இழந்தவைகள் போதும் இருப்பவைகளை பாதுகாப்போம்!
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும் மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.(2:114)
இன்று டிசம்பர் 6 இந்தியா முழுக்க அதிகாரிகளின் மூலமும் ஆட்சியாளர்களின் மூலமும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற காலம் இது.
இதன் மூலம் முஸ்லிம்கள் அல்லாத பொது மக்களுக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்! உங்கள் அருகில் வாழ்கிற எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள், எப்போதுமே அவர்களின் கைகளில் குண்டுகளுடனே அலைபவர்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் குண்டுகளை வைத்துவிடுவார்கள். எனவே உஷாராக இருங்கள்.என்ற ஒன்மையில்லாத பொய்யான விஷம கருத்தை செயல்களின் மூலம் பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
சரி அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தான் இப்படி என்றால்!மக்களுக்கு உண்மையான நிகழ்வுகளை சொல்லவேண்டிய மிடியாக்கள் இன்று அவர்களின் பத்திரிக்கைகள் பரபரப்பாக விற்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் பத்திரிக்கைகள் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் எத்தனை பெரிய அநீதத்தை இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக செய்து கொண்டிருக்கிறார்கள்.
தினமும் மக்களுக்கு உண்மை செய்திகளை தந்தியை போன்று சொல்ல வேண்டிய பத்திரிக்கை இன்று வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அதேபோல ஒவ்வொரு நாள் காலையிலும் மக்களுக்கு மலர்களை போன்று நல்ல பல தகவல்களை தரவேண்டிய பத்திரிக்கை இன்று மலத்தை கக்கிகொண்டிருக்கிறது.
இது போதா குறைக்கு இதுவரை மக்களை எல்லா தவறுகளை சினிமா என்ற போர்வையில் கற்றுக்கொடுத்து கொண்டிருந்த குத்தாடிகளும் அவர்களின் பங்கிற்கு ஒவ்வொரு படங்களிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிரார்கள்.
ஆக ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமா கூத்தாடிகள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கெதிராக படை எடுத்திருக்கிரார்கள்.
ஏன் இவ்வளவு பெரிய சதி வேலை?
இந்தியாவிலுள்ள எல்லா சகோதர சமயத்தவர்களின் உள்ளங்களிளும் முஸ்லிம்களை திவிரவாதிகளாக காட்ட வேண்டும் என்ற காவிகளின் சதி திட்டத்தை அரங்கேற்றுவதற்காகத்தான்.
எப்படி சஹாபாக்கள் மக்கத்து குஃபார்களின் தொல்லைகளை தாங்கி கொள்ள முடியாமல் நாயகத்தின் அனுமதியோடு அபி சீணியாவிற்கு ஹிஜ்ரத் சென்று சுகமாக வாழ்வது பொறுக்காமல் அங்கு சென்றும் அந்த நாட்டு மன்னரிடம் முஸ்லிம்களை பற்றி அவதூறு சொன்னார்களோ அதுபோன்று நம்மின் ஈருலக வெற்றியை பொருத்து கொள்ளமுடியாத இந்த கயவர்கள் இப்படிப்பட்ட நாசக்கார சதிகளை அரங்கேற்றுகிறார்கள்.
அதேபோல இந்தியா முழுக்க எல்லா விஷயங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி அவர்களை திவிரவாதகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டிவிட்டால் முஸ்லிம்களெல்லாம் பயந்து அப்படியே மூலையில் உட்கார்ந்து விடுவார்கள்,அவர்களின் முன்னேற்றத்தை தடுத்துவிடலாம் இன்னும் அவர்கள் தன்னை முஸ்லிம்கள் என்று கூட சொல்ல பயப்படவேண்டும் என்பது தான் இந்த அனைத்து கயவர்களின் ஆசை .
ஆனால் நடந்தது என்ன?
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வது போல்! இந்த கயவர்கள் முஸ்லிம்களை எதிர்க்க எதிர்க்க அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களின் ஈமானிய உறுதி அதிகமாகியிருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்.
பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு முன்னும் இடித்த பின்னும் முஸ்லிம்களின் வாழக்கை தரத்தை எடுத்து பார்த்தால் 1992 பாபர் மஸ்ஜிதை இடித்த பின்தான் முஸ்லிம்களின் ஈமானிய உணர்வு அதிகப்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது.
இது தான் அல்லாஹ்வின் கூற்றும் கூட
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.(9:33)
என்ற அல்லாஹ்வின் கூற்று உண்மையாகி விட்டது அல்ஹம்து லில்லாஹ்.
இஸ்லாம் வென்றதே ஒவ்வொரு போராட்டத்திற்கு பின்தான் என்று அல்லாமா இக்பால் (ரஹ்)அவர்கள் சொல்லுவார்கள்.
அதேபோல இஸ்லாம் வளர எப்படி சஹாபாகளுக்கு பெருத்த பங்கிருக்கிறதோ அதுபோல அபூஜஹில்,அபூலஹப் போன்ற இஸ்லாமிய எதிரிகளுக்கும் பங்கிருக்கிறது. எப்படி? அந்த இஸ்லாமிய எதிரிகள் எதிர்க்க எதிர்க்கத்தான் சஹாபாக்களுக்கு ஈமானிலே உத்வேகம் வந்தது என்றும் அல்லாமா இக்பால் (ரஹ்)அவர்கள் சொல்லுவார்கள்.
எல்லா காலத்திலும் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தை எதிர்க்கும் போது முஸ்லிம்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் முஸ்லிம்களுக்கு இறை வசனங்கள் தான் மருந்தாக அமையும்.
யாவரையும் மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.(85:8)
الَّذِينَ أُخْرِجُوا مِن دِيَارِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّا أَن يَقُولُوا رَبُّنَا اللَّهُ ۗ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا ۗ وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
இவர்கள் எத்தகையோரென்றால் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் ஒருவன்தான் என்று அவர்கள் கூறியதைத் தவிர வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை.(22:40)
இதுபோன்ற வசனங்கள் தான் நமது முன்னோர்களான சஹாபாகளுக்கு மிகப்பெரும் ஈமானிய உறுதியை ஏற்படுத்தியது.
அவர்கள் எத்தனையோ துன்பங்களை இறைவனுக்காக சகித்துகொண்டார்கள்.
நமது நாயகத்தின் 13 ஆண்டுகால மக்கா வாழ்வில் சொல்லில் அடங்காத துன்பங்களை சகித்து கொண்டார்கள். பிறகு மதீனாவின் வாழ்வு மிக பெரும் சுகத்தை கொடுத்தது.
நபித்தோழர்களுக்கு ஒரு காலத்தில் சாப்பிடக்கூட வழிகளில்லை அனால் பின்னால் பல நாடுகளின் ஜனாதிபதிகளாக அல்லாஹ் அவர்களை ஆக்கினான்.
உலகிற்கு இப்படித்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முறையையே கற்று தந்தார்கள் எல்லா மனிதர்களிடத்திலும் நீதத்தோடு நடந்தார்கள்.
உலகம் இருக்கும் காலமெல்லாம் அவர்களின் நீத ஆட்சிமுறை எல்லா மக்களுக்கும் பாடமாக்கிவிட்டு சென்றார்கள்.
எனவே இதுபோன்ற சோதனைகளை சந்திக்கும் நாம் முதலில் தளர்ந்து விடாமல் முழு ஈமானிய உறுதியோடு இருக்கவேண்டும்.
அல்லாஹ்வின் வாக்குறுதிகளை நம்பி இந்த சோதனைகளை நமக்கு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
முதலில் இழந்தவைகளை பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல் இனிமேல் இருப்பவைகளை எப்படி பாதிகாப்பது போன்ற உயர் தர சிந்தனைகளோடு செயல் படவேண்டும்.
இந்தியா முழுக்க மஸ்ஜித்களை அதிகம் அதிகம் கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மிக துரிதமாக செய்யவேண்டும். குறிப்பாக எங்கு மஸ்ஜித்கள் தேவைபடுகிறதோ அங்கு நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து எத்தனை சோதனைகள் வந்தாலும் சகித்து கொண்டு மஸ்ஜித்களை உருவாக்க வேண்டும்.
அதேபோல இருக்கும் மஸ்ஜித்களை அமல்களின் மூலம் அலங்கரிக்க வேண்டும் எல்லா மஸ்ஜித்களையும் ஷரீஅத் செண்டர்களாக மாற்ற முயற்சிகள் செய்யவேண்டும்.
பெருமானார் ஸல் அவர்ளின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவி எப்படி இருந்ததோ அது போன்று ஒவ்வொரு முஹல்லாவில் உள்ள மஸ்ஜித்களையும் உர்வாக்க வேண்டும்.
மற்றும் மதரஸாக்கள்,தீனுடைய ஸ்தாபனங்கள் போன்ற வற்றை ஏற்படுத்தி நமது முஹல்லா முஸ்லிம்களை விழிப்புணர்வோடு வைத்திருக்க வேண்டும்.
வல்லோன் அல்லாஹ் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை துடைத்தெரிந்து முஸ்லிம்களை நேரானா பாதையில் வாழவைப்பானாக. எப்பதுமே அவனுக்கு பிடித்தவைகளை செய்யும் நல்ல மனிதர்களில் நம் அனைவரையும் சேர்ப்பானாக. ஆமீன்
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும் மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.(2:114)
இன்று டிசம்பர் 6 இந்தியா முழுக்க அதிகாரிகளின் மூலமும் ஆட்சியாளர்களின் மூலமும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற காலம் இது.
இரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் இன்னும் சட்ட மன்றம், மற்றும் நாடாள மன்றங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்புகள் போட பட்டிருக்கிறதாம்.
டிசம்பர் 6 வந்துவிட்டால் ஒவ்வொரு இஸ்லாமிய பகுதிகளிலுள்ள இல்லங்களுக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்து இஸ்லாமிய ஆண்களை கைது செய்யும் நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு வருடமும் பார்த்து கொண்டிருக்கிறோம்.
இதன் மூலம் முஸ்லிம்கள் அல்லாத பொது மக்களுக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்! உங்கள் அருகில் வாழ்கிற எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள், எப்போதுமே அவர்களின் கைகளில் குண்டுகளுடனே அலைபவர்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் குண்டுகளை வைத்துவிடுவார்கள். எனவே உஷாராக இருங்கள்.என்ற ஒன்மையில்லாத பொய்யான விஷம கருத்தை செயல்களின் மூலம் பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
சரி அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தான் இப்படி என்றால்!மக்களுக்கு உண்மையான நிகழ்வுகளை சொல்லவேண்டிய மிடியாக்கள் இன்று அவர்களின் பத்திரிக்கைகள் பரபரப்பாக விற்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் பத்திரிக்கைகள் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் எத்தனை பெரிய அநீதத்தை இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக செய்து கொண்டிருக்கிறார்கள்.
தினமும் மக்களுக்கு உண்மை செய்திகளை தந்தியை போன்று சொல்ல வேண்டிய பத்திரிக்கை இன்று வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அதேபோல ஒவ்வொரு நாள் காலையிலும் மக்களுக்கு மலர்களை போன்று நல்ல பல தகவல்களை தரவேண்டிய பத்திரிக்கை இன்று மலத்தை கக்கிகொண்டிருக்கிறது.
இது போதா குறைக்கு இதுவரை மக்களை எல்லா தவறுகளை சினிமா என்ற போர்வையில் கற்றுக்கொடுத்து கொண்டிருந்த குத்தாடிகளும் அவர்களின் பங்கிற்கு ஒவ்வொரு படங்களிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிரார்கள்.
ஆக ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமா கூத்தாடிகள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கெதிராக படை எடுத்திருக்கிரார்கள்.
ஏன் இவ்வளவு பெரிய சதி வேலை?
இந்தியாவிலுள்ள எல்லா சகோதர சமயத்தவர்களின் உள்ளங்களிளும் முஸ்லிம்களை திவிரவாதிகளாக காட்ட வேண்டும் என்ற காவிகளின் சதி திட்டத்தை அரங்கேற்றுவதற்காகத்தான்.
எப்படி சஹாபாக்கள் மக்கத்து குஃபார்களின் தொல்லைகளை தாங்கி கொள்ள முடியாமல் நாயகத்தின் அனுமதியோடு அபி சீணியாவிற்கு ஹிஜ்ரத் சென்று சுகமாக வாழ்வது பொறுக்காமல் அங்கு சென்றும் அந்த நாட்டு மன்னரிடம் முஸ்லிம்களை பற்றி அவதூறு சொன்னார்களோ அதுபோன்று நம்மின் ஈருலக வெற்றியை பொருத்து கொள்ளமுடியாத இந்த கயவர்கள் இப்படிப்பட்ட நாசக்கார சதிகளை அரங்கேற்றுகிறார்கள்.
அதேபோல இந்தியா முழுக்க எல்லா விஷயங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி அவர்களை திவிரவாதகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டிவிட்டால் முஸ்லிம்களெல்லாம் பயந்து அப்படியே மூலையில் உட்கார்ந்து விடுவார்கள்,அவர்களின் முன்னேற்றத்தை தடுத்துவிடலாம் இன்னும் அவர்கள் தன்னை முஸ்லிம்கள் என்று கூட சொல்ல பயப்படவேண்டும் என்பது தான் இந்த அனைத்து கயவர்களின் ஆசை .
ஆனால் நடந்தது என்ன?
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வது போல்! இந்த கயவர்கள் முஸ்லிம்களை எதிர்க்க எதிர்க்க அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களின் ஈமானிய உறுதி அதிகமாகியிருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்.
பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு முன்னும் இடித்த பின்னும் முஸ்லிம்களின் வாழக்கை தரத்தை எடுத்து பார்த்தால் 1992 பாபர் மஸ்ஜிதை இடித்த பின்தான் முஸ்லிம்களின் ஈமானிய உணர்வு அதிகப்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது.
இது தான் அல்லாஹ்வின் கூற்றும் கூட
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.(9:33)
என்ற அல்லாஹ்வின் கூற்று உண்மையாகி விட்டது அல்ஹம்து லில்லாஹ்.
இஸ்லாம் வென்றதே ஒவ்வொரு போராட்டத்திற்கு பின்தான் என்று அல்லாமா இக்பால் (ரஹ்)அவர்கள் சொல்லுவார்கள்.
அதேபோல இஸ்லாம் வளர எப்படி சஹாபாகளுக்கு பெருத்த பங்கிருக்கிறதோ அதுபோல அபூஜஹில்,அபூலஹப் போன்ற இஸ்லாமிய எதிரிகளுக்கும் பங்கிருக்கிறது. எப்படி? அந்த இஸ்லாமிய எதிரிகள் எதிர்க்க எதிர்க்கத்தான் சஹாபாக்களுக்கு ஈமானிலே உத்வேகம் வந்தது என்றும் அல்லாமா இக்பால் (ரஹ்)அவர்கள் சொல்லுவார்கள்.
எல்லா காலத்திலும் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தை எதிர்க்கும் போது முஸ்லிம்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் முஸ்லிம்களுக்கு இறை வசனங்கள் தான் மருந்தாக அமையும்.
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
யாவரையும் மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.(85:8)
الَّذِينَ أُخْرِجُوا مِن دِيَارِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّا أَن يَقُولُوا رَبُّنَا اللَّهُ ۗ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا ۗ وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
இவர்கள் எத்தகையோரென்றால் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் ஒருவன்தான் என்று அவர்கள் கூறியதைத் தவிர வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை.(22:40)
இதுபோன்ற வசனங்கள் தான் நமது முன்னோர்களான சஹாபாகளுக்கு மிகப்பெரும் ஈமானிய உறுதியை ஏற்படுத்தியது.
அவர்கள் எத்தனையோ துன்பங்களை இறைவனுக்காக சகித்துகொண்டார்கள்.
இன்னும் சில வசனங்களில் யார் அல்லாஹ்விற்காக உலகில் ஏற்படும் சோதனைகளை சகித்து கொள்கிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் அவர்களுக்கு உயர்தர சுவனம் உண்டு இதைவிட ஒருபடி மேலாக சென்று அல்லாஹ்வின் ரிலாவும், அவனின் லிகாவும் கிடைக்கும் என்பது போன்ற வசனங்கள் நமது முன்னோர்களுக்கு மட்டு மின்றி நமக்கும் பெரும் சுப செய்தியாக அமைகிறது.
இறைவனின் லிகா கிடைப்பதற்காக வேண்டி எத்தனை பெரும் சோதனைகளையும் நம்மால் தாங்கி கொள்ளமுடியும்.
நமது நாயகத்தின் 13 ஆண்டுகால மக்கா வாழ்வில் சொல்லில் அடங்காத துன்பங்களை சகித்து கொண்டார்கள். பிறகு மதீனாவின் வாழ்வு மிக பெரும் சுகத்தை கொடுத்தது.
நபித்தோழர்களுக்கு ஒரு காலத்தில் சாப்பிடக்கூட வழிகளில்லை அனால் பின்னால் பல நாடுகளின் ஜனாதிபதிகளாக அல்லாஹ் அவர்களை ஆக்கினான்.
உலகிற்கு இப்படித்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முறையையே கற்று தந்தார்கள் எல்லா மனிதர்களிடத்திலும் நீதத்தோடு நடந்தார்கள்.
உலகம் இருக்கும் காலமெல்லாம் அவர்களின் நீத ஆட்சிமுறை எல்லா மக்களுக்கும் பாடமாக்கிவிட்டு சென்றார்கள்.
எனவே இதுபோன்ற சோதனைகளை சந்திக்கும் நாம் முதலில் தளர்ந்து விடாமல் முழு ஈமானிய உறுதியோடு இருக்கவேண்டும்.
அல்லாஹ்வின் வாக்குறுதிகளை நம்பி இந்த சோதனைகளை நமக்கு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
முதலில் இழந்தவைகளை பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல் இனிமேல் இருப்பவைகளை எப்படி பாதிகாப்பது போன்ற உயர் தர சிந்தனைகளோடு செயல் படவேண்டும்.
இந்தியா முழுக்க மஸ்ஜித்களை அதிகம் அதிகம் கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மிக துரிதமாக செய்யவேண்டும். குறிப்பாக எங்கு மஸ்ஜித்கள் தேவைபடுகிறதோ அங்கு நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து எத்தனை சோதனைகள் வந்தாலும் சகித்து கொண்டு மஸ்ஜித்களை உருவாக்க வேண்டும்.
அதேபோல இருக்கும் மஸ்ஜித்களை அமல்களின் மூலம் அலங்கரிக்க வேண்டும் எல்லா மஸ்ஜித்களையும் ஷரீஅத் செண்டர்களாக மாற்ற முயற்சிகள் செய்யவேண்டும்.
பெருமானார் ஸல் அவர்ளின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவி எப்படி இருந்ததோ அது போன்று ஒவ்வொரு முஹல்லாவில் உள்ள மஸ்ஜித்களையும் உர்வாக்க வேண்டும்.
மற்றும் மதரஸாக்கள்,தீனுடைய ஸ்தாபனங்கள் போன்ற வற்றை ஏற்படுத்தி நமது முஹல்லா முஸ்லிம்களை விழிப்புணர்வோடு வைத்திருக்க வேண்டும்.
வல்லோன் அல்லாஹ் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை துடைத்தெரிந்து முஸ்லிம்களை நேரானா பாதையில் வாழவைப்பானாக. எப்பதுமே அவனுக்கு பிடித்தவைகளை செய்யும் நல்ல மனிதர்களில் நம் அனைவரையும் சேர்ப்பானாக. ஆமீன்
Comments
Post a Comment