மாற்றார்களோடு மாநபி (ஸல்)
بسم الله الرحمن الرحيم
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரைவிட்டு வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.(8:30)
சமீபகாலமாக முழு உலகத்திலும், நம் இந்தியாவிலும் இஸ்லாத்திற்கு எதிராக பல விதமான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது.
இஸ்லாத்தினுடைய அபரிவிதமான வளர்ச்சியை பார்த்து போருக்க முடியாமல் சில இஸ்லாமிய எதிரிகள் ஊடகங்களிலும், இனய தளங்களிலும் இஸ்லாமிய சட்டங்களை பற்றியும், குர்ஆனை பற்றியும், பெருமானார் (ஸல்) அவர்களை பற்றியும், அவ்வப்போது அவதூறு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு நாம் எப்படி பதில் சொல்வது?
அவர்கள் எந்த ரீதியில் நம்மை தாக்குகிறார்களோ அதே ரீதியில் பதில் சொல்வதும் நம் கடமை.
அதே போல நம் மார்கத்தினுடைய உண்மை நிலையை எதார்த்தத்தை நம் வாழ்கையின் மூலம் வாழ்ந்து காட்டவேண்டும் .
பெருமானார் (ஸல்)அவர்கள் ஏகத்துவ பிரச்சாரம் செய்த போது எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார்கள்.
நம் நாயகத்தை கல்லால் அடித்தார்கள், ஊரைவிட்டு துரத்தினார்கள், சூனியம் செய்தார்கள், உணவில் விஷம் வைத்து கொள்ளப்பார்த்தார்கள். இப்படி எண்ணற்ற தொல்லைகளை கொடுத்தார்கள்.
ஆனால் பெருமானார் (ஸல்)அவர்கள் இந்த எல்லா செயல்களுக்கும் ஒட்டுமொத்தமாக பதில் சொல்லவில்லை மாறாக இஸ்லாத்தின் உண்மை நிலையை தன் வாழ்வின் மூலம் மக்களுக்கு உணர்த்தினார்கள்.
முஸ்லிம்கள் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும், அவர்களுடைய குணங்கள் எப்படி இருக்க வேண்டும், அவர்கள் மற்றவர்களிடத்தில் எப்படி பழக வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் நாயகம் தன் வாழ்வின் மூலம் நமக்கு வாழ்ந்து காட்டிருக்கிறார்கள்.
மக்காவினுடைய கொடுமைகளை இறைவனே சொல்கிறான்.
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரைவிட்டு வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.(8:30)
இவ்வளவு கொடுமைகளை செய்தவர்களை மதீனாவிற்கு சென்ற பிறகு நம்மிடத்தில் ஆட்சி இருக்கிறது என்றும் நாம் சொன்னால் உடனே செயல்படுத்த ஆயிரக்கனக்கான தோழர்கள் இருக்கிறார்கள் என்றும் நாயகம் யாரையும் பழிவாங்க வில்லை.
மாறாக அவர்களின் உரிமைகளை நாயகம் சஹாபாக்களுக்கு சொல்லிகொடுத்தர்கள். இஸ்லாமிய ஆட்சியின்கீழ் மாற்று மதத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை சொல்லிகொடுத்தர்கள்.
ஹழ்ரத் அபு பக்கர் (ரலி) அவர்கள் ஆரம்பகாலத்தில் ஹுசைலா பிந்து அப்துல் உஸ்ஸா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்ளவில்லை பிறகு உம்மு ரூமான் என்ற அம்மையாரை திருமணம் முடித்தார்கள். முதல் மனைவியின் மூலம் பிறந்தவர்கள் தான் அன்னை அஸ்மா (ரலி) அவர்கள், இரண்டாவது மனைவியின் மூலம் பிறந்தவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
அன்னை அஸ்மா (ரலி) அவர்களை பார்பதற்காக நிறைய அன்பளிப்புகளை வாங்கிகொண்டு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள் அன்னை அஸ்மா (ரலி) அவர்கள் தன் இல்லத்திற்குள் அனுமதிக்காமல் பெருமானாரிடத்தில் ஆள் அனுப்பி என்னுடைய தாயார் நிறைய அன்பளிப்புகளை வாங்கிகொண்டு என்னை பார்க்க வந்திருக்கிறார் நான் அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான் (60:8)
இதன் பின்னர்தான் அன்னை அஸ்மா (ரலி) அவர்கள் தன் தாயை வீட்டிற்குள் அழைத்து அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள்.
இந்த வசனத்தின் மூலம் அன்னை அஸ்மா (ரலி) அவர்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்திலுள்ள சகோதர சமயத்தவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
எனவே நாயகம் (ஸல்) அவர்கள் சத்திய சஹாபாக்களுக்கு வெறும் வார்த்தையின் மூலம் இஸ்லாத்தை கற்று தரவில்லை மாறாக தன் வாழ்கையின் மூலம் விளக்கினார்கள்.
பெருமானார் எப்போதுமே துளைநோக்கு பார்வையோடு சிந்திப்பார்கள்.
ஒரு முறை நஜ்ரான் நாட்டிலிருந்து சில கிறிஸ்துவ பாதரியார்கள் பெருமானாரை சந்திக்க வந்தார்கள். அந்த சந்திப்பு மஸ்ஜிதுன் நபவிக்குள் வைத்து நடந்தது. அந்த சந்திப்பிற்கு இடையில் அந்த பாதரிகளில் சிலர் தன்னுடைய மத அடிப்படையில் வணங்குவதற்கு நபியிடத்தில் அனுமதி கேட்டார்கள் நாயகம் மஸ்ஜிதுன் நபவிக்குள் ஓரிடத்தில் அவர்களின் மதம் சார்ந்த வணக்கத்தை நிறைவேற்ற அனுமதி கொடுத்தார்கள். அவர்களின் வணக்கத்தை முடித்துகொண்ட பிறகு ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். அதிலே நஜ்ரான் நாடும் அந்த நாட்டு மக்களும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார்கள் அல்லாஹ்வினுடைய தூதுவரின் பொறுப்பில் இருக்கிறார்கள்.அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவர்களின் பொருள்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்,அவர்களின் மத தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவர்களில் யாராவது ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராக நடந்தால் அந்த தனி நபருக்காக நஜ்ரான் நாட்டையும் அந்த நாட்டு மக்களையும் குற்றம் பிடிக்க கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் எழுதினார்கள்.
அந்த ஒப்பந்தத்தின் மூலம் கியாமத் வரை வரக்கூடிய இஸ்லாமிய சமூகத்திற்கு நாயகம் சகோதர சமயத்தவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்.
எனவே நம்முடைய வாழ்கையின் மூலம் இஸ்லாத்தை வாழ்ந்து காட்ட வேண்டும்.
மதீனாவிலே முஸ்லிம்கள் பெரும் பலத்தோடும் பெரும்பான்மையான மக்களாக இருந்தும் கூட நாயகம் யாரையும் பழிவாங்க சொல்ல வில்லை. மாறாக எல்லோரோடும் இஸ்லாத்தினுடைய ஆணிவேரான பரஸ்ப்பர அன்போடு வாழ கற்றுக்கொடுத்தார்கள்.
இதனால் தான் இஸ்லாம் மிக வேகமாக பரவியது. இன்றளவிலும் நம் நாயகத்தின் வாழ்கையை படித்து விட்டுதானே மக்கள் இஸ்லாத்தை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே நாம் நாயகம் கற்று தந்த உண்மை முஸ்லிம்களாக வாழ கற்று கொள்ளவேண்டும்.
ஹிஜ்ரி ஏழாவது ஆண்டில் யூதர்களோடு கைபர் யுத்தம் நடந்த போது அந்த பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த ஒருவருடத்தில் நாயகம் இஸ்லாத்தை பற்றி சொன்னார்கள் அவர் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். நாயகம் சுவர்கத்தை கொண்டு நன்மாராயம் சொன்னார்கள் அவரும் ஏற்றுக்கொண்டார்.பிறகு இந்த ஆடுகளெல்லாம் இன்ன யூதருடையது நான் இந்த ஆடுகளை என்ன செய்ய வேண்டும் என்று பெருமானாரிடத்தில் கேட்டார். யூதர்களோடு தான் யுத்தம் நடக்கிறது அவர்களின் பொருள்கள் நமக்கு கநீமத்து தான் என்றாலும் கூட அவருடைய வீட்டிலே விட்டு விட்டு வர சொன்னார்கள்.அந்த ஆட்டிடையரும் அதே போல விட்டு விட்டு வந்து யுத்தத்தில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார்.நாயகமே ஜனாஸா தொலவைத்து விட்டு இவர் ஒரே ஒரு சஜ்தா கூட செய்யாமல் சுவர்க்கம் நுழைகிறார் பாருங்கள் என்று சொல்லி விட்டு அவருக்காக துஆ செய்து விட்டு இவருடைய கஃபன் ஆடைக்குள் இரண்டு ஹுருல் ஈன்கள் போட்டி போடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
யுத்த நேரத்திலும் கூட நாயகம் நேர்மையாக நடந்து கொண்டார்கள் அந்த ஆடுகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு கநீமத்து தான் இருந்த போதிலும் இதனால் பிற்காலத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு அவ பெயர் வந்திவடக்கூடாது என்று நேர்மையை போதித்தார்கள்.
அதேபோல ஹிஜ்ரத்தின் போதும் கூட தன் பிரயாண வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு ஹுவைகிக் என்ற ஒரு மாற்று மதத்தவரை தான் நியமித்தார்கள்.
அதே போல முனாஃபிக்குகளின் தொல்லைகள் சாதாரணமானதல்ல. முஸ்லிம்கள் போலவே வாழ்ந்து கொண்டு பெரும் துரோகம் செய்தவர்கள். அவர்களின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் அவனின் மரண நேரத்தில் நான் மரணித்த பிறகு நாயகத்தின் ஜுப்பாவால் எனக்கு கஃபணிடவேண்டும், நாயகம் தான் எனக்கு தொழ வைக்க வேண்டும் என்று தன் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் (ரலி)அவர்கலி டத்தில் வசீஅத் செய்து விட்டு மரணித்து விட்டான் அவரும் அந்த செய்தியை பெருமானாரிடத்தில் சொன்ன போது நாயகம் தன் ஜுப்பாவையும் கலட்டி கொடுத்து விட்டு தொலவைக்கவும் சென்ற போது ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் இவன் பெரும் முனாஃபிக்அவனுக்கு நீங்கள் தொழவைக்க வேண்டாமென்று நாயகத்தை தடுத்தார்கள் ஆனால் பெருமானார் சென்று தொழவைத்தார்கள். பிறகு இறை வசனம் இறங்கியது.
وَلَا تُصَلِّ عَلَىٰ أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِ ۖ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.(9:84)
இறைவனே தடுக்கும் அளவு நாயகம் எல்லோருக்கும் உபகாரம் செய்தார்கள்.
எனவே இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக்கொண்டு உண்மை முஸ்லிம்களாக வாழ்வோம். எல்லோரோடும் நாம் எப்படி பழக வேண்டும் என்பதை விளங்கி இஸ்லாத்தை நம் வாழ்கையின் மூலம் பரப்புவோம். இஸ்லாமிய எதிரிகளின் துர் பிரசாரத்தை தடுப்போம் மக்களுக்கு இஸ்லாத்தின் உண்மை முகத்தை காட்டுவோம். இந்தியாவிலும், முழு உலகத்திலும் இஸ்லாத்திருக்கு எதிராக நடக்கும் கலவரங்களை தடுப்போம். அமைதியான இஸ்லாமை அழகான வாழ்க்கை நெறியாக எடுத்து வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
Comments
Post a Comment