உணர்வோடு சிந்திப்போம்! உருக்கமாக துஆ செய்வோம்!
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே!) நீர் கூறுவீராக அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய் இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய் நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய் நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய் நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.(3:260
நாடாளமன்ற தேர்தலின் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. பிரதமர் நாற்காலிக்காக பலர் போட்டியிட்டாலும் ஒரு சிலர்கள் எங்களுக்கு தான் என்பது போல சில செயல்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
யாருடைய கனவு எப்படி இருந்தாலும் நம்முடைய செயல்கள் இந்த நாட்டுக்கும் நம் சமூகத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும்.ஏனென்றால் முஸ்லிம்களின் செயல்பாடுகளைத்தான் அல்லாஹ் கவனிக்கிறான்.
எனவே நமக்கு பல பொறுப்புகளும் கடமைகளும் இருக்கிறது. நம்மை பலர் தூற்றுகிறார்கள் என்பதற்காக நம் பொறுப்புகளை விட்டும் கடமைகளை விட்டும் ஒதுங்கி விட்டால் நஷ்டம் நமக்கும் நம்மமோடு வாழும் நம் தோழர்களுக்கும் நம் நாட்டுக்கும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.
அந்த அடிப்படையில் வருகிற நாடாளமன்ற தேர்தலிலும் நமக்கு பல பொறுப்புகள் இருக்கிறது. எப்படி நம்முடைய ஓட்டு இந்தியாவின் எதிரிகளுக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோமோ அது போன்று நமது உறவினர்கள்,நமது நண்பர்கள், நமக்கு தெரிந்தவர்கள், நம்மை சார்ந்தவர்கள், இன்னும் இந்தியாவில் வசிக்கும் நடுநிலையானவர்கள் இப்படி யாரினுடைய ஓட்டும் இந்தியாவின் எதிரிகளுக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாகசெல்லவேண்டும்.
எல்லோருக்கும் நரபலி நாயகனை பற்றியும், அவன் சார்ந்திருக்கிற கட்சியான bjp யை பற்றியும் நமக்கு தெரிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்கள் அல்ல!நம்மையும் நம் நாட்டையும் நம் சந்ததியினர்களையும் வேரோடு அளிக்க வந்தவர்கள். என்பதை மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்து சொல்ல வேண்டியது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமினுடைய தலையாய கடமை.
அதே போல நாம் தேர்ந்தெடுகிறோமோ அவர்களும் நாயகம் சொல்லிகொடுத்த முறையில் இருக்கிறார்களா? என்பதில் கவனம் வேண்டும்.
நம்முடைய ஓட்டு என்பது பரிந்துரைக்கு சமமானது. எனவே நாம் நல்லவர்களுக்கு பரிந்துரை செய்யவேண்டும். கேட்டவர்களுக்கு பரிந்துரை செய்பவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
பெருமானாரின் காலத்தில் உயர் குல பெண்மணி திருடியதற்காக கையை வெட்ட வேண்டாம் என்று ஹழ்ரத் உஸாமா (ரலி) அவர்கள் நாயகத்திடத்தில் பரிந்துரை செய்த போது ஹழ்ரத் உஸாமா(ரலி) அவர்களின் மீது கடும் கோபம் கொண்டார்கள் நாயகத்தின் முகம் சிவந்தது விட்டது அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு கோபத்தை நாங்கள் கண்டதில்லை என்று சஹாபாக்கள் அறிவிக்கும் ஹதீஸ் கேட்ட பரிந்துரை கூடாது என்பதை தான் நமக்கு உணர்த்துகிறது. (புகாரி)
அதேபோல ஒரு பெண்மணி பெருமானாரின் இறுதி தருவாயில் நாயகமே தங்களிடம் சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள நான் வந்திருக்கிறேன் என்று சொன்ன போது இப்போது எனக்கு சிரமமாக இருக்கிறது பிறகு வாருங்கள் என்று நாயகம் சொன்னார்கள். உடனே அந்த பெண்மணி நான் வரும் போது நீங்கள் இல்லாவிட்டால் நான் யாரிடம் கேட்பது என்று கேட்டபோது. நான் இல்லாவிட்டால் என்ன அது தான் அபூபக்கர் இருப்பாரே அவரிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்கள்.மீண்டும் அந்த பெண்மணி அபூபக்கரும் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று கேட்க? ஒன்றும் கவலை படாதீர்கள் அபூபக்கரும் இல்லாவிட்டால் உமரிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று நாயகம் பதில் சொன்னார்கள். தனக்கு பிறகு ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் அதற்கு பிறகு ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களும் கலிஃபா என்பதை நாயாகம் சூசகமாக பரிந்துரை செய்தார்கள்.
அதேபோல தான் நின்று இமாமத் செய்த இடத்தில் தனக்கு பிறகு ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் தான் இமாமத் செய்ய வேண்டும் என்பதையும் மிக துள்ளியமாக சஹாபாக்களுக்கு உணர்த்தினார்கள்.
எனவே நல்ல பரிந்துரை தேவை.
இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்து நமக்கு ஒன்றுமே செய்ய வில்லை என்று பார்க்கும் நேரமில்லை இது. நம் நாடு பலதரப்பட்ட மதத்தவர்கள் வாழும் நாடு. இருந்த போதிலும் அவரவர்களின் மதத்தை அவரவர்கள் பின்பற்றும் விதத்தில் மிக இலகுவாக இருப்பதே நமக்கு பெரும் விஷயம். ஏனெனில் bjp யினரின் தேர்தல் அறிக்கையே இதற்கு பெரும் சான்றாக அமைகிறது (பொது சிவில் சட்டம்).
அதேபோல நாம் சாட்சி சொல்லும் தருணம் இது.
ஒரு முறை ஒருவரிடம் நாயகம் ஓட்டம் ஒன்றை விலை பேசி நாளை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி சென்றார்கள். ஆனால் அவர் நாயகத்தை விட ஒருவர் விலை கூடுதலாக தந்தவுடன் ஒட்டகையை விற்று விட்டார். மறு நாள் நாயகம் வந்து கேட்கும் போது உங்களிடம் நான் விலை பேசவே இல்லை.அப்படி பேசியிருந்தால் அதற்க்கு சாட்சியை அழைத்து வாருங்கள் என்று சொல்லி விட்டார்.அப்போது அங்கிருந்த ஹழ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் நாயகமே நீங்கள் விலை பேசியதற்கு நான் சாட்சி என்றார்கள். நாயகம் ஹுதைஃபாவே நான் விலை பேசும் போது நீங்கள் அங்கு இல்லையே பிறகு எப்படி சாட்சி சொல்கிறீர்கள் என்று கேட்க. ஹழ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் யாரசூலுல்லாஹ் நீங்கள் அல்லாஹ்வை பற்றி சொன்னீர்கள் நான் அல்லாஹ்வை பார்க்கவில்லை இருந்தாலும் நம்பினேன்.நீங்கள் சொர்கத்தை பற்றி சொன்னீர்கள் நான் சொர்கத்தை பார்க்கவில்லை இருந்தலும் நம்பினேன். இப்படி நீங்கள் சொன்னதை யெல்லாம் உண்மை என்று உள்ளமார நம்பிய எனக்கு இது ஒரு பெரும் விஷயமல்ல நாயகமே என்றார்கள். அப்போது தான் நாயகம் ஹுதைஃபாவின் ஒரு சாட்சி இரண்டு சாட்சிக்கு சமம் என்றார்கள்.
இப்படி நம் சாட்சி நல்லவர்களுக்கு நல்லதற்காக இருக்க வேண்டும்.
இன்னுமொரு கோணத்தில் பார்த்தாள் நாம் பொறுப்பு சாட்டுகிறோம். எனவே நாம் நியமனம் செய்யும் பொறுப்பாளிகளின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாயகமும் சரி அதற்கு பிறகு ஆட்சி பொறுப்பில் இருந்த இஸ்லாமிய கலீஃபாக்களும் சரி தனக்கு பிறகு இந்த சமூத்தை நல்ல தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு தான் சென்றார்கள்.
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் யமன் தேசத்தின் கவர்னராக இருந்தார்கள். அப்போது யமன் வாசிகள் ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்களை பற்றி ஹழ்ரத் உமர் (ரலி)அவர்களிடம் நான்கு குற்றசட்டுகளை வைத்தார்கள்.(1)வாரம் ஒருமுறை விடுமுறை எடுக்கிறார். (2)இரவில் அலுவல்களை கவனிப்பதில்லை.(3)அடிக்கடி மயக்கமுற்று கீழே விழுகிறார்.(4)காலையில் பத்து மணிக்குதான் அலுவலுக்கு வருகிறார்.ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்களை அழைத்து விசாரித்த போது ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்களின் பதில்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.(1)என்னிடத்தில் ஒரே ஒரு ஆடை தான் இருக்கிறது அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு நாள் விடுமுறை தேவை படுகிறது.(2) பகல் முழுக்க படைபினத்திற்காக இரவு முழுக்க படைத்தவனுக்காக(3)ஹுபைப் (ரலி) அவர்களை தூக்கிலிடும் சமயம் நான் அருகிளிருந்தேன் அப்போது நான் முஸ்லிமாக இருந்திருந்தால் என் உயிரை கொடுத்து அவர்களின் உயிரை காத்திருப்பேன்.எனக்கு அந்த ஞாபகம் வரும் போது எனக்கு மயக்கம் வந்து விடுகிறது.(4)என் மனைவி நோயாளியாக இருக்கிறார் எனவே என் மனைவி மற்றும் என் பிள்ளைகளின் தேவைகளை முடித்து விட்டு வர பத்துமணி ஆகிவிடுகிறது என்று ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் சொன்னவுடன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.
இந்த சம்பவம் நமக்கு நிறைய படிப்பினை உள்ளது. நாட்டின் கவர்னரிடம் ஒரே ஒரு அடை தான் இருந்திருக்கிறது ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் செல்வங்களை பொது உடமையாக்கினால் நம் தாய் திரு நாட்டில் எல்லோருமே கோடீஸ்வரர்கள் தான்.
அதே போல உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சியில் அவர்களின் மகன் கிழிந்த ஆடையோடு பள்ளிக்கூடம் வருவதை பார்த்த சக மானவர்கள் தினமும் கிண்டலும் கேலியும் செய்தார்கள்.ஒரு நாள் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் மகன் தன் தாயிடத்தில் வந்து இத்தனை நாட்களாக நடந்ததை சொல்லி இனி நான் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்று அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிக்குள் வந்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் நடந்தவைகளை தன மனைவியிடம் கேட்டு தெரிந்து கொண்டு தன் மகனுக்கு புது ஆடைகள் வாங்கி தருவதாக சொல்லி விட்டி அரசவைக்கு சென்று நிதி அமைச்சரிடம் தன் மகனுக்கு ஆடைகள் வாங்க பணம் கேட்டார்கள்.நிதி அமைச்சர் எந்த பணத்தில் இருந்து கேட்குரீர்கள் என்று கேட்க? என் சம்பள பணத்திலிருந்து கொடுங்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து கொள்ளுங்கள் என்று நாட்டினுடைய ஜனாதிபதி சொல்ல.உங்களின் சம்பள நாள் வரையிலும் நீங்கள் உயிரோடு இருப்பேன் என்று எழுதி தாருங்கள் நான் பணம் தருகிறேன் என்றார் நிதி அமைச்சர்.
இப்படியும் ஒரு நல்லாட்சியை இஸ்லாமியர்களால் மட்டும் தான் கொடுக்க முடியும்.
அடுத்து நம் ஒட்டு நமக்கு வழங்கப்பட்ட அமானிதம்!
அமானிதத்தை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும்.நம் நாட்டுக்கு நலவுகளை ஏற்படுத்தக்கூடியவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு பைதுல் மாளில் இருந்து சம்பளம் கொடுக்கப்பட்டது. தன் மரண நேரத்தில் தன் மகளார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து தன்னுடைய நிலம் ஒன்றை விற்று பைத்துல் மாளிலிருந்து அவர்கள் வாங்கிய சம்பளத்தொகைக்கு பகரமாக கொடுத்து விட சொன்னார்கள் என்றால் எத்தகைய நல் ஆட்சியை இவ்வுலகிற்கு கற்று தந்திருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இத்தகைய தன்மை உள்ள நல்லவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்வதுடன் நாம் துஆவும் செய்ய வேண்டும்.
பத்ரு போருக்காக எல்லாவித ஏற்பாட்டிற்கு பிறகு பெருமானார் நமக்கு சொல்லிகொடுத்த முறை துஆ தான் இஷா முதல் ஃபஜர் வரை பிராத்தனை செய்ததாக நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோமே அதை நடைமுறை படுத்துவோம். அதேபோல சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களும் இதே செயலை சிலுவை யுத்தத்தின் போது நடைமுறை படுத்தி வெற்றி கண்ட வரலாறுகளை நம் இன்னும் மறக்க வில்லையே! எனவே நல்லாட்சி வருவதற்குகாண எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் மிக உருக்கமாக பிராத்திக்க வேண்டும். முடிந்தால் நோன்புகளையும் நோற்று நம் பட்சில பாலகர்களை முன்வைத்து அல்லாஹ்விடத்தில் மன்றாடுவோம். வல்லோன் அல்லாஹ் நம் முயற்சிகளை சீரானதாக ஆக்கி நம் பிராத்தனைகளை கபூல் செய்து நமக்கு நல்ல ஆட்சியாளர்களை தருவானாக ஆமீன்.
அருமையான பயான்
ReplyDeletejazakallaah
ReplyDelete