இந்தியாவில் இஸ்லாமிய பாரம்பரியம்!

                                  


                                 

நாம் செய்யும் எல்லா செயல்களும், நாம் பேசும் எல்லா பேச்சிக்களும், நாம் கேட்கும் எல்லா செய்திகளும் நம் உள்ளத்தில் பதிந்து விடுவது கிடையாது. மாறாக சில நேரங்களில் நாம் செய்த செயல்கள், சில நேரங்களில் நாம் பேசிய பேச்சிக்கள், சில நேரங்களில் நாம் கேட்ட செய்திகள் மட்டும் தான் நம் உள்ளத்தில் பதிந்திருக்கும். 

எனவே தான் ரப்புல் ஆலமீன்  சஹாபாக்களின் உள்ளங்களில் திரு குர்ஆன் மிக ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காக  திரு குர்ஆனை  மற்ற வேதங்களை போன்று முழுமையாக இறக்கி வைக்காமல் அவர்களின் செயல்களுக்கு தக்கவாறு கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளில் இறக்கி வைத்தான்.  

அந்த அடிப்படையில் தான் இன்று நாம் (இந்தியாவில் இஸ்லாமிய பாரம்பரியம்) என்ற தலைப்பின் கீள் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

இன்று  (ஆகஸ்ட் 15) இந்தியாவிள்  68 வது சுதந்திர தின விழாவை செங்கோட்டை முதல் சென்னை கோட்டை வரை  மிக கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் முஸ்லிம்கள் இந்த கொண்டாட்டத்திற்கோ இந்த சந்தோஷத்திற்கோ எதிராவர்கள் இல்லை. மாறாக இந்த கொண்டாட்டமும், இந்த சந்தோஷமும் முஸ்லிம்களால் தான் என்பதை திட்டமிட்டு மறுக்கிற போதும் மறைக்கிற போதும்  தான் மனதிற்கு மிக வேதனையாக இருக்கிறது. 

இன்று முஸ்லிம்களை எந்த கண்ணோட்டத்தில் இந்திய எதிரிகள் பரப்புகிறார்கள் என்றால்? நேற்று பொழிந்த மலையில் இன்று முளைத்த காலங்களை போன்றும் அல்லது அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களை  போன்றும் பரப்பி கொண்டிருக்கிறார்கள். 

முஸ்லிம்கள்  நேற்று பொழிந்த மலையில் இன்று முளைத்த காலங்களும் இல்லை அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களும் இல்லை. முஸ்லிம்கள் இந்திய மண்ணின் மைந்தர்கள். நம் தாய் திரு நாட்டிற்காக உயிரையும் பொருளையும் தியாகம் செய்தவர்கள். 

இஸ்லாம் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இந்திய மன்னர்களை கவர்ந்து விட்டது என்பது வரலாறு.

மக்காவின்  காஃபிர்கள் நிலவை பிளந்து காட்டும்படி எம்பெருமானார் (ஸல்) அவர்களிடம் கேட்டு கொண்டதற்கிணங்க நாயகம் நிலவை பிளந்த சமயம் கேரளாவை ஆண்ட சேரமான் பெருமான் அந்த காட்சியை இங்கிருந்து கண்டு அந்த செய்தியை பற்றி விசாரித்து மக்கா சென்று நாயகத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட செய்தி மிக பிரபல்யமானது.அப்படி போகும் போது இங்கிருந்து இஞ்சியை பதப்படுத்தி எடுத்து சென்று நாயகத்திடம் கொடுத்தார் அதை பெற்றுக்கொண்ட  நாயகம் தன் அருகிலிருந்த தோழர்களுக்கு பங்கு வைத்து கொடுத்தார்கள் என்பதும் வரலாறு.             

அதே போல  வட இந்தியாவில் வாழ்ந்த பாபா ரத்தன் என்ற இந்து மத ஆன்மீக பெரியவரும் நாயகத்தை இரு முறை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பில் பெருமானாரிடம் உங்களை சந்திப்பதற்காகத்தான் நான் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்ல நாயகம் அவரின் நீண்ட ஆயுளுக்காக இரண்டு முறை சந்திப்பில் ஆறு முறை பிராத்தனை செய்தார்கள். அந்த பிராத்தனையின் பிரதிபலானாக அவர் 700வருடம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது வரலாறு. இவை கட்டுக்கதையோ பொய்யோ,திரிப்போ கிடையாது வரலாற்று உண்மைகள். 

இஸ்லாமிய வரலாற்றில் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களுக்கு தனி இடம் உண்டு. கல் உடைந்தாலும் சொல் உடையாதவர் என்று  அவர்களுக்கு பெயர் .அறிஞர்களிடத்தில்  மிகவும் மதிப்பு மிக்கவர்.  அவர் எழுதிய வரலாற்று புத்தகத்தில் பாபா ரத்தனுக்கு சஹாபாக்களின் வருசையில் இடம் தருகிறார். நாயகத்தை பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் இந்தியா வந்து முஸ்லிமாக நீண்ட காலம் வாழ்ந்தவர் .என்றே பதிவு செய்கிறார்.

இந்த வரலாற்றை பார்க்கும் போது  இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாம் மிக தொன்மை வாய்ந்தது.

நாயகம் இவுலகத்தை விட்டு கிபி 632 ல் மரணமடைந்தார்கள். கிபி 634 ல் இந்தியாவில் முதல் பள்ளிவாசல் கட்டிவிட்டார்கள். ஒரு பள்ளிவாசல் தேவை படும் அளவு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. 

அதேபோல இலங்கையிக்கும் அரபுகளுக்கும் கடல்வழி வணிக தொடர்பு அதிகமாக இறந்தது. ஹழ்ரத் உமர் (ரலி)அவர்களின் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து மதீனாவிற்கு ஒரு கப்பல் நிறைய பொருட்களை அன்பளிப்பாக அனுப்பியபோது சிந்து மாகனத்தின் ஒரு ஆட்சியாளன் அந்த கப்பலை வழிமறித்து பொருட்களை கொள்ளையடித்து கொண்டான் என்றும் வரலாறில் உண்டு.இந்த செய்தியை ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. அந்த ஆட்சியாளனுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டார்கள் அவன் எந்த பதிலும் அனுப்பவில்லை.பிறகு ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம் (ரஹ்) அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பி 20 வருடங்களுக்கு முன் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில்  நடந்த அநீதத்திற்கு நியாயம் கேட்க அனுப்பி வைத்தார்.ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம் (ரஹ்) அவர்களின் தலைமையில்  வந்த படை சிந்து மாநகரத்தை கைப்பற்றி ஒரு நியாயமான ஆட்சியை ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம்  (ரஹ்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு சில ஆண்டுகள் கழித்து ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம் (ரஹ்) அவர்களை இந்தியாவை ஆண்டது போதும் மதீனாவிற்கு வாருங்கள் என்று அழைத்தார். ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம்  (ரஹ்) அவர்கள் ஒரு குதிரையின் மீது ஏறி மக்கள் கூடி இருந்த பகுதிக்கு சென்று தான் புறப்படுவதை மக்களிடத்தில் சொல்ல அங்கு கூடியிருந்த மக்கள் குதிரையின் மீதிருந்த ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம் (ரஹ்) அவர்களின் காலை பிடித்து  எங்கள் மதத்தை சார்ந்தவர்கள் எங்களை ஆளும்போது எங்களை ஜாதி என்றும் மதம் என்றும் பிரித்து வைத்திருந்தார்கள் ஆனால் நீங்கள் எங்களை நியாயாக ஆண்டீர்கள் எனவே நீங்கள் எங்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டாம் என்று கதறி அழுதார்கள். அப்போது அந்த மக்களை பார்த்து ஹழ்ரத் முஹம்மத் பின் காசிம்  (ரஹ்) அவர்கள் இது என்னுடைய தனி திறமையில்லை நான் ஏற்றிருக்கிற மார்க்கம் எனக்கு விதித்த  கட்டளை இது.எனக்கு பிறகு வரும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும் இப்படி தான் ஆழ்வார்கள் என்று சொன்னார் என்பது வரலாறு.

இந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான். இந்திய மக்கள் முதன் முதலில் சமத்துவ காற்றை சுவாசித்தது முஸ்லிம்களின் ஆட்சியில் தான்.

இந்திய மக்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று மற்ற மதங்களை ஏற்று கொண்டவர்கள் ஏமாற்றத்தை அடைந்த போது அந்த மக்களுக்கு இஸ்லாம் தான் சமத்துவத்தை, நீதியை நியாயத்தை கொடுத்தது என்று  discovary of india வில் ஜவகர்லால் நேரு சொல்லுகிறார்.   

கிபி 711 ல் ஸ்பெய்னில் இஸ்லாமிய ஆட்சி வந்தது என்றால்! 712 ல் இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆட்சி வந்துவிட்டது திட்ட திட்ட ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவிற்கும், ஆசியா கண்டத்திலுள்ள சில பகுதிகளுக்கும் இஸ்லாமிய ஆட்சி வந்து விட்டது என்பது வரலாறு.

அதேபோல கர்நாடக சிங்கம்  திப்பு சுல்தான் (ரஹ்)அவர்களை பற்றி கர்நாடக பாட புத்தகத்தில் அவர்தான் முதல் சுதந்திர போராட்ட தியாகி என்று இருக்கிறது. தமிழக நூலில்? 

அந்த திப்பு சுல்தான் (ரஹ்)அவர்களின் படை சிறிரங்கம் வழியாக மலபாருக்கு சென்றது அப்போது அந்த ஊரில் ஒரு வித்தியாசமான காட்சியை அந்த படை வீரர்கள் பார்கிறார்கள் என்ன வென்றால்? மலபார் பகுதியில் சில பெண்கள் மேலாடை இல்லாமல் நடந்து செல்கிறார்கள். இந்த அதிசய காட்சியை பார்த்து விட்டு அந்த மக்களிடம் காரணம் கேட்ட போது? நாங்கள் மேலாடை அணிய வேண்டுமென்றால் அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் எங்களிடம் அவளவு பணமில்லாததால் நாங்கள் இப்படியே வாழ்கிறோம் என்று சொல்ல! இந்த செய்தியை ஹழ்ரத் திப்பு சுல்தான் (ரஹ்)அவர்களிடம் சொல்லி அனுப்ப அவர்கள் உண்மையிள்  அது அரசாங்க உத்தரவாக இருந்தால் அதை தூக்கி எறியுங்கள். மாறாக அந்த மக்களின் மத வழிபாடாக இருந்தால் அவர்களின் மனம் நோகாமல் மேலாடையின் அவசியம் பற்றிய விஷயங்களை மெல்ல எடுத்து சொல்லி விளங்கவையுங்கள் என்று சொல்லி  உத்தரவிட்டார். பிறகு ஒரேநாளில் அந்த இனத்தை சார்ந்த (3000) மக்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள் என்பது வரலாறு. இது தான் இஸ்லாம் அளித்த சுதந்திரம்.

இன்று சிறுவர்கள் கற்கும் கல்வியை காவிமயமாக்க துடிக்கும் இந்திய எதிரிகள் எங்கே?நம் முன்னோர்கள் எங்கே?

 ஹழ்ரத் திப்பு சுல்தான் (ரஹ்)அவர்கள் இந்தியாவின் மாவீரர் மட்டுமல்ல அவர்கள் ஒரு  தலை சிறந்த ஆலிமும் கூட. திரு குர்ஆனை ஃபிரஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து நெப்போலியன் போன்பாசுக்கு அனுப்பிவைத்தவர் . திரு குர்ஆனை ஃபிரஞ்ச் மொழியில் மொழிபெயர்க்க ஃபிரஞ்ச் மொழி ஞானமும் அரபி மொழி ஞானமும் ஒன்றாக பெற்றிருந்தவர்.மிக பெரும் இறை நேசர். அவர் ஆட்சி செய்த பகுதி மக்களுக்கு நீதி,நேர்மை,நியாயம், இவை அனைத்தையும் கொடுத்ததோடு ஒழுக்கத்தையும் கற்று கொடுத்தார். வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். முதன் முதலில் போர்களத்தில் பீரங்கியை அறிமுகப்படுத்தியவர். நம் இந்திய நாட்டிற்காகவே வாழ்ந்து நாட்டிற்காகவே மறைந்தார். ஆனால் இன்று அவர்களின் வாரிசுகள் கல்கத்தாவிலே கைரிக்ஷா இழுத்து கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தவர்களின் பாரம்பர்யம் இன்று வாழ வழியில்லாமல் வாடி கொண்டிருக்கிறது. இந்தியாவை வெள்ளையனிடம் காட்டிகொடுத்த மாமாக்களுக்கு இன்று  பாரத் ரத்னா விருது? 

அதேபோல அழகழகான பூங்காக்களை தந்தவர்கள் நமது முகல் மன்னர்கள். இத்தனை குடியிருப்புக்கள் இருந்தால் அங்கு இப்படிபட்ட பூங்கா இருக்க  வேண்டும், அந்த பூங்காவில் இந்த இந்த செடிகளை நடவேண்டும்.என்று  அழகழகான பூங்காக்களை அமைத்து கொடுத்து நம் நாட்டின் மண் வளங்களையும் தண்ணீர் வளங்களையும், மக்களுக்கு தேவையான  சுகாதாரங்களையும் தந்தவர்கள் நம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள். 

இன்னும் ஏராளமான செய்திகளை சொல்லிக்கொண்டே போகலாம் நாட்களும் காலங்களும் போதாது. அந்த அளவுக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக செய்திருக்கிறார்கள்.

 எப்படி வாழ வேண்டும் என்ற நாகரீகத்தை, ஆடைகளை, நல்ல உணவுகளை, சுகாதாரமான காற்றை, அழகு கலையை, ஒழுக்கமான வாழ்கையை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளையர்களிடம் அடிமையாக இருந்த இந்தியர்கள் இன்று சுதந்திர மாக சுற்றி திரிகிற இந்த வாழ்கையை பெற்று கொடுத்தது முஸ்லிம்களின்  பனமும், பொருளும், இரத்தமும், உயிர்களும் தான். அதற்கு சான்றாகத்தான் மௌண்பேட்டன் பிரபு இந்தியாவின் சுதந்திர பத்திரத்தை  அபுல் கலாம் ஆஸாத்திடம் தான் கொடுத்தார்  ஏன் அதை பெற தகுதியானவர்கள் முஸ்லிம்கள் தான் என்பதால். 
 
அதேபோல மிக கொடுமையான சிறைச்சாலை அந்தமான் சிறைச்சாலை தான்.அதற்கு செல்லுலர் ஜெயில் என்று பெயர் .அந்த சிறைச்சாலைக்கு வெளியே ஒரு பூங்கா இருக்கிறது அதற்கு ஷஹீத் பூங்கா என்று பெயர். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அங்கு தான் தூக்கிலிட்டார்கள். எனவே அதற்கு ஷஹீத் பூங்கா என்று பெயர்சூட்டப்பட்டது. சென்ற bjp ஆட்சியின் போது அந்த பெயரை சாவர்கர் பூங்கா என்று வாஜ்பேய் மாற்றினார். யார் இந்த சாவர்கர்? சுதந்திர போராட்டத்தின் போது சுதந்திர போராட்ட  தியாகிகளை கைது செய்த சமயம் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சாவர்கரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். சிறையில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு (என்னை நீங்கள்  தாயுள்ளம் கொண்டு விட்டு விட்டால் அதற்கு பரிகாரமாக சுதந்திர போராட்ட தியாகிகள் யார் யாரென்று நான் அவ்வப்போது உங்களுக்கு செய்தி தருவேன் என்று கடிதம் எழுதி வெளியே வந்து சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டிகொடுத்தவன். RSS அமைப்பின் தலைவர் என்பதால் அவனை தியாகி போல மக்களுக்கு காட்டுவதற்கு செய்த சூழ்ச்சி இது. பிறகு வந்த காங்ரஸ் அந்த பூங்காவை காந்தி பூங்கா என்று பெயர் மாற்றிவிட்டது. இப்படிதான் நம்முடைய தியாகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு மாற்றப்பட்டது.

நமது முன்னோர்கள் கட்டிய செங்கோட்டையில் அமர்ந்து கொண்டு நம்மை கொள்ள திட்டமிடுகிறார்கள். நமது  முகல் மன்னர்கள் கட்டிய தாஜ்மாகளின் வருமானத்தை பெற்றுக்கொண்டு அதிலே தொழுகை நடத்த அனுமதி  மறுக்கிறார்கள்.நமது வக்ஃப் சொத்துக்களை சுருட்டி கொண்டு நம்மை இஸ்லாமிய நாட்டிற்கு போக சொல்கிறார்கள்.  


 இதற்கு பிறகும்  நாம் நமது பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள விட்டால் வருங்காலத்தில் நம் பிள்ளைகளை வைத்தே நம்மை இந்த நாட்டின் துரோகிகள் என்று சொல்ல வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. 


எனவே இந்தியாவின் இஸ்லாமிய பாரம்பர்யத்தை நாமும் முழுமையாக தெரிந்து கொண்டு நடுநிலையான மக்களுக்கும் எடுத்துசொல்வோம். நம் முன்னோர்கள் தன் உயிரை கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை பாதுகாப்போம். இந்தய எதிரிகளின் சூழ்ச்சிகளை மக்களுக்கு உணர்த்துவோம். இன்னொரு முறை அடிமையாகாமல் வாழ வழிகளை தேடிகொள்வோம். நம் முயற்சிகளை வல்லோன் அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.


         வாழ்க இந்தியா/ வளர்க இந்தியர்கள் /










Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!