புனித வெள்ளி

                                     بسم الله الرحمن الرحيم

                               وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُم ۚ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًا   بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
                                         (4:156,157,158)


இவ்வுலகில் மனிதர்கள் வழிதவறி செல்லும் போதெல்லாம் அவர்களை நேரிபடுத்துவதற்காக எண்ணற்ற நபிமார்கள் வந்திருக்கிறார்கள், சுஹுபுகள் என்று சொல்லக்கூடிய ஏடுகளும், நான்கு வேதங்களும் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது


அதிலே நம்முடைய நபி பெருமானார் (ஸல்)அவர்கள் இருதியானவர்கள்,நம்முடைய வேதமும் இறுதியானது.இதற்கு  பிறகு எந்த நபியும் வரப்போவதில்லை. எந்த வேதத்தையும் இறைவன் இறக்கிவைக்க போவதில்லை என்று அல்லாஹ் மிக தெளிவாக தன் திரு மறையில் சொல்லி இருக்கிறான். 


இந்த விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


திரு மறையின் ஆரம்ப வசனங்களில் பயபக்தி உள்ளவர்களுக்கு இந்த வேதம் நேரான வழியை காட்டும் என்று சொல்கிறான்.


                              ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ 



இது அல்லாஹ்வின் திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு இது நேர்வழிகாட்டியாகும்.(2:2)


இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லும் பயபக்தி உடையவர்கள் யார்?

அடுத்தடுத்த வசனங்களில் அல்லாஹ்வே சொல்கிறான் 

      وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

நபியே அவர்கள் உமக்கு அருளப்பெற்ற வேதத்தையும் உமக்கு முன்னாள் அருளப்பெற்ற வேதத்தையும் ஈமான் கொள்வார்கள்.


இந்த வசனத்தின் கருத்து படி முஸ்லிம்களாகிய நாம் நமது நாயகத்தையும், நமது வேதைத்தையும் முழுமையாக நம்புவது போல் அவர்களுக்கு முன்வந்த நபிமார்களையும் 
வேதங்களையும் நம்ப வேண்டும்.

அந்தடிப்படையில் திரு மறையில் முன் வாழ்ந்த நபிமார்களின் வரலாறுகளை சொல்லும் போது அந்த சமூக மக்கள் அந்த நபிமார்களை அதிகபடியான பிரியத்தின் மூலமோ அல்லது வெறுப்பின் மூலமோ அந்த நபிமார்களிடம் நடந்து கொண்ட முறையையும் நமக்கு சொல்லி காட்டுகிறான்.

அந்த வரிசையில் ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்களின் பிறப்பை  பற்றி திரு மறையில் அல்லாஹ் நமக்கு சொல்லிகட்டுகிறான்.

இங்கு நாம் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும்.     

நமக்கும் ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது நம்முடைய வேதத்தில் நம் ஷரீஅத்தை பற்றி தானே பேச வேண்டும் நமக்கு எது கூடும், எது கூடாது, நம்மடைய தொழுகை, நோன்பு,ஜகாத் நம்முடைய அமல்கள், நம்முடைய இறைபக்தி, நாம் நம் நபியை எப்படி நேசிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லித்தரும் வேதத்தில் முன் சென்ற சமூகத்தினருக்கு அனுப்பப்பட்ட நபியின் பிறப்பு பற்றி நமக்கு என்ன தேவை இறக்கிறது என்று யோசித்தால் தான்   நமக்கு விளங்கும். 

நம் நபியும் அதற்க்கு முன்னாள் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் வெவ்வேரானவர்களல்ல! நமது நாயகத்திற்கு  எந்த ரப்பிடட்திலிருந்து வேதம் வந்ததோ அதே ரப்பிடத்திளிருந்து தான் எல்லா நபிமார்களுக்கும் வேதம் கொடுக்கப்பட்டது. பெருமானார் முந்தைய நபிமார்களை பற்றி குறிப்பிடும் போது என்னுடைய சகோதரர்கள் என்று குரிபிட்டார்கள். ஏனென்றால் அவர்களெல்லாம் ஒரே இனம் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள்.எனவே தான் அல்லாஹ் அவன் அனுப்பிய எல்லா நபிமார்களின் வரலாறுகளை பற்றியும் நமக்கு தெளிவு படுத்துகிறான்.ஏனென்றால் நம்முடைய வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்களித்ததை போன்று முன் இறங்கிய எந்த வேதத்தத்தையும் அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்கவில்லை.   


எனவே முன் உள்ள வேதங்களை  மக்கள் அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி கொண்டார்கள்.

அது தவ்ராததாக இருக்கட்டும், ஜபூராக இருக்கட்டும், அல்லது இன்ஜீளாக இருக்கட்டும் எல்லா வேதங்களையும் மக்கள் மாற்றிவிட்டதின் மூலம் அதனுடைய புனித தன்மையை அந்த வேதங்கள் இழந்து விட்டது.


எனவே தான் உலக முடிவு நாள் வரை யாராலும் அழிக்க முடியாத, பாதுகாப்பு பொறுப்பை அல்லாஹ் தன் கரத்தில் வைத்திருக்கும்  நம்முடைய திரு மரையிலே எல்லா நபிமார்களை பற்றியும் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் அல்லாஹ்  சொல்லியிருக்கிறான்.

 இப்போது இதை பற்றி பேச காரணமென்ன?இன்றைய தினம் புனித வெள்ளி என்று அழைக்கபடுகிற கிருஸ்துவர்களுக்கு விசேஷமான தினம்.

கிருஸ்துவர்களுக்கு நிறைய பண்டிகைகள் இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு  ஏன் புனித வெள்ளியை பற்றி மட்டும் பேச காரணம் என்னவென்றால் நமக்கும் புனித வெள்ளியிக்கும் சம்மந்தம் இருக்கிறது.

அது என்ன என்பதை புரிந்து கொண்டு கிருஸ்துவ சகோதரர்களுக்கு எடுத்து சொல்வது நம் கடமை.

ஏனென்றால் கிருஸ்துவ சகோதரர்கள் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ளாமல்  அவர்களும் நரகிற்கு செல்வதோடு எல்லோரையும் பிரசாரத்தின்  மூலம் கிருஸ்துவர்களாக மாற்றி நரகிற்கு இழுத்து செல்கிறார்கள்.

சரி  புனித வெள்ளி என்று கிருஸ்துவர்கள் எதை கொண்டாடுகிறார்கள் என்பதை முதலில் பார்த்து விட்டு அல்லாஹ் சொல்வதை பார்ப்போம்.

உண்மையிலே இது அவர்களுக்கு துக்க வெள்ளி  புனித வெள்ளி  இல்லை ஏனென்றால் அவர்களின் கருத்து படி இன்று தான் ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்கள் சிலுவையில் அறைய பட்டு ஞாயறு அன்று உயிர்பித்தேளுந்தார் என்பது அவர்களின் கொள்கை அந்தடிப்படையில் கிருஸ்துவ சகோதரர்கள் ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்கள் சிலுவையில் அறைய பெற்ற இந்த நாளை அவர்கள் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் மாறாக விளக்கம் இல்லாததால் புனித வெள்ளி என்று கொண்டாடுகிறார்கள்.

ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்கள் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு 70 வருடங்களுக்கு பிறகு  பிறந்தவன் சென்ட் பால் என்று அழைக்க படுகிற பவுல் அடிகளார் இவன் ஒரு யூதன். இவன்தான் கிருஸ்துவர்களுக்கு  முதல் எதிரி .இவன்தான்   முதன் முதலில் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என்று சொல்கிற மூன்று தெய்வ கொள்கையை பரப்பியவன்.

ஹழ்ரத் ஈஸா (அலை)அவர்கள் போதித்தது ஏக இறைவனை வணங்க வேண்டும் என்று தான் இருந்தது. பைபிளில் பல மாற்றங்கள் செய்த பிறகும் கூட இன்றளவும்  ஹழ்ரத் ஈஸா (அலை) அவர்கள் வசனங்கள் இருக்கிறது.

ஆனால் இந்த  பவுல் அடிகளார் எழுதி வைத்த தவறான கொள்கையை தான் கிருஸ்துவர்கள் உண்மை என்று நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள்.



சரி உண்மை என்ன? 

ஹழ்ரத் ஈஸா (அலை) அவர்கள் ஒரு அற்புதமான படைப்பு எப்படி ஹழ்ரத் ஆதம்  (அலை) யாருடைய துணையும் இல்லாமல் அல்லாஹ் படைத்தானோ அது போன்று எந்த ஆணும் தீண்டாமல் ஹழ்ரத் ஈஸா (அலை) அவர்கள் ஹழ்ரத்மர்யம் அலை வயிற்றில் உருவாக்கினான் இது சத்திய உண்மை ஆனால் இந்த நிகழ்வை கிருஸ்துவர்கள் ஆண் துணை இல்லாமல் படைக்க பட்டதால் அவர்களின் தந்தை தேவன் தான் எனவே ஹழ்ரத் ஈஸா (அலை) தேவ குமாரன் என்று சொன்னார்கள். 

இதே சம்பவத்தை யூதர்கள் அன்னை மர்யம் அலை அவர்களை தவறாக சொன்னார்கள்.

இந்த இருவருக்கும் மாற்றமாக இஸ்லாமிய கொள்கையை அல்லாஹ் சொல்கிறான் 

     












                                                      وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُم ۚ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًا   بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
                                         (4:156,157,158)


 இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).

இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர் அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு அவரைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் மேலும் இவ் விஷயத்தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

 ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான்  இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.



இந்த வசனங்களில் நாம் புரிந்து கொண்டு அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டும்.


கிருஸ்துவர்கள் சொல்வது போல் ஹழ்ரத் ஈஸா (அலை) அவர்கள் வெள்ளிகிழமை  சிலுவையில் அறைய பட்டு ஞாயற்றுக்கிழமை உயிர்பித்தேளுந்தார்கள் என்றால்  வெள்ளியிலிருந்து  ஞாயறு வரை உலகத்தை ஆண்டது யார்? என்று அவர்களிடத்தில் கேட்டு அவர்களுக்கு உண்மையை தெளிவுபடுத்துவது நம் கடமை.இல்லை என்றால் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே அவர்கள் நம்மை பற்றி வழக்கு தொடுத்தால் நாம் பதில் சொல்லி ஆகவேண்டும்.


எனவே இந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுவோம் சத்திய மார்கத்தை அதன் துயவடிவில் பின்பற்றுவோம் எல்லோரோடும் சுவர்கத்தில் ஒன்றாக நுழைவோம்.


அல்லாஹ் உலகில் எல்லா முஸ்லிம்களுக்கும் உதவுவானாக சங்கை மிகுந்த ஆலிம் பெருமக்களே நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை தாங்கள் என்னை விட மிக உயர்ந்தவர்கள். உலகில் எங்கெல்லாம் மக்கள் சிரமப்படுகிரார்களோ எல்லா மக்களுக்காக தாங்களும் ஜும்ஆ துஆ செய்யுங்கள்  எல்லா மக்களையும் துஆ செய்ய கேட்டுக்கொள்ளுகள் அல்லாஹ்   


எல்லா மக்களுக்கும் வெற்றியை தருவானாக ஆமீன் 
  

Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!