உலக வெப்பத்தை குறைப்போம்!

                                    بسم الله الرحمن الرحيم 



 فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنفِرُوا فِي الْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا ۚلَّوْ كَانُوا يَفْقَهُونَ

தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாகத் தம் வீடுகளில் இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர் அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து மற்றவர்களை நோக்கி இந்த வெப்ப காலத்தில் நீங்கள் போருக்குச் செல்லாதீர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது என்று நபியே! நீர் கூறுவீராக. இதை அவர்கள் விளங்கியிருந்தால் பின் தங்கியிருக்க மாட்டார்கள் (9:81)


உலக முழுக்க இஸ்லாம் இன்று மிக வேகமாக பரவ காரணம்! அது இறைவனின் இயற்கை மார்க்கம் என்பதாலும், அந்த மார்கத்தை உலக மக்களுக்கு பரப்ப வந்த நபிமார்களின் நற்குணத்தாலும் தான். 

அதிலும் குறிப்பாக மற்ற நபிமார்களின் நற்குணத்தை காட்டிலும் நமது நாயகத்தின் நற்குணம் உலக மாந்தர்கள் போற்றகூடியது. 

பெருமானாரே ஒரு ஹதீஸில் நான் நற்குணத்தை முழுமை படுத்த வந்திருக்கிறேன் என்று சொல்வார்கள். 

இஸ்லாம் மிக வேகமாக பரவியது,பரவுகிறது, இனி உலகம் அழியும் வரை பரவிக்கொண்டே இருக்கும் என்றால் அதற்கு மூல காரணம் நாயகத்தின் நற்குணம் தான்.

ஆனால் நாம் அந்த நற்குணத்தை பின்பற்றுகிறோமா என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

ஏன் நற்குணம் இல்லா விட்டால் என்ன நேர்ந்து விட போகிறது? முஸ்லிம்கள் இவ்வுலகில் நற்குனத்தோடு வாழாவிட்டால் இறை சாபத்திற்கு ஆளாகுவார்கள்.

இவ்வுலகம் முஸ்லிம்களுக்காக படைக்கப்பட்டிருக்கிறது. வானம்,பூமி,சூரியன்,சந்திரன்,மலைகள்,கடல்கள் மிருகங்கள் போன்ற எல்லா படைப்புகளும் முஸ்லிம்களுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. 

இஸ்லாத்தை ஏற்காத மக்கள் தவறு செய்யும் பொழுது அதன் தண்டனையை மறுமையில் அனுபவிப்பார்கள். 
முஸ்லிம்கள் தவறு செய்வதினால் தான் ஆங்காங்கே இயற்கை சீற்றங்களும், இறை சாபங்களும் இறங்குகிறது. 

இறைசாபம் வேறு, இறை சோதனை வேறு!

நபிமார்களுக்கும், சஹாபாக்களுக்கும் ஏற்பட்டது இறை சோதனை! அந்த சோதனையை ஈமானிய உறுதியோடு வெற்றிகொண்டார்கள். 

இப்போது நமக்கு ஏற்படுவது இறைசாபம்! அந்த சாபத்தை (தவ்பா) பாவமன்னிப்பு கோரி வெற்றியடைய வேண்டும்.

பெருமானார் ஒரு நீண்ட ஹதீஸில் சில தவறுகளை சொல்லி இதை செய்தால் இறை சாபம் இறங்கும் என்று சொன்னார்கள்.          

1) செல்வம் என்பது செல்வந்தர்களுக்கு மத்தியில் சுற்றிகொண்டிருந்தால்,

2) அமானித பொருளை கனீமத் பொருள்களை போன்று 
பயன் படுத்தினால்,

3) ஜகாத்தை கடனை போன்று  நிறைவேற்றினால்,

4) கல்வி கற்பவருக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக இருந்தால், 

5) ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவியிடத்தில் அடிமையாக இருந்தால்,

6) பெற்ற தாயை மதிக்கா விட்டால்,

7) தந்தையை விட நண்பனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்,

8) மஸ்ஜித்கள் (இபாதத்) வணக்கம் புரியும் இடமாக இல்லாமல் கூச்சல்களும், குழப்பங்களும், சண்டைகளும் நிறைந்த இடமாக மாறிவிட்டால்,

9) ஒரு சமூகத்தின் தலைவனாக பெரும் பாவி நியமிக்க பட்டால்,

10) சமூகத்தின் பாவிகள், கேடுகெட்டவர்கலெல்லாம் கண்ணியப்படுத்தப்பட்டால்,

11) ஒருவனின் தீங்குக்கு பயந்து மக்கள் அவனை மதித்தால்,

12) நடனகாரிகளும், ஆபாச பெண்களும் பூபியில் பரவி விட்டால்,

13) சாராயம் அதிகமாகி விட்டால்,

14) சமுதாயத்தின் பின்னோர்கள் முன்னோர்களை திட்டினால்,

மேலே சொல்லப்பட்ட விஷயங்களை முஸ்லிம்கள் செய்தால் தண்ணீரே இல்லாத அனல் காற்று வீசும், ஆங்காங்கே பூகம்பம் ஏற்படும், பூமி பிழந்து மக்களை விழுங்கி விடும், உருமாற்றங்கள் ஏற்படும், கல்மலை பொழியும் இவ்வோவ்வோன்ரும் வரிசையாக நடைபெரும் என்று நாயகம் சொன்னார்கள்.

இவ்வருடம் இப்போது தான் வெயில் காலம் ஆரம்பமாகிறது இதையே நம்மால் தாங்கி கொள்ள முடியவில்லை கடும் வெப்பமும், அனல் காற்றுகளும் வீசுகிறது இன்னும் அக்னி வெயிலுக்கு என்ன ஆக போகிரோமோ தெரிய வில்லை.

அதேபோல இவ்வுலக வெப்பம் மறுமையின் நரக வெப்பத்திற்கு முன்னாள் ஒன்றுமே இல்லை இதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமானது நரக வெப்பம்.

                             قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا
நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது என்று நபியே! நீர் கூறுவீராக.(9:81)

அல்லாஹ்வே நரக நெருப்பை மிக கடுமையானது என்று சொல்கிறான் 

எனவே இவ்விரு வெப்பத்திலிருந்தும்  நாம் பாதுகாப்பு பெற நாம் செய்து கொண்டிருக்கிற பாவங்களை அடியோடு விட்டு விட்டு அல்லாஹ்வும், ரசூலும் வழிகாட்டிய பாதையில் நம் வாழ்க்கை பயணத்தை தொடருவோம், அல்லாஹ்வின் அருள்மழை பொழிய அதிகம் அதிகம் பிராத்திப்போம். 

நாயகம் கற்றுத்தந்த நற்குணத்தோடு வாழ்வோம், எல்லோருக்கும் நல்லவைகளை செய்வோம், பெற்றவர்களை மதித்து, உற்றார் உறவினரோடு சேர்ந்து வாழ்வோம், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்வோம், நமக்கு மத்தியில் இருக்கும் பகைமைகளை தூக்கி எறிவோம், நம் கடைசி மூச்சி இருக்கும் வரை நாம் எல்லோரும் சகோதரர்களாக வாழ்வோம், தீவிரவாதத்தையும்,தீவிரவாத செயயல்களை செய்பவர்களையும் அடியோடு அழிப்போம், ஏகத்துவ பிரச்சாரத்தை நாயகம் கற்று தந்த வழியில் செய்வோம்.     

அல்லாஹ் நம் பாவங்கள் முழுவதையும் மண்ணித்து, அவனது ரஹ்மாத்தான அருள்மழை பொழிய செய்து இப்பூமியின் வெப்பத்தை குறைப்பானாக ஆமீன்.    














Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!