பிறர் நலம் பேணுவோம்!
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
அல்லாஹ்உனக்குக்கொடுத்ததிலிருந்து
மறுமை
வீட்டைத்தேடிக்
கொள்;
எனினும்,
இவ்வுலகத்தில்
உன்
நஸீபை
(உனக்கு
விதித்திருப்பதையும்)
மறந்து
விடாதே!
அல்லாஹ்
உனக்கு
நல்லதைச்
செய்திருப்பதைப்
போல்,
நீயும்
நல்லதை
செய்!
இன்னும்,
பூமியில்
குழப்பம்
செய்ய
விரும்பாதே;
நிச்சயமாக
அல்லாஹ்
குழப்பம்
செய்பவர்களை
நேசிப்பதில்லை...(28:77)
இன்று உலகம் முழுவதும் சுய நலம் என்று ஒரு நோய் சுற்றி திரிகிறது! இரு நாடுகளுக்கு மத்தியிலும்,இரு மாநிலங்களுக்கு மத்தியிலும், இரு ஊர்களுக்கு மத்தியிலும் சுயநலங்கள் சுற்றி திரிவதை நாம் பார்க்கிறோம்.எல்லா நாட்டவர்களும் நாம் யாருக்கும் உதவக்கூடாது என்ற சுயநலத்தோடு வாழ்கிறார்கள்.
தன்னை 10மாதம் சுமந்த தாயை கூட பார்க்க நேரமில்லாத அளவு சுயநல வாழ்க்கை வாழ்கிறோம்.முழுக்க,முழுக்க ஒரு ரோபோட்டை போன்ற வாழ்க்கை.
நம் குடும்பத்தில்,நம் வியாபாரத்தில், இப்படி நாம் எதை தொட்டாலும் சுய நலம் தான் அதிலே ஓங்கி நிற்கிறது.
சாலையில் செல்லும் போது கூட! நாம் மட்டும் தான் செல்வதை போல வாகனத்தை ஓட்டுபவர்கள் ஏராளம்.
சாலையில் விபத்து நடந்தால் கூட நமக்கென்ன என்று பொடுபோக்காக செல்பவர்கள் தான் அதிகம்.அதிலும் கூட முஸ்லிம்கள் என்றால் நின்று சில காரியங்களை செய்வது முஸ்லிம்கள் இல்லாவிட்டால் பார்த்த மேனியே செல்பவர்கள் தான் அதிகம்.
உயிர் போகும் நிலையில் இருந்தாலும் கூட நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால் நம் முன்னோர்களான சஹாபாக்கள் தன் உயிர் போகும் நிலையிலும் கூட பிறருக்கு உதவ வேண்டும் என்று எண்ணியதை பார்த்தால் நம் உள்ளம் சிலுர்கிறது.
இப்படி யாருக்கும் உதவாத ஒரு சுயநல வாழ்க்கையை வாழ்ந்து நாம் என்ன சாதிக்க போகிறோம் என்று தெரியவில்லை.
நான் யாருக்கும் உதவ மாட்டேன் என்னக்கு தான் எல்லோரும் உதவ வேண்டும் என்று உறுதியோடு இருந்தால் அதற்கு ஜனாஸா என்று தானே பெயர்.
நம்முடைய சிந்தனை நம்முடைய செயல் நம்முடைய வாழ்க்கை முலுக்க பிறர் நலனுக்காக இருக்க வேண்டும்.நமது முன்னோர்களின் பிறர் நலம் பேணுதல் தான் இஸ்லாம் உலகம் முழுக்க ஓங்கி வளர காரணமாக அமைந்தது...
நமக்கு பிறர் நலம் நோக்கமாக இருந்தால் நம் நலனை அல்லாஹ் காப்பான்,பிறருக்காக நாம் வாழ்ந்தால் நம் வாழ்கையை அல்லாஹ் சீராக்குவான்,பிறரின் முன்னேற்றத்திற்காக நாம் வாழ்ந்தால் நம் வாழ்கையை அல்லாஹ் முன்னேற்றுவான்.
நாயகம் ஆர்வமூட்டிய செயல்களில் ஒன்று பிறர் நலம் பேணுதல்!
பெருமானாரின் மஸ்ஜிதுக்கு ஒரு ஜனாஸா வந்தது பெருமானாரை தொழவைக்க மக்கள் அழைத்தார்கள் பெருமானார் தொழவைக்க வரும் பொது ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் நாயகமே இந்த மனிதர் இஸ்லாத்தின் அடிப்படையான எந்த செயல்களையும் செய்ததே கிடையாது எனவே நீங்கள் இவருக்கு தொழவைக்க வேண்டாம் என்றார்கள்.பெருமானார் ஜனாஸாவின் அருகாமையில் சென்று அமைதியாக நின்றார்கள் சஹாபாக்களை பார்த்து இவர் எப்போதாவது நற்காரியங்கள் செய்ததை யாராவது பார்த்து இருக்கிறிர்களா?என்று கேட்டார்கள் ஒரு சஹாபி நாயகமே ஒரு நாள் இரவு மதினாவின் எல்கையில் ஒரு கூட்டம் தங்கினார்கள் அப்போது இவர் எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அந்த கூட்டதார்களுக்கு தெரியாமலேயே இரவு முழுக்க அவர்களை பாதுகாத்தார் என்றார்கள் உடனே பெருமானார் அல்லாஹ் வின் ஆணையாக இவர் உண்மையான முஃ மின் என்றும் சுவர்க்கவாசி என்றும் நான் சாட்சி பகருகிறேன். பிறர் நிம்மதியாக இருக்க அவர்களின் பொருள்களையும் உயிர்களையும் பாதுகாத்து இருக்கிறார் எனவே நான் தொலவைக்கிறேன் பின்னால் நில்லுங்கள் என்று சொல்லி தொலவைதார்கள்.
பிறர் நலநிற்காக நாம் வாழ்ந்தாள் உண்மையான முஃமின் என்று பெருமானார் சான்று பகர்ந்தார்கள்.
யார் முஸ்லிமின் துன்பத்தை நீக்குவரோ அவரின் துன்பத்தை மறுமையில் அல்லாஹ் நீக்குவான்.
என்று பெருமானார் சொன்னார்கள்.
ஹதீசுள் குதுசியில் ஒரு செய்தியை பெருமானார் சொல்லுவார்கள் மறுமையில் ஒரு அடியானை பார்த்து! நான் ஒரு நாள் உன் வீட்டிற்க்கு யாசகம் கேட்டு வந்தேன் எனக்கு கொடுத்தாயா என்றும், நான் நோயாளியாக இருந்தேன் என்னை சந்தித்தாயா என்றும் அல்லாஹ் கேட்பான் அடியான் அசந்து போய் அல்லாஹ்வே நீதான் உலகிற்கே உணவளிப்பவன் நீ எப்போது என் இல்லம் வந்தாய் என்றும், நீதான் எல்லா நோயாளிகளுக்கும் நிவாரணம் அளிப்பவன் உன்னக்கு எப்போது உடல் நலம் குன்றியது என்றும் ஆச்சரியத்தோடு கேட்பான்! அப்போது இன்ன அடியான் யாசகம் கேட்டு வந்திருந்தான்,இன்ன அடியான் நோயுற்று இருந்தான் அப்போது அவர்களுக்கு உதவியிருந்தால் என்னை நீ அடைந்திருப்பாய் என்று அல்லாஹ் சொல்லுவான்.
இந்த ஹதிஸ் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால்!நாம் பல வருடங்களாக அமல் செய்தாலும் சரி! பல 1000 ரகாஅத்கள் தொழுதலும் சரி! அல்லாஹ் நமக்கு கிடைபதாக வாக்குறுதி இல்லை ஆனால் மனிதனுக்கு மனிதன் உதவுவதால் அல்லாஹ் கிடக்கிறான், சக மனிதனை நோய் விசாரிக்க சென்றால் அல்லாஹ் கிடைகிறான் என்றால்!நாம் வாழ்வதே பிறருக்காக இருக்க வேண்டும்.
உலகிலுள்ள எல்லா படைப்புகளும் பிறர் நலனுக்காக வாழ்கிறது.
கொள்ளு போட்ட எஜமானுக்காக குதிரை போர்களத்தில் தன் உயிரையும் கொடுக்க முன்வருகிறது,
வெறும் புற்கலும்,தவுடுகளும்,தண்ணீரும் கொடுத்ததற்காக மாடு வாழும் போதும் நமக்காக உழைக்கிறது செத்தபிறகும் நமக்கு செருப்பாக தேய்கிறது .
தென்னை மரத்திற்கு கீழ் சிறுவர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள் அதை வாங்கிய தென்னைமரம் இளநீரை தருகிறது.
கடல் நீரில்லிருந்து உப்பை எடுத்த மேகம் மலையாக பொழியும் பொழுது உப்பு நீரை தருவதில்லை.மாறாக சுத்தமான குடிநீரை தருகிறது.
இப்படி எல்லா படைப்புகளும் தன்னை அளித்து கொண்டு பிறர் நலனுக்காக வாழ்கிறது. நாம் மட்டும் தான் எல்லாவற்றையும் அனுபவைத்து கொண்டு சுயநலத்தோடு வாழ்கிறோம்.
ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி)அவர்கள் பெருமானாரிடத்தில் நாயகமே நான் 100 ரகாஅத் நஃபில் தொழுவது உங்களுக்கு பிரியமா?அல்லது பசித்த ஏழைக்கு ஒரே ஒரு ரொட்டி துண்டு கொடுப்பது உங்களுக்கு பிரியமா?என்று கேட்க பெருமானார் 200ரகாஅத் நஃபில் தொழுவதை விட ஒரே ஒரு ரொட்டியை கொடுப்பது எனக்கு மிக பிரியம் என்றார்கள்.
மீண்டும் அனஸ் இப்னு மாலிக் (ரலி)அவர்கள் நாயகமே ஒரு ஏழை கஷ்டத்தால் சிரம படுகிறார் அவரின் கஷ்டத்தை தீர்த்து வைக்கும் படி என்னிடத்தில் கேட்டுக்கொள்கிறார் இப்போது நான் அவரின் கஷ்டத்தை தீர்த்து வைப்பது உங்களுக்கு பிடிக்குமா?அல்லது 100 ரகாஅத் தொழுவது உங்களுக்கு பிடிக்குமா?என்று கேட்க!1000ரகாஅத் தொழுவதை விட ஒரு முஃமினின் கஷ்டத்தை தீர்த்து வைப்பது எனக்கு மிக பிரியம் என்று நாயகம் சொன்னார்கள்
அமல்கள் அவசியம்தான் ஆனால் அல்லாஹ் நமக்கு கிடைக்க நாம் பிறருக்கு உதவ வேண்டும். பெருமானார் (ஸல்)அவர்களின் பிரியம் கிடைக்க நாம் பிறருக்கு உதவ வேண்டும்.
ஹழ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் நாயகமே நான் சொர்கத்தில் உங்களோடு இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்க பிறரோடு சிரித்து பழகுங்கள்,எல்லோரோடும் அன்போடு நடந்து கொள்ளுங்கள், மற்றவர்களை புண் முறுவலோடு பாருங்கள்.நீங்கள் என்னோடு சொர்கத்தில் இருக்கலாம் என்று பெருமானார் சொன்னார்கள்.
உன் சகோதரனை புன்னகையோடு பார்ப்பது சிறந்த சதகா என்று நாயகம் சொன்னார்கள்.
நம் மார்க்கம் மிக உயர்ந்த மார்க்கம் என்பதற்கு இந்த ஒரே ஒரு ஹதிஸ் போதும்.உலக மக்கள் கவனிக்க வேண்டும் குறிப்பாக முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்ஒரு மனிதனை புன்னகையோடு பார்பதே நம் மார்கத்தில் தர்மம் என்று சொல்லி தரபட்டிருக்கிறது என்றால் நாம் எப்போதுமே பிறர் நலனுக்காக வாழ்பவர்களாக இருக்கவேண்டும்.
பனில் அம்ர் என்று ஒரு கூட்டதார் மிக அநீதம் புரிந்தார்கள் குறிப்பாக முஸ்லிம்களை சிரம படுத்தி அதில் சந்தோஷமாக இருப்பார்கள்.நாயகம் அவர்களிடத்தில் படை எடுக்க சொன்னார்கள் படை எடுத்து கைதிகளாக பிடித்து வந்தார்கள் சஹாபாக்கள். நாயகம் இவர்களுக்கு என்ன தீர்ப்பு வழங்க போகிறார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள் .பெருமானார் அல்லாஹ் வின் தீர்ப்பை எதிபார்த்து காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பு வந்தது. நாயகம்! இவர்கள் எல்லோரையும் கொன்று விடுங்கள் ஒருவரை மட்டும் பெருமானார் கைகாட்டி இவரை விட்டு விடுங்கள் என்று தீர்ப்பு வழங்க எல்லோரும் அமைதியாக இருந்தார்கள் அப்போது ஹழ்ரத் அலி (ரலி)அவர்கள் நாயகமே நம் மார்க்கம் ஒன்று தான் நம் அல்லாஹ்வும் ஒருவன்தான் இந்த பாவிகள் செய்த குற்றமும் ஒன்றுதான் ஆனால் தீர்ப்பில் மட்டும் ஏன் வித்தியாசம் என்று கேட்க நாயகம் சிரித்துகொண்டே இப்படிதான் ஜிப்ரயீல் சொன்னார் நானும் இதே கேள்வியை கேட்டேன்.ஜிப்ரயீலும் சிரித்தார்கள் இப்படிதான் அல்லாஹ் என்னிடத்தில் சொன்னான் நான் அல்லாஹ்விடத்தில் கேட்டேன்.எல்லோரும் தவறு செய்தவர்கள் தான் ஆனால் இவர் மட்டும் ஏழைகளுக்காக வாழ்ந்தவர்,பிறர் கஷ்டத்தில் பங்கெடுத்தவர் பிறர் வாழ உழைத்தவர் எனவே எல்லோரையும் கொல்ல சொல்லிய அல்லாஹ் இவரை மட்டும் மன்னிக்க சொன்னான்.என்று ஜிப்ரயீல் சொன்னதாக நாயகம் சொன்னார்கள்.
இந்த சம்பவம் நம்மக்கு சொல்லி தரும் பாடம்!யார் பிறருக்காக வாழ்கிறாரோ அவர் தவறு செய்து இருந்தாலும் அவரை அல்லாஹ் மன்னிக்கிறான்.
எனவே பிறர் நலனை பேணி வாழ்வோம்,எல்லோருக்கும் உதவுவோம்.அல்லாஹ்வை அடைந்து கொண்டு பெருமானாரோடு சுவனத்தில் வாழ்வோம் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்!
Comments
Post a Comment