மார்க்க ஞானம் தேவை
بسم الله الرحمن الرحيم
يُؤْتِي الْحِكْمَةَ مَن يَشَاءُ ۚ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான். இத்தகைய ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார். எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.(2:269)
இன்று உலக மக்கள் எல்லாவற்றுக்கும் முயற்சி செய்கிறார்கள்.
ஹதீஸ்கள்:

மாணவர்கள் கல்விக்காக, வியாபாரி வியாபாரத்தில் முன்னேறுவதற்காக, இப்படி அரசியல்வாதிகள், அதிகாரிகள், குடும்ப தலைவர்கள் போன்ற சாதாரண மக்கள் தன் எதிர்கால வாழ்க்கையிக்காக முயற்சி செய்கிறார்கள்.
அதே போல திருடுபவர்கள், கொள்ளையடிப்பவற்கள், கொலைசெய்பவற்கள், மக்களுக்கு அநீதம் செய்பவற்கள், நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள், தீவீரவாதசெயல்களை செய்து விட்டு அப்பாவி மக்களின் மீது பலி போடுபவர்கள் இப்படி தீயவர்களின் முயற்சியும் அன்றாட நடந்து கொண்டேயிருக்கிறது.
அதே போல மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமை பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களின் முயற்சியும் அன்றாட நடந்து கொண்டேயிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமியர்களான நம்மடைய முயற்சி என்னவாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் அருளால் நாம் இன்று நிறைய அமல்கள் செய்கிறோம் ஆனால் அந்த அமல்கள் எப்படி செய்ய வேண்டும் என்ற ஞானம் நம்மிடத்தில் இருக்கிறதா? என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஹதீஸ்கள்:
பெருமானார் ஒரு ஹதீஸில் ஒரு காலம் வரும் அந்த காலத்தில் மக்கள் அதிகமாக அமல் செய்வார்கள் ஆனால் அந்த அமல்களின் ஞானங்களை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள்.
ஒருவர்எப்படி தொழ வேண்டுமென்ற ஞானம் இல்லாமல் இரவு முழுக்க 1000 ரகாத்துகள் தொழுகிறார். இன்னொருவர் தொழுகைகளின் எல்லா முறைகளையும் கற்றறிந்து 2 ரகாத்துகள் தொழுகிறார் இவ்விரண்டு அமல்களில் எது சிறந்தது என்று ஒரு சபையில் ஸஹாபாக்கள் பெருமானாரிடத்தில் கேட்ட போது தொழுகையை எப்படி தோழ என்ற ஞானத்தோடு 2 ரகாத்துகள் தொழுவது ஒன்றும் தெரியாமல் 1000ரகாத்துகள் தொழுவதை விட சிறந்தது என்று நாயகம் பதில் சொன்னார்கள்
ஒன்றும் தெரியாமல் நஃபில்கள் தொழுவதை விட மார்க்க கல்வி கூடங்களில் அமர்ந்து மார்க்க ஞானம் பெறுவது மிக சிறந்தது என்று பெருமானார் சொன்னார்கள்.
நமது முன்னோர்கள் மார்க்க ஞானங்களை கற்று கொள்வதற்காக எவளவு சிரம்மங்களை மேற்கொண்டார்கள்.
உலகம் அறிந்த மாமேதை இமாமுனா அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களுடைய காலத்தில் அரசனுக்கும் அவர்களுக்கும் குர்ஆன் விஷயத்தில் ஒரு பிரச்சனை. இதற்காக அரசன் அவர்களை சிறையில் அடைத்து மரண தண்டனை விதித்தான். அவர்களும் உயிரே போனாலும் சரி உண்மையிக்கு புரனாக நடக்க மாட்டேன் என்று உறுதியோடு இருந்தார்கள். அரசனும் விடுவதாக இல்லை. இறுதியாக தண்டனைக்குரிய நாள் வந்த போது ஒரு மாபெரும் இறை நேசரை இப்படி அநீதமாக இந்த அரசன் கொல்ல போகிறானே என்ற ஏக்கத்தில் ஊர் மக்கள் கூடி ஏக்கத்தோடும், பிராத்தனையோடும் பார்த்தார்கள். இமாமுனா அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களை கொல்வதற்கு முன்னாள் 10 நபர்களை வெட்டி கொலை செய்ய அரசன் உத்தரவிட்டான் அதே போன்று 10 நபர்கள் கொல்லப்பட்டார்கள். இடை இடையே அரசன் இமாம் அவர்களை பார்த்து நீரும் இப்படித்தான் கொல்லப்பட போகிறீர் எனவே உமது தீர்ப்பை மாற்றிக்கொள் என்று சொல்லிக்கொண்டான். இமாம் அவர்களும் மரணித்தாலும் சரி தன்னுடைய சொல்லில் உறுதியாக இருந்தார்கள். இறுதியில் இமாம் அவர்களை கொலை செய்வதற்கு முன்னாள் ஏதாவது கடைசி ஆசை இருக்கிறதா? என்று அரசன் கேட்டான். இமாம் அவர்களும் ஆமாம் என்று சொல்லி விட்டு சுற்றி நின்ற கூட்டத்தை பார்த்து அதிலே இருந்த ஒரு மனிதரிடத்தில் பேச வேண்டும் என்றார்கள். அனுமதியளிக்கப்பட்டது இமாம் அவர்கள் அந்த நபரை அழைத்து நீங்கள் இமாம் ஷாபியினுடைய மாணவர் தானே நானும் இமாம் ஷாபியினுடைய மாணவன் தான் காலுறை அணிந்திருக்கும் போது எப்படி ஒழு செய்ய வேண்டும் என்பதை நான் படிக்க வில்லை எனக்கு அதை பற்றி கற்று கொடுங்கள் என்று கேட்டு கற்றுக்கொண்டு என் ஆசை முடிந்து விட்டது என்னை கொல்லலாம் என்று அரசன் முன் வந்து நின்றார்கள். இதை பார்த்த அரசன் அதிர்ந்து போனான் நாம் இவருக்கு முன்னாள் 10 நபர்களை வெட்டி கொன்றிருக்கிறோம் இரத்த வெள்ளத்தில் ஒரே மிதக்கிறது கொஞ்ஜமும் பயமில்லாமல் ஒரு வரி ஹதீசுக்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு என் கடைசி ஆசை முடிந்து விட்டது என்னை கொல்லலாம் என்று சொல்கிறாரே இவரை மீண்டும் சிறையில் அடையுங்கள் என்று ஆணையிட்டான்.
நம் முன்னோர்கள் உயிர் போகும் கடைசி வினாடியில் கூட மார்க்கத்தை பற்றி தெரிந்து கொண்டு மரணிக்க வேண்டும் என்று ஆசைபட்டார்கள் ஆனால் நமக்கு மார்க்க ஞானம் அறவே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எத்தனையோ பெரும் பெரும் மார்க்க மேதைகள் ஒரே ஒரு வசனத்தின் மூலம் உயர் பதவியை அடைந்திருக்கிறார்கள்.
ஹழ்ரத் சஃதுத்தீன் ஸீராஜி (ரஹ்)அவர்கள் பிஸ்மில்லாஹ் வை ஆராய்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்டதோடு மட்டுமில்லாமல் பெரும், பெரும் ஆலிம்களையும் உருவாக்கினார்கள் பெரும் இறை நேசராகவும் ஆனார்கள் என்பது வரலாறு.
இக்காலத்தில் மார்க்க ஞானம் மிக மிக அவசியம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இஸ்லாமிய எதிரிகள் பல விதத்தில் நம் ஈமானை அழிக்க சூழ்ச்சி செய்கிறார்கள் இத்தகைய தருணத்தில் நமக்கு மார்க்க ஞானம் இல்லாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம்.
பெருமானார் ஸஹாபாக்களிடத்தில் ஒரு மரமிருக்கிறது அதன் இழைகள் உதிராது அது முஸ்லிம்களுக்கு ஒப்பான மரம் அது எந்த மரம் என்று கேட்டார்கள். ஸஹாபாக்கள் நாட்டு மரத்தை யூகித்தார்கள் இருந்தாலும் பெருமானாரிடத்திள் அல்லாஹ்வும், ரசூலும் தான் அறிவார்கள் என்பதாக சொல்ல பெருமானார் பேரித்த மரம் என்று பதில் சொன்னார்கள்.
இப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மார்க்க ஞானத்தை போதித்து கொண்டே இருந்தார்கள்.
மார்க்க ஞானம் இல்லாவிட்டால் நம்மை மிக இழகுவாக ஷைத்தான் வழி கெடுத்துவிடுவான்.
ஷைத்தான் பெரும் பெரும் இறை நேசர்களை எல்லாம் வழி கெடுக்க சென்று அவர்களிடமிருந்த மார்க்க ஞானத்தின் மூலம் விரண்டோடியிருக்கிறான்.
ஹழ்ரத் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் ஷைத்தான் நீண்ட விவாதம் செய்த பிறகு கடைசியாக உமக்கு மார்க்க ஞானத்தை அல்லாஹ் தானே கொடுத்தான் என்று கேட்டான். உனக்கு இதற்கு மேல் பதில் சொல்ல முடியாது நீ இப்படி ஆரம்பித்து எங்காவது போய் நிற்பாய் என்று சொல்லி குர்ஆன் ஓத அவூது பில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க ஷைத்தான் ஏளனமாக பார்த்து சிரித்து விட்டுஉன்னை எல்லோரும் பெரும் இறை நேசர் என்று சொல்கிறார்கள். ஆனால் நீ எனக்கு பயந்து கொண்டு என்னை விட்டு பாதுகாப்பு தேடுகிறாய் ஏன் அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு குர்ஆன் ஓத ஆரம்பிக்க வேண்டியது தானே ஏன் என் பெயரை சொல்லி பாதுகாப்பு தேடுகிறாய் என் மீது உனக்கு பயம் தானே என்று கேட்டான். உடனே ஹழ்ரத் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் இது என் ரப்பினுடைய ஆணை என்பதால் இப்படி துவங்குகிறேன் என்று சொல்லி அவனை துரத்தி விட்டார்கள் என்பது வரலாறு.
இப்படி பெரும் பெரும் மார்க்க ஞானிகளை ஷைத்தான் வழிகெடுக்க சென்று அவர்களின் மார்க்க ஞானத்தின் மூலம் தப்பித்து கொண்டவர்கள் ஏராளம்.
எனவே நமக்கு மார்க்க ஞானம் மிக அவசியம்.
அதேபோல மார்க்க ஞானம் இல்லாவிட்டால் நாம் வெகு இலகுவாக பாவம் செய்ய ஆரம்பித்து விடுவோம் .
இன்று நாம் செய்யும் எல்லா பாவங்களுக்கும் காரணம் நம்மிடத்தில் மார்க்க ஞானம் இல்லாதது தான்.
அதே போல நம்மிடத்தில் மார்க்க ஞானம் இல்லாததை வைத்து தான் சில குழப்பவாதிகள் இன்று நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக அண்ணனை போன்ற ஒன்றுமே இல்லாதவர்களுக்கெல்லாம் இன்று கோடிகணக்கில் சொத்துக்களும்,செல்வங்களும் வரகாரனமும் நம்மிடத்தில் மார்க்க ஞானம் இல்லாதது தான்.
நம்மிடத்தில் மார்க்க ஞானம் இல்லாததை பயன் படுத்திக்கொண்டு நல்லதை சொல்கிறோம் என்ற பெயரில் சில வாலிபர்களை தீனை விட்டு வெகு தூரம் கொண்டு செண்றுவிட்டார்கள்.
எனவே நாம் பாவத்தை விட்டு தப்பிக்கவும், மார்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவும் நமக்கு மார்க்க ஞானம் தேவை.
அதே போல மார்க்க ஞானம் இல்லாதது நம் ஈமானையே இழக்க நேரிடும். இன்று காதல் என்ற பெயரில் பெற்றவர்களை, உடன் பிறந்தவர்களை உறவினர்களை எல்லாவற்றுக்கும் மேலாக ஈமானை விட்டு விட்டு வெளியேறும் கொடுமைகளை நாம் தினமும் பார்த்து கொண்டிருக்கிறோம் எனவே மார்க்க ஞானம் மிக மிக மிக அவசியம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்க ஞானத்தை முழுமையாக தருவானாக ஆமீன்

Comments
Post a Comment