. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
19. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
20. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
21 .மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
22. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
23. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7.மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு
11. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்

Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!