வறுமையை ஒழிப்போம்!
بسم الله الرحمن الرحيم
إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் நன்மை, தீமைகளில் அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம் எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

(36:12)
பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த சண் மார்கத்தை அந்த அரேபிய தீபகற்பத்தில் அறிமுக படுத்துவதற்கு முன்புவரை அந்த மக்கள் பெரும் பெரும் பாவங்களை மிக சர்வசாதரணமாக செய்து கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு.
ஆனால் இன்று அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற மாபெரும் நல்லடியார்கள். அவர்களை போன்று இனி உலகம் அழியும் வரை யாரும் ஆக முடியாது என்ற அளவில் அல்லாஹ்விடத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.
எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது ?
நமது நாயகம் அவர்கள் மீது உழைத்த உழைப்புதான் அவர்களை பெரும் தியாகிகளாக மாற்றியிருக்கிறது.
அவர்கள் பாவத்திலிருந்து விலகி கொள்ள நாயகம் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
அவர்கள் யாரின் மீதும் பயமில்லாமல் பெரும் பெரும் பாவங்களை செய்கிறார்கள் என்பதை விளங்கி அவர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தினார்கள்.
அவர்களிடத்தில் கல்வி இல்லாதது தான் அவர்களை பாவங்களை செய்ய வைகிறது என்பதால் அவர்களுக்கு மார்க்க ஞானத்தை புகுட்டினார்கள்.
அடுத்து அவர்கள் பாவம் செய்ய வறுமையும் ஒரு காரணம் என்று அவர்களிடத்திலிருந்த வறுமையை ஒழிப்பதில் மிக கவனம் செலுத்தினார்கள்.
(ஜகாத்து) ஏழை வரிகளையும், (ஸதகா) தான தர்மங்களையும் அதிகப்படுத்தினார்கள்.
ஏனென்றால் வறுமை ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிடும்.
பெருமானாரே ஒரு ஹதீஸில் வறுமை மனிதனை குஃப்ரில் சேர்த்து விடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஹதீஸை மெய் படுத்தும் விதம் இன்று கிறிஸ்துவ மிஷனரிகள் வறுமையை காட்டி பல மத சகோதரர்களை மதம் மாற்றி கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் கூட கொருக்குப்பேட்டையில் பல முஸ்லிம் குடும்பகள் வறுமையை காரணம் காட்டி கிறிஸ்துவர்களாக மாறிவிட்டதை நாம் பத்திரிகைகளில் படித்திருக்கலாம்.
எனவே தான் நாயகம் தன் வழமையான துஆவில் اللهم إني أعوذ بك من الكفر و الفقر யா அல்லாஹ் என்னை குஃப்ரிலிருந்தும், வருமையிலிருந்தும் பாதுகாப்பாயாக என்று கேட்டுக்கொண்டே யிருந்தார்கள்.
அதேபோல செல்வத்தையும் நாயகம் கேட்டார்கள்.
اللهم إني أسألك ألهدى و التقى و العفاف و الغنى
என்ற துஆவையும் நாயகம் ஓதிக்கொண்டே இருப்பார்கள்.
வறுமையை ஒழிக்க ஜகாத்து, ஸதகா, குர்பானிகள் இருந்தாலும் வறுமையை முழுமையாக ஒழிக்க நாயகம் ஏற்படுத்தி கொடுத்ததுதான் (وقف).
இப்போதுள்ள சூழ்நிலையில் நன்மையான காரியங்களில் மிக முக்கியமானது வறுமையை ஒழிக்க நம் பொருள்களை அல்லாஹ்விற்காக
وقف செய்வதுதான்.
وقف என்றால் என்ன ?
ஒருவர் தனக்கு சொந்தமான எதாவது ஒரு பொருளை நன்மையை மட்டும் நோக்கமாக வைத்து அல்லாஹ்விற்காக முழுமையாக கொடுப்பது.அதை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. அதன் மூலம் வரும் லாபங்களை முஸ்லிம்களுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் யாராவது அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவன் வாக்குறுதிகளை உன்பைபடுத்தி ஒரு குதிரையை அல்லாஹ்விற்காக வக்ஃப் செய்தால்! அந்த குதிரை சாப்பிடுவதும், அது தாகம் தீர்ப்பதும்,அது விட்டைகளை போடுவதும் நாளை மறுமை நாளில் அவரின் மிஸானில் நல் அமல்கலாக நிறுக்கப்படும் என்றார்கள்.
ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஸஹாபாக்களில் வக்ஃப் செய்யாதவர்கள் யாருமே இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
பெருமானார் ஸஹாபாக்களுக்கு வக்ஃபின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி கொண்டேயிருந்தார்கள்.
1.உஹத் போருக்கு சில தினங்களுக்கு முன்னால் முகைரிப் என்ற யூதர் தன் நண்பர்களை அழைத்து நான் இந்த போரில் இறந்து விட்டால் எனக்கு சொந்தமான 7 தோட்டங்களை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் அவர்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி செலவு செய்து கொள்ளட்டும் என்று சொல்லியிருந்தார். அதே போல அவரும் இறந்து விட்டார் அவர் சொன்னது போல் அவரின் 7 தோட்டங்களை நாயகத்திடம் ஒப்படைத்தார்கள் அதை பெற்றுக்கொண்ட நாயகம் யூதர்களில் முகைரிப் சிறந்தவர் என்று சொன்னார்கள்.
2.மஸ்ஜிதுன் நபவியை கட்டும் போது நிறைய இடங்கள் தேவைப்பட்டது பனின்னஜ்ஜார் என்ற கோத்திரத்தாரிடம் அவர்களின் இடங்களை விளக்கி வாங்க நாயகம் கேட்டார்கள் அவர்கள் இடங்களை கொடுத்து விட்டு யாரசூலுல்லாஹ் (ஸல்) நாங்கள் இதன் கூலியை அல்லாஹ்விடம் பெற்று கொள்கிறோம் என்றார்கள்.
3.முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற சமயம் முஸ்லிம்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிக சிரமபட்டார்கள். அப்போது ஒரு யூதனிடம் தான் குடி தண்ணீர் கிணறிந்தது அவனிடத்தில் ஒரு கை நிறைய கோதுமை கொடுத்து முஸ்லிம்கள் குடிக்க தண்ணீர் பெற்று கொண்டிருந்தார்கள் இது முஸ்லிம்களுக்கு மிக சிரமமாக இருந்தது. இதை அறிந்த நாயகம் யாராவது அந்த யூதனிடத்திளிருந்து இந்த கிணறை வாங்கி முஸ்லிம்களுக்கு வக்ஃப் செய்தால் அவர்களுக்கு நான் சுவர்கத்தில் ஒரு கிணறைவாங்கி தருவேன் என்று அறிவிப்பு செய்தார்கள். உடனே ஹழ்ரத் உஸ்மான் (ரலி)அவர்கள் அந்த கிணறை 35000 திர்ஹம் கொடுத்து விளக்கி வாங்கி முஸ்லிம்களுக்காக வக்ஃப் செய்தார்கள்.
4.கைபர் யுத்தத்தின் போது ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு பெரும் நிலம் கிடைத்தது அதை பெருமானாரிடத்தில் சொல்லி இந்த தோட்டத்தின் மூலம் எனக்கு நன்மை கிடைக்க நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்கள். நாயகம் அதை வக்ஃப் செய்ய சொன்னார்கள் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களும் முழுமையாக வக்ஃப் செய்து விட்டார்கள்.
இவை அனைத்துமே சஹாபாக்கள் வக்ஃப் செய்தவைகள். இது போன்றே தாபியீன்களும் தபஃ தாபியீன்களும் நாயகத்தின் வாக்குறுதியை ஏற்று வறுமை முற்றிலும் ஒழிய தன்னுடைய சொந்த பொருட்களை அல்லாஹ்விற்காக முஸ்லிம்களுக்கு வக்ஃப் செய்த நிறைய சம்பவங்கள் இருக்கிறது.
1.கலீஃபா ஹாருன் ரஷீதினுடைய மனைவி ஜுபைதா காத்துன் அம்மையார் ஹஜ்ஜிக்கு சென்றிருந்த போது ஹாஜி மார்கள் தண்ணீருக்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள் அரஃபாவிழும் மினாவிலும் 80 தீனார் கொடுத்து ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்து கொண்டிருந்தார்கள் இன்னும் சில ஹாஜி மார்கள் தண்ணீர் கஷ்டத்தால் இறந்தும் விட்டார்கள் இதை பார்த்த ஜுபைதா அம்மையார் அவர்கள் 17 லட்சம் தீனார் செலவு செய்து அந்த பகுதியில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தார்கள்.
2.இந்தியாவில் கொல்கத்தாவை சார்ந்த நவாப் பரம்பரையிலுள்ள ஸவ்லதுன் நிஸா என்ற பெண்மணி நான் ஹரம்ஷரீஃபில் தீனுடைய கித்மத்திர்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்து மதரஸா சவ்லத்தியா என்ற பெயரில் ஹரமை ஒட்டி மதரஸா ஒன்றை ஆரம்பித்தார்கள் சமீபத்தில் ஹரமின் விரிவாக்க பணியிக்காக நிறைய பெரும் பெரும் ஹோட்டல்கள் இடிக்கப்பட்டது ஆனால் இந்த மதரஸாவை ஒன்றும் செய்ய வில்லை ஏனென்றால் அங்குள்ள நிறைய செல்வந்தர்கள் அந்த மதரஸாவில் ஓதியிருக்கிறார்கள் நாங்கள் ஓதிய மதரஸாவை இடிக்க கூடாது என்று சொல்லிவிட்டதால் அந்த மதரஸா மட்டும் இடிக்க படவில்லை தற்போதும் கூட ஹரமிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த மதரஸா அமைந்திருக்கிறது. நமது தமிழகத்தின் தாய் மதரஸாவான பாகியாத்தை உருவாக்கி அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்)அவர்களும் அந்த மதரஸாவில் ஓதியவர்கள் தான்.
இன்று உலக முழுக்க பாகவிகள் சேவைகள் பல செய்கிறார்கள் என்றால் அதற்க்கு மூல காரணம் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்கள் தான் அவர்கள் கல்வி கல்வி கற்று கொண்டது ஸவ்லத்தியா மதரஸாவில் ஆக இன்று உலக முழுக்க தீனுடைய சேவைகள் பல நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் ஒரு பெண்மணி செய்த வக்ஃபின் மூலம் தான் என்றால் அது மிகையல்ல.
எனவே வறுமை ஒழிய, முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறாமல் இருக்க இளம் பெண்களின் ஈமான் பரிபோகாமலிருக்க நமது முன்னோர்கள் வக்ஃப் செய்தது போல் நமக்கு சொந்தமான பொருட்களை நாமும் வக்ஃப் செய்வோம்.
இன்று எத்தனையோ தேவைகளோடு முஸ்லிம்கள் சிரமப்படுகிறார்கள்.
ஏழை மாணவர்களுக்கு படிக்க பணமில்லை,ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய வசதியில்லை, குமர்களை கரைசேர்க்க ஏழைகள் படும் அவதிகளை நாம் மஸ்ஜித்களில் பார்க்கிறோம், எத்தனையோ ஏழை வியாபாரிகளுக்கு கடன் கொடுக்க ஆளில்லை வேறு வழியில்லாமல் முஸ்லிம்களே வட்டியை ஹலாலாக்கி கொள்கிறார்கள் , இன்னும் எத்தனையோ மஸ்ஜித்களில் 30,40 வருடம் சேவைகள் செய்த ஆலிம்களின் கடைசி காலம் ஒவ்வொரு பள்ளிவாசல்களாக ஏறி ஏறியே காலத்தைகளிக்கிரார்கள். இவை அனைத்தையும் சரி செய்ய நமது பொருட்களை அல்லாஹ்விற்காக வக்ஃப் செய்ய வேண்டும்.
அல்லாஹ் அருள் மறையில் சொல்வது போல்
وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம் என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே என்று கூறுவான்.(63:10)

இந்த வசனத்தின் கருத்து படி அதிகமாக நம் பொருட்களை அல்லாஹ்விற்காக வக்ஃப் செய்வோம். ஏழைகளுக்கு உதவுவோம் வறுமையை ஒழிப்போம் இஸ்லாத்தை பாதுகாப்போம் அல்லாஹ்வின் அருளை பெற்ற நல்லடியார்கலோடு சுவர்க்கம் செல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

jazakallah
ReplyDeletemasha allah
ReplyDelete