இல்லறம் இன்பமாக!
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.(25:74)
இல்லற வாழ்க்கை என்பது இவ்வுலகின் சுவர்க்கம் என்று சொல்லலாம். எனவே தான் எல்லா நபிமார்களின் வழிமுறையாக அல்லாஹ் அதை ஆக்கினான்.
ஆன்மிகம் என்ற ஒரு உன்னத பாதையை நாம் அடைய வேண்டுமேரால் அதற்கு நமது ஷரீஅத்தில் கண்டிப்பாக திருமணம் முடித்திருக்க வேண்டும் என்பது அல்லாஹ் ரஸூலின் கூற்று.
ஆனால் அந்த திருமண வாழ்வு இன்று நம்மில் அநேகர்களுக்கு கசப்பாகத்தான் இருக்கிறது.ஏனென்றால் திருமண வாழ்கையின் இன்பங்களை நமக்கு சரியாக சொல்லிதரவில்லை என்பதுதான் உண்மை. ஏதோ வயதாகி விட்டது என்பதால் தான் இன்று திருமணம் செய்து வைக்க படுகிறதே ஒழிய அவர்களுக்கு திருமணத்தின் சட்டதிட்டங்கள் ஒன்றுமே தெரியாத நிலையில் தான் இன்று திருமணங்கள் நடைபெறுகிறது. ஆனால் இதற்கு மாற்றமாக நமது ஆலிம்களும் திருமணம் செய்து கொண்டு மிக குறைவான சம்பளத்தில் குடும்ப வாழ்கையை நடத்ததானே செய்கிறார்கள் ஏன் அவர்களின் குடும்பத்தில் பெரும்பாலும் இப்படிப்பட்ட கசப்புகள் வருவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நமது நாயகத்தின் குடும்ப வாழ்கை போதிக்கப்பட்டிருக்கிறது.
உலகிலேயே குடும்ப வாழ்கையில் மிக சிறப்பான வெற்றி பெற்றவர்கள் நமது நாயகம் (ஸல்) அவர்கள் தான்.எனவேதான் உலக அறிஞர்கள் நமது நாயகத்தின் குடும்ப வாழ்கையை வியந்து பாராட்டுகிறார்கள்.
THE HUNDRED என்ற புத்தகத்தில் தலை சிறந்த 100 மனிதர்களில் நமது நாயகத்தை முதன்மைபடுத்தியது நாடறிந்த விஷயம்.அந்த புத்தக ஆசிரியர் ஒரு கிருஸ்துவர்.உடனே கிருஸ்துவ பாதரிகலில் சிலர் அவரிடத்தில் நீ ஒரு கிருஸ்துவனாக இருந்து கொண்டு முஸ்லிம்களின் தலைவரான முஹம்மதை (ஸல்) முதன்மை படுத்தி கிருஸ்துவ மதத்தை இழிவு படுத்திவிட்டாய் என்று சொன்னபோது அந்த புத்தகத்தின் ஆசிரியர் (michael H. Hart) ஏசு கிறிஸ்து மிக நல்லவர், உலகில் மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை போதித்தவர், இன்னும் பல நற்காரியங்களை புரிந்தவர் ஆனால் திருமண வாழ்வில் பயணிக்க வில்லை. இதற்கு மாற்றமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமண வாழ்வில் வெற்றிகண்டதோடு மட்டுமில்லாமல் ஒரு ஹதீஸிலே! உங்களின் குடுமத்தாரிடம் சிறந்தவர் தான் உங்களில் சிறந்தவர் நான் என் குடுமத்தாரிடம் சிறந்தவன் என்று சொன்னார்கள். என்று குறிப்பிடுகிறார்.
அந்தளவுக்கு பெருமானாரின் இல்லறவாழ்வு நமக்கு முன் உதாரணமாக அமைகிறது.
ஊரார் போற்றினால் போதாது நம் குடும்பத்தார் நம்மை போற்ற வேண்டும்.என்பது தான் நாயகத்தின் கூற்று.
ஆனால் இன்றைய சூழல் என்ன?
முல்லா என்று ஒருவர் இருந்தார். ஒருநாள் அவருக்கும் அவரின் மனைவிக்கும் சிறு சண்டைவந்தது. முல்லாவின் மனைவி முல்லாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பிடித்தமான சூப்பை தயார் செய்து சுடசுட குடிக்க கொடுத்தால் அவரின் நாக்கு சுட்டுவிடும் அவர் வேதனையில் துடிப்பதை நாம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் எடுத்துவந்து மேஜையின் மீது வைத்து முல்லாவை அழைத்தாள் முல்லாவும் சூப்பு மனம் கமகமப்பதை பார்த்து ஆவலுடன் வந்தார் ஆனால் மறந்தாற்போல் முல்லாவின் மனைவி ஒரு மிடறு குடிக்க சூடு தாங்க முடியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வர துவங்கியது மனைவி அழுவதை பார்த்த முல்லா ஏன் அழுகிறாய்? என்று கேட்க உண்மையை சொன்னால் முல்லா சூப்பை குடிக்கமாட்டார் நாம் பட்ட சிரமம் முழுக்க வீனாகிபோகும் என்று எண்ணி என் அம்மாவிற்கு சூப்பு மிகவும் பிடிக்கும் இத்தனை ருசியான சூப்பு நம் கையில் இருக்க அதை குடிக்க என் அம்மா இல்லையே! என்பதை நினைத்தேன் என்று சமாளித்தாள் இதை கேட்டவுடன் முல்லாவும் மனைவியின் நாடகம் பூரியாமல் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டு சூப்பை குடிக்க துவங்கினார் ஒரு மிடறை வாயில் ஊற்றியவுடன் சூடுதாங்காமல் முல்லாவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது இதை பார்த்த முல்லாவின் மனைவி மிகுந்த ஆனந்தத்துடன் இப்போது நீங்கள் ஏன் அழுகுறீர்கள் என்று நையாண்டியாக கேட்க முல்லா மிகுந்த கோபத்துடன் செத்துபோன உங்கம்மா உன்னையும் அவளோடு கூட்டி போயிருந்தால் நானாவது நிம்மதியாக இருந்திருப்பேன் உன்னை என் தலையில் கட்டிவிட்டு போய்விட்டாலே என்றெண்ணி அழுகிறேன் என்று சொன்னார்.
இன்று இப்படித்தான் கீரியும் பாம்புமாக நம் இல்லறம் இருக்கிறது.
பொதுவாகவே மனிதனின் இயல்பு தவறை பிறர் மீது சாட்டிவிட்டு அவன் தப்பித்து கொல்வான். உதாரணமாக சட்டை சின்னதாகிவிட்டது, கல் தடுக்கிவிட்டது, முள் குத்திவிட்டது இப்படி பிறரின் மீது பழிபோட்டு பழகிய மனிதன் நம் இல்லறத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நம் மனைவியின் மீது பலியை போட்டுவிட்டு ஒதுங்கி கொள்பவர்கள் தான் நம்மில் அதிகம். ஆனால் உண்மையில் நம் இல்லறம் நல்லறமாக நாமும் நாயகத்தின் வாழ்கையை வேண்டும்.பெருமானார் சொன்ன சில முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
1)கணவன் நற்குனத்தோடு மனைவியிடம் நடந்துகொள்ளவேண்டும்!
பெருமானாரின் நற்குனம்தான் நாயகம் (ஸல்)அவர்கள் ஹிரா குகையில் தவமிருந்த சமயத்தில் அன்னை கதிஜா(ரலி) அவர்களுக்கு 53 வயதாகியும் அந்த கரடு முரடு பாதையை கடந்து நாயகத்திற்கு உணவு கொண்டு செல்ல வைத்து.
ஒருமுறை அன்னை கதிஜா(ரலி) அவர்கள் மிகுந்த சந்தோஷமாக இருந்த சமயம் பெருமானாரிடம் நாயகமே நான் தங்களிடம் ஒன்று கேட்பேன் எனக்கு தருவீர்களா என்று அன்னை கதிஜா(ரலி) அவர்கள் கேட்க?என்னால் முடிந்ததை கேளுங்கள் தருகிறேன் என்று நாயகம் சொல்ல உடனே அன்னை கதிஜா(ரலி) அவர்கள் எனக்கு இப்போது சுவர்க்க கனியை சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றார்கள்.நாயாகம் ரப்பிடத்தில் பிராத்தித்து சுவர்க்க திராச்சையை பெற்று தந்தார்கள்.
2)கணவன் மனைவிக்கு உதவிகள் செய்ய வேண்டும்!
நாயகம் நிறைய வீட்டு வேலைகைளை செய்ததாக நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம்.
ஹழ்ரத் உமர் (ரலி)அவர்களின் ஆட்சி காலத்தில் ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் யமன் தேசத்தின் கவர்னராக இருந்தார்கள். அப்போது யமன் வாசிகள் ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்களை பற்றி ஹழ்ரத் உமர் (ரலி)அவர்களிடம் நான்கு குற்றசட்டுகளை வைத்தார்கள்.(1)வாரம் ஒருமுறை விடுமுறை எடுக்கிறார். (2)இரவில் அலுவல்களை கவனிப்பதில்லை.(3)அடிக்கடி மயக்கமுற்று கீழே விழுகிறார்.(4)காலையில் பத்து மணிக்குதான் அலுவலுக்கு வருகிறார்.ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்களை அழைத்து விசாரித்த போது ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்களின் பதில்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.(1)என்னிடத்தில் ஒரே ஒரு ஆடை தான் இருக்கிறது அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு நாள் விடுமுறை தேவை படுகிறது.(2) பகல்முழுக்க படைபினத்திற்காக இரவுமுழுக்க படைத்தவனுக்காக(3)ஹுபைப் (ரலி) அவர்களை தூக்கிலிடும் சமயம் நான் அருகிளிருந்தேன் அப்போது நான் முஸ்லிமாக இருந்திருந்தால் என் உயிரை கொடுத்து அவர்களின் உயிரை காத்திருப்பேன்.எனக்கு அந்த ஞாபகம் வரும் போது எனக்கு மயக்கம் வந்து விடுகிறது (4)என் மனைவி நோயாளியாக இருக்கிறார் எனவே என் மனைவி மற்றும் என் பிள்ளைகளின் தேவைகளை முடித்து விட்டு வர பத்துமணி ஆகிவிடுகிறது என்று ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் சொன்னவுடன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.
இந்த சம்பவத்திலிருந்து நமக்கு நிறைய படிப்பினை இருக்கிறது. அதில் ஒன்று ஒரு நாட்டின் கவர்னராக இருந்த போதும் தன் மனைவியின் வேலைகளையும் பார்த்து இருக்கிறார்கள்.
ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை பத்ரு போருக்கு வர வேண்டாம் உங்கள் மனைவியின் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள் என்று சொன்ன நாயகம் போரில் கலந்து கொள்ளாமலேயே கனீமத் பொருட்களில் பங்கும் கொடுத்தார்கள்.
3)மனைவியிடத்தில் அளவுகடந்த அன்பு காட்ட வேண்டும்!
பெருமானார் தன் மனைவி மார்களிடத்தில் எந்த அளவு அன்போடு வாழ்ந்தார்கள் என்பது நமக்கு சொல்லி தெரியவேண்டிய விஷயமல்ல.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இருக்கும் வரை நாயகம் வேறொரு நிக்காஹ் செய்து கொள்ளவில்லை அதுமட்டுமல்லாமல் பெருமானரின் மரணம் வரை அன்னை கதீஜா (ரலி) அவர்களை நினைத்து கொண்டே இருந்தார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை அந்தளவுக்கு பாசத்தோடு வாழ்ந்தார்கள்.
அதேபோல ஒரு முறை நபித்தோழர் ஒருவர் நபிகலாரிடத்தில் உலகில் உங்களுக்கு மிக பிடித்தமானர் யார் என்று கேட்ட போது அன்னை ஆயிஷா(ரலி)அவர்களைத்தான் நாயகம் சொன்னார்கள்.
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் நான் பெருமானாருக்கு பிறகு என் மனைவியைதான் அதிகம் நேசிக்கிறேன் என்று சொன்னது இஹ்யாவில் வருகிறது.
இப்படி நபிகளாரும் நபித்தோழர்களும் தன் மனைவியை அதிகம் நேசித்திருக்கிறார்கள்.
(4) மனைவிக்கு சில சலுகைகளை செய்யவேண்டும்!
அன்னை ஆயிஷா(ரலி) ஆவர்கள் சஹாபாக்களின் விளையாட்டினை பார்க்க வேண்டும் என்று சொன்ன போது அன்னை ஆயிஷா(ரலி) ஆவர்களை யாரும் பார்த்திடாவன்னம் தன்னுடைய தோல் புஜத்திற்கு பின்னல் நிற்க வைத்து பார்க்க வைத்தார்கள் அன்னை ஆயிஷா(ரலி) ஆவர்களும் நீண்ட நேரம் நின்று சஹாபாக்களின் விளையாட்டினை பார்த்து ரசித்தார்கள்.
மிஷ்காத்தில் வரும் செய்தி: ஒரு முறை பெருமானாரின் இல்லத்தில் இரு பெண்கள் அமர்ந்து கவிப்பாடி கொண்டிருந்தார்கள் அந்த நேரம் ஹழ்ரத் அபு பக்ர் (ரலி) அவர்கள் பெருமானாரின் இல்லம் வந்து கவி பாடிய அந்த இரு பெண்களையும் திட்டினார்கள் உடனே நாயகம் ஹழ்ரத் அபு பக்ர் (ரலி) அவர்களிடம் அபு பக்கரே ஏன் திட்டுகிறீர்கள் அந்த இருவரும் தவராக ஒன்றும் பாட வில்லை ஆயிஷாவிற்கு நல்ல கவிகளை கேட்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னார் எனவே நான் தான் இவர்களை அழைத்து கவி பாட சொன்னேன் என்று ஹழ்ரத் அபு பக்ர் (ரலி) அவர்களிடத்தில் நாயகம் சொன்னார்கள்.
5) வீட்டின் நிர்வாகம் கணவன் கவனிக்க வேண்டும்.
அல்லாஹ்வும் அதைத்தான் சொல்கிறான்
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ
ஆண் பெண் இருபாலாரில் அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். ஆண்கள் தங்கள் சொத்துகளிலிருந்து பெண் பாலாருக்காகச் செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.(4:34)
ஆனால் இன்று இதிலும் நாம் மாறு செய்கிறோம். நமது இல்லங்களின் நிர்வாகம் பெரும்பாலும் நம் மனைவியிடத்தில் தான் இருக்கிறது. மனைவி நம்மை பார்த்து தோப்புகரனத்தை போடு என்று அதட்டினாள் என்னிகோல் என்று சொல்லும் அளவு தான் நம் நிலை இருக்கிரது அதிலும் பெருமையாக நம் வீட்டை போருத்த வரை எல்லாம் என் மனைவி தான் என்று பெருமையாக சொல்லி திரிபவர்களும் அதிகம் உண்டு இந்நிலை மாற வேண்டும் வீட்டின் நிர்வாகம் நம் கையில் இருக்க வேண்டும்.
6)கணவன் ரோஷத்தோடு இருக்க வென்டும்.
ஒரு முறை அன்னை சஃபியா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குட்டை பெண் என்று சொன்ன போது நாயகம் கடுமையாக கண்டித்தார்கள் உன் வார்த்தையை கடலில் போட்டால் கடல் நீர் முழுக்க சாக்கடையாக மாறிபோகும் என்று கண்டித்தார்கள்.
இன்னொரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் அன்னை மைமூனா (ரலி) அவர்களும் நாயகத்திடம் பேசிக்கொண்டிருந்த போது ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் வந்தார்கள் பெருமானார் நம் தாய்மார்கள் இருவரையும் உள்ளே செல்ல சொன்னார்கள் உடனே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அவருக்குத்தான் பார்வையில்லையே என்று நாயகத்திடத்தில் சொன்ன போது பெருமானார் கடுமையாக கோபப்பட்டு நீங்கள் இருவரும் பார்ப்பீர்கள் தானே எழுந்து செல்லுங்கள் என்று கண்டித்தார்கள்.
அதேபோல குடும்பத்திற்காக தாராளமாக செலவுகள் செய்ய வேண்டும், நம் மார்கத்தை சரியாக கற்று தர வேண்டும்,உலுக்கதை போதிக்க வேண்டும்,நம் மனைவி செய்யும் தவறுகளை அன்பால் சரி செய்ய வேண்டும் இதுபோல் நம் நாயகம் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி நம் குடும்ப வாழ்கையை அமைத்து கொண்டால் நம் இல்லறம் இன்பமாக மாறுவதோடு இந்த பூமியின் சுவர்க்கமாகவே மாறிவிடும். வல்லோன் அல்லாஹ் நம் இல்லறத்தை இன்பகரமாக ஆக்கித்ருவானாக ஆமீன்
Comments
Post a Comment