மஸ்ஜித்களின் சிறப்புகளும்,ஒழுக்கங்களும்

                           بسم الله الرحمن الرحيم 


وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ ۚ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَىٰ ۖ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ

لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ


     
 (9:107,108)


உலகிலேயே மிக சிறந்த இடம் அல்லாஹ்வின் மஸ்ஜித்கள் தான்.

மஸ்ஜித்கள் இஸ்லாமிய சின்னங்கள், அல்லாஹ்வின் அருளை அவனிடமிருந்து நமக்கு பெற்று தரும் சாதனம்.

மஸ்ஜித்கள் மூலம் தான் நம் ஊர்கள் செளிப்பகிறது.


எந்த பகுதியில் மஸ்ஜித்கள் இல்லையோ அந்த பகுதி மக்களோடு நான் யுத்த பிரகடனம் செய்வேன் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்.
அந்தளவுக்கு 
மஸ்ஜித்கள் மிக அவசியமானது. 

இன்று மஸ்ஜித்களை அழிப்பதற்காக காவியர்களும்,இஸ்லாமிய எதிரிகளும் கடுமையான திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள். 
இந்தியாவிலுள்ள எல்லா மஸ்ஜித்களையும் கோவில்களாக மாற்ற வேண்டும் என்பது அவர்களின் வெறி. அதனடிப்படையில்தான் பார்பர் மஸ்ஜிதை இடித்தார்கள் இன்னும் பல மஸ்ஜித்களை தகர்க்க திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்  இந்த மஸ்ஜித்களின் மூலம் தான் இந்த பூ உலகிற்கு அருள் இறங்குகிறது என்பது 
அவர்களுக்கு விளங்கவில்லை.அல்லது விளங்காததை போல நடிக்கிறார்கள்.

எனவே நாம் அதிகமான மஸ்ஜித்களை உருவாக்குவதிளும், நம்மிடம் கைவசம் இருக்கும் மஸ்ஜித்களை சீராக பராமதிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பெருமானார்  இந்த சமூகத்திற்கு பள்ளிவாசல்களை மிக முக்கியமாக அம்சமாக  கருதினார்கள். எனவே தான் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் சென்ற போதும்  மதீனாவின் எல்லை பகுதியான குபாவில் 3 வாரம் பெருமானார் தங்கினார்கள் அங்கு கூடாரம் அடித்து தொழுவதற்காக ஏற்பாடு செய்தார்கள்.தீனாவிற்கு சென்ற உடனேயும் மஸ்ஜிதுன் நபவியை நிறுவினார்கள். ஆக இந்த  இஸ்லாமிய சமூகம் மஸ்ஜிதுடைய தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்பது தான் பெருமானாரின் ஆசை.அப்போது தான் இந்த சமூகம் ஒரு சீரான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தான் நாயகத்தின் கருத்து.

முஸ்லிம்களான நாம் பள்ளிவாசல்களை வெறும் தொழும் இடமாக மட்டும் பார்க்காமல்  

பள்ளிவாசல்களை பல்கலைகழகங்களாக பார்க்க வேண்டும்.

இது நம்முடைய கருத்தல்ல பெருமானாரின் காலத்து
 மஸ்ஜித்கள் அப்படித்தான் இருந்தது.

நாயகம் (ஸல்)அவர்கள் இந்த சமூகத்திற்கு கற்று தந்த பாடங்களில் இதுவும் ஒன்று.

பெருமானார் (ஸல்)அவர்கள் சத்திய சஹாபாக்களை உருவாக்கும் ஸ்தலமாக பள்ளிவாசல்களை பயன்படுத்தினார்கள்.

பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு ஈமான் போதிக்க பட்டது.
பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு ஒழுக்கங்கள் போதிக்க பட்டது.
பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு நாகரீகங்கள் போதிக்க பட்டது.
 பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு
நீதி நேர்மைகள் போதிக்க பட்டது. பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு யுத்த கலைகள் கற்று கொடுக்கப்பட்டது. பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு நேர்மையான வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்று கொடுக்கப்பட்டது.
 பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு நேர்மையான இஸ்லாமிய ஆட்சி முறைகள் கற்று கொடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு மனைவி மக்களை  எப்படி பராமரிக்க வேண்டும் என்று கற்று கொடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு தாய் தந்தையர்களின் கண்ணியம் போதிக்க பட்டது. பள்ளிவாசலில்தான் சஹாபாக்களுக்கு பெரியவர்களின் மீது மரியாதையும், சிறியவர்களின் மீது அன்பு காட்டுதலும் போதிக்க பட்டது.

இஸ்லாத்தினுடைய அனைத்து அடிப்படை விஷயங்களையும்  சஹாபாக்களுக்கு மஸ்ஜிதில் வைத்துதான் நாயகம் போதித்தார்கள்.

அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும்,எப்படி தோழ வேண்டும்,நோன்பு எப்படி நோற்க வேண்டும்,ஜகாத் எப்படி,ஹஜ் எப்படி இவை அனைத்தும் இங்கு வைத்துதான் போதிக்கப்பட்டது.


ஆக பெருமானாரின் காலத்தில் பள்ளிவாசல்கள் பல்கலை கழகங்களாக திகழ்ந்தது.

எனவே
நாம் மிக சிரமப்பட்டு பல லட்சங்கள் செலவு செய்து கட்டும் மஸ்ஜித்கள் வெறும் ஐ வேலை தொழுகைக்காக இல்லாமல் ஒரு முஹல்லாவிலுள்ள முஸ்லிம்களின் இம்மை மறுமையின் வெற்றிக்காக மஸ்ஜித்கள் அமைய வேண்டும். பொதுவாக இஸ்லாமிக் ஷரீஅத் செண்டர்களாக மஸ்ஜித்கள் திகழ வேண்டும்.அதற்க்கு எல்லா வகையிலும் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த  வேண்டும்.

ஒவ்வொரு மஸ்ஜிதும் மதீனா முனவ்வறாவாக மாற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.நம் 
முஹல்லாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் சஹாபாக்களை போன்று ஆக வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட வேண்டும்.....

பெருமானார் (ஸல்) அவர்கள் மஸ்ஜித்களின் சிறப்பு பற்றி நிறைய சொல்லிருக்கிறார்கள் 


                           
ஸ்ஜித்களின் சிறப்புகள் 


ஹதீஸ்கள்:

 
1.வீடுகள் சூழ்ந்துள்ள தெருக்களில் மஸ்ஜித்கள் கட்டுமாறும்,அவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும்,அவற்றில் நறுமணம் கமழச்செய்யுமாரும் பெருமானார் கட்டளை இட்டார்கள் என ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல்:திர்மிதீ)



2.உங்களின் பகுதிகளில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது மஸ்ஜித்கள் மிக வெறுப்பானது கடைவீதிகள் (
அறிவிக்கிப்பவர் அபு ஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்)


3.யார் வீட்லேயே ஒழு செய்து விட்டு தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு வருகிறாரோ  அவரின் இரு எட்டுகளில் ஒரு  எட்டுக்கு அவரின் பாவம் மன்னிக்கப்படுகிறது மற்றொரு 
எட்டுக்கு அவரின் அந்தஸ்து உயர்கிறது.என்று பெருமானார் சொன்னதாக  அபு ஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள் (நூல்:முஸ்லிம் )

4.தொழுகைக்காக வீட்டில் ஒழு செய்து விட்டு மஸ்ஜிதுக்கு வந்தால் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டி வருபவரை போன்று அல்லாஹ் ஆனந்தம் அடைகிறான் என்று பெருமானார் சொன்னதாக அபு உமமாஹ் (ரலி)அறிவிக்கிறார்கள்                   (நூல் :அபு தாவூத்)

5.ஒரு நாள் பெருமானார் அல்லாஹ்வை கனவில் கண்டார்கள்  அப்போது அல்லாஹ் பெருமானாரிடத்தில் மனிதர்களின் எந்த அமல்களை  எடுத்துவர மலக்குகள் போட்டியிடுகிறார்கள் என்று 
அல்லாஹ் கேட்க?அல்லாஹ்தான் அறிந்தவன் என்று நாயகம் சொல்ல அல்லாஹ் அதனின் ஞானத்தை கற்று தந்தான் பிறகு கேட்டான் அப்போது பெருமானார்  சொன்ன அணைத்துமே  மஸ்ஜித் சம்பதபட்ட விஷயங்கள்  தான். 

1.மஸ்ஜிதில் அமைதியாக அமர்ந்திருப்பது
2.
மஸ்ஜிதில் திக்ர் செய்து கொண்டிருப்பது
3.சுன்னத் தொழுகைகளை முடித்து விட்டு ஃபர்ல் 
தொழுகைக்காக காத்திருப்பது
4.தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு நடந்து வருவது.

போன்ற அமல்களுக்காக மலக்குகள் போட்டியிடுகிறார்கள் என்று நாயகம் சொன்னார்கள்.

6.யாருடைய உள்ளம் மஸ்ஜிதில் இலகித்து விட்டதோ அவருக்கு நாளை மறுமையில் நிழலே இல்லாத நேரத்தில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும் என்று பெருமானார் சொன்னார்கள்.

7.நீங்கள் காடை குருவியின் வீட்டை போன்றானது மஸ்ஜிதை கட்டிகொல்லுங்கள் என்று பெருமானார் சொன்னார்கள். இந்த  ஹதீசுக்கு 
முஹத்திஸீன்கள்  காடை குருவி அதன் கூட்டை சுத்தமாக வைத்திருக்கும், கூட்டிற்குள் அமர்ந்து சப்தம் போடாது  எனவே நாமும் மஸ்ஜித்களை சப்தமில்லாமலும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று விளக்கம் தருவார்கள்.  

 சம்பவங்கள் :


1.ஒரு அன்சாரி சஹாபியின் வீடு மஸ்ஜிதுன் நபவிலிருந்து மிக தூரமாக இருந்தது அவர்கள் எல்லா தொழுகைகளுக்கும் சரியாக வந்து விடுவார்கள் ஆனால் மிக சிரமப்பட்டு வருவார்கள் இதை அறிந்த சில சஹாபாக்கள் அவரிடம் சென்று நீங்கள் ஒரு கழுதையை வாங்கி கொண்டால் அதன் மீது சவாரி செய்து தோழ வந்தால் வெயிலின் வெப்பத்திலிருந்தும், விஷ பூச்சிகளின் தீங்கிலிருந்தும் உம்மை பாதுகாத்து கொள்ளலாமே என்று கேட்டார்கள். அதற்கவர் நபியின் வீட்டிற்க்கு அருகில்  ஏன் 
வீடு இருக்க வேண்டுமென அல்லாஹ்வின் மீது சத்தியமாக விரும்பவில்லை என்றார். அவர் சொன்னதை சஹாபாக்கள் நபியிடத்தில் சொன்னபோது பெருமானார் அந்த அன்ஸாரி சஹாபியை அழைத்து ஏன் இப்படி சொன்னீர்கள் என்று விசாரித்தார்கள்.
அதற்கவர் யாரசூலுல்லாஹ் எனக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ரப்பிடத்தில் பெரும் 
 கூலிகிடைக்க வேண்டுமென்று ஆசைபடுகிறேன் என்று சொன்னார்கள்.இதை கேட்டவுடன் பெருமானார் நீர் நினைத்தது உமக்கு உண்டு என்றார்கள்.

2.ஹழ்ரத் தமீமுத்தாரி (ரலி)அவர்கள் ஃபாலஸ்தீன் சென்ற போத விளக்கு போன்று வெளிச்சம் தரும் ஒரு பொருளை வாங்கி வந்து மஸ்ஜிதுன் நபவியில் தொங்க விட்டார்கள் அதன் மூலம்  மஸ்ஜிதுன் நபவி மிக பிரகாசமாக இருந்ததை பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்து  யார் இதை செய்தது என்று கேட்க! ஹழ்ரத் தமீமுத்தாரி (ரலி)அவர்கள்நான் தான் செய்தேன் என்று சொல்ல பெருமானார் அவர்களுக்காக நிறைய துஆ செய்தார்கள். நீங்கள் மஸ்ஜிதை ஒளியாக்கியதர்க்காக அல்லாஹ் உம்முடைய துன்யாவையும், ஆகிரத்தையும் அல்லாஹ் ஒளியாக்குவானாக என்று சொல்லி விட்டு   என்னுடைய எல்லா பெண் மக்களையும் நிக்காஹ் செய்து கொடுத்து விட்டேன் இப்போது எனக்கு பெண் மக்கள் இருந்தால் உமக்கு நிக்காஹ் செய்து கொடுத்திருப்பேன் என்று மிகுந்து மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

3.மஸ்ஜிதுன் நபவியை ஒரு பெண்மணி கூட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தர்கள் ஒரு நாள் பெருமானார் அந்த பெண்மணியை பார்க்க முடியவில்லையே எங்கே என்று சஹாபாக்களிடத்தில் கேட்க்க?அந்த பெண் இறந்து விட்டார் நாங்கள் அடக்கம் செய்து விட்டோம் என்று பதில் சொல்ல நாயகம் என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று மிக வருத்தப்பட்டார்கள் அந்த பெண்ணின் அடக்கஸ்தலத்தை கேட்டறிந்து அங்கு சென்று துஆ செய்தார்கள் பிறகு மஸ்ஜிதை சுத்தம் செய்ததற்காக அந்த பெண்னுக்கு சுவனம் கிடைத்திருக்கிறது என்று சஹாபாகளிடம் பெருமானார் சொன்னார்கள்.


4.ஹழ்ரத் ஜுனைதுள் பக்தாதி (ரஹ்)அவர்கள் பெரும் இறை நேசர் நிறைய தத்துவங்களை சொல்லியிருக்கிறார்கள் 
நிறைய உபதேசங்கள் செய்திருக்கிரார்கள் ஆனால் அவர்கள் சொல்லும் போது நான் மஸ்ஜிதில் கழித்த நேரத்தை தவிர வேறு எதுவும் எனக்கு பயனளிக்க வில்லை என்றார்கள்.

இவை அனைத்துமே மஸ்ஜித்கள் தொடர்பாக வரக்கூடிய சிறப்புகள்.

மஸ்ஜித்களை உருவாக்குபவர்கள், 
அவற்றை பேணுதலாக நிர்வாகம் செய்பவர்கள், அவற்றை சுத்தம் செய்பவர்கள், அவற்றை பறாமரிப்பவர்கள்,   மஸ்ஜித்களுக்கு உதவுபவர்கள், மஸ்ஜித்களின் கண்ணியத்தை பேணுபவர்கள், மஸ்ஜித்களிள் அமைதி காப்பவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மஸ்ஜித்களின் இமாம்கள்  இவர்கள் எல்லோருமே உயர்ந்தவர்கள் என்று பெருமானார் சுப செய்தி சொல்லியிருக்கிறார்கள் 

இந்த  அனைத்து சிறப்புமே  மஸ்ஜித்களை வைத்துதான் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும்.

ஆனால் இன்று நம்மை வைத்துதான் மஸ்ஜித்கள்  நடந்து கொண்டிருப்பதாக நாம் எண்ணி கொள்கிறோம்.


நம்முடைய  சந்தாகளின் மூலமும், 
நம்முடைய நன்கொடைகளின் மூலமும், நம்முடைய உழைப்புகளின் மூலமும்தான் மஸ்ஜித்கள்  நடந்து கொண்டிருக்கிறது என்ற தவறான எண்ணங்களை நம் மனதிலிருந்து நீக்க வேண்டும்.


மஸ்ஜித்கள் இல்லை என்றால் நம்முடைய ஊர்களும், 
நம்முடைய இல்லங்களும் 
அருள் இழந்துவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.

எனவே மஸ்ஜித்களின் விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். 

        
       
       மஸ்ஜித்கள் நமக்கு போதிக்கும் பாடங்கள்!



1. மஸ்ஜித்கள் நமக்கு இறை அச்சத்தை போதிக்கிறது.

 لَا تَقُمْ فِيهِ أَبَدًا
 ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ



 நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது. அதில் நீர் நின்று தொழவும், தொழ வைக்கவும்  மிக தகுதியானது(9:108)

இந்த வசனத்தில் அல்லாஹ் குபா வாசிகளை பற்றி சொல்கிறான்.பெருமானார் குபாவில் தங்கிய மூன்று வாரங்களில் தொழுவதற்காக கூடாரம் 
ஏற்படுத்தினார்கள் பிற்காலத்தில் குபா வாசிகள் அந்த இடத்தில் மஸ்ஜிதை கட்டி துவங்கி வைக்க நாயகத்தை அழைத்தார்கள். நாயகமும் ஒப்புக்கொண்டார்கள் இதை அறிந்த முனாஃபிகீன்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்த இன்னொரு மஸ்ஜிதை கட்டி அதையும் துவங்கி வைக்க முனாஃபிகீன்களும் அழைத்தார்கள் நாயகம் அதற்க்கும் ஒப்புக்கொண்டார்கள். அப்போது இறக்கப்பட்ட வசனம் தான் இது.
அந்த
முனாஃபிகீன்களை 107 வசனத்தில் நாயகத்திற்கு அல்லாஹ் தெளிவுபடுத்துவன்.

وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ ۚ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَىٰ ۖ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ

இன்னும் இஸ்லாம் மார்க்கத்திற்குத் தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு நிராகரிப்புக்கு உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள். நாங்கள் நல்லதையே யன்றி வேறொன்றும் விரும்பவில்லை என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள்  ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்
.(9:107)
 

ஆக ம
ஸ்ஜித்கள் இறை அச்சத்தோடு கட்டப்பட வேண்டும் என்றும்,அந்த மஸ்ஜித்கள் நமக்கு இறை அச்சத்தை போதிக்க வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

ஆனால் இன்று 
ஸ்ஜித்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை பிறிப்பதர்காகவே ஸ்ஜித்கள் கட்டப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இவைகளை தவிர்ந்து கொண்டு 
ஸ்ஜித்கள் இறை அச்சத்தோடு கட்டப்பட வேண்டும்.அந்த மஸ்ஜித்கள் நம்மை  இறை அச்சம் உள்ளவர்களாக ஆக்க வேண்டும்.

2.அடுத்து மஸ்ஜித்கள் நமக்கு சுத்தத்தை போதிக்கிறது!
                                                    ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
 அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(9:107)


மேலே சொல்லப்பட்ட வசனத்தின் முடிவு இது. குபா வாசிகள் சுத்தமானவர்கள் என்று அல்லாஹ் சான்று பகருகிறான்.

 இந்த வசனம் இறக்கப்பட்ட உடன் பெருமானார் 
 குபா வாசிகளை அழைத்து நீங்கள் எப்படி சுத்தம் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்களை சுத்தமானவர்கள் என்றுபாராட்டி  சொல்ல காரணம் என்ன? என்று கேட்ட பொது.  குபா வாசிகள் யாறஸூலல்லாஹ் எங்களுக்கு எத்தகைய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டாலும் நாங்கள் சிறுநீர் கழித்து விட்டு செங்கலில்  சுத்தம் செய்து விட்டு மீண்டும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வோம் என்று பதில் சொன்னார்கள்.

இந்த செயல் அல்லாஹ்விற்கு மிக  பிடித்து போய் கூர்ஆனில் அவர்களை புகழ்ந்து பேசிவிட்டான் என்று முஃபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகிறார்கள்.


இந்த அடிப்படையில் தான் இன்று மஸ்ஜித்களில் பாத்ரூம்களும் ஒழு செய்ய தண்ணீரும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மற்ற மதங்களின் வணக்கஸ் தலங்களில் இல்லாத ஒரு ஏற்பாடு நம் மஸ்ஜித்களில் செய்ய படும் காரணம் இது தான்.

ஆக மஸ்ஜித்கள் நமக்கு சுத்தத்தை போதிக்கிறது.

     
    

3.அடுத்து மஸ்ஜித்கள் நமக்கு நேரம் தவறாமையை  போதிக்கிறது!

                   
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا

ஏனெனில்  நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது (4:103)


இந்த வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் அந்தந்த வேலைகளை 
அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று மஸ்ஜித்கள்  போதிக்கிறது.

4.
அடுத்து மஸ்ஜித்கள் நமக்கு அமைதியை போதிக்கிறது!

மஸ்ஜித்களில் எப்போதுமே 
அமைதியை கடைபிடிக்க வேண்டும். எனவே தான் இமாம் தொழுகைக்காக தக்பீர் கட்டி விட்டால் முஸள்ளிகள் அமைதியாக இமாமை பின்பற்ற வேண்டும் என்பதும் இமாம் குத்பா பிரசங்கம் செய்யும்போது எல்லோரும் அமைதியாக கேட்க வேண்டும் என்றும் போதிக்க படுகிறது.     

5.அடுத்து மஸ்ஜித்கள் நமக்கு சமத்துவத்தை  போதிக்கிறது!

தொழுகைக்காக வரிசையில் நிற்கும் போது ஏழை என்றோ பணக்காரர் என்றோ பாகுபாடு இல்லாமல் ஒரே வரிசையில் நிற்பதின் மூலம் 
மஸ்ஜித்கள் நமக்கு சமத்துவத்தை போதிக்கிறது.

A P J அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போது ஒரு நாள் ராமேஸ்வரத்திற்கு ஜும்மா விற்கு வருவதாக சொல்லி இருந்தார் அவருக்காக முதல் வரிசையில்  இடம் போட்டு வைத்திருந்தார்கள் அவர் வர தாமதமாகி விட்டதால் தொழுகை ஆரம்பமாகி விட்டது அவர் கடைசி வருசையில் நின்று தொழுதார் மக்களெல்லாம் அவரிடத்தில் வருத்தம் தெரிவித்தார்கள் அவர் இது தான் சரி இப்படித்தான் இருக்க வேண்டும் இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது என்றெல்லாம் அவர் சொன்னார் என்பது பத்திருகை செய்தி.

அதேபோல சவ்தி மன்னர் காலித் டெல்லி வந்திருந்த போதும் 
டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் படியில் நின்று மிஸ்கீன்களோடு  தொழுதார். அந்த மஸ்ஜிதின் இமாம் உட்பட எல்லோருமே மிக வருந்தி மன்னிப்பு கேட்க அவருக்கு ஒன்றும் விளங்காமல் காரணம் கேட்டு விட்டு இது தானே சமத்துவம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.

பள்ளி வாசல்களில் எந்த பாகுபாடும் இல்லை யாராக இருந்தாலும் சமம் தான் ஆட்சியாளர்களாக 
இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி எந்த நிலையில் இருந்தாலும் தொழுகை வருசையில் எல்லோரும் சமம் தான். 

எனவே மஸ்ஜித்கள் நமக்கு சமத்துவத்தை  போதிக்கிறது.                  
             மஸ்ஜித்களின் ஒழுக்கங்கள்! 


செய்ய வேண்டியவை :


1.மஸ்ஜிதுக்குள் வரும் போது பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்...என்று சொல்லி மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஓதும் துஆ வை ஓதி வலது காலை எடுத்து வைத்து மஸ்ஜிதுக்குள் செல்ல வேண்டும்.
2.பிறகு இஃ திகாஃப்  நிய்யத் வைத்து கொள்ள வேண்டும்.
3.
 மஸ்ஜிதுக்குள் ஆட்கள் இருந்தால் மெதுவாக சலாம் சொல்லிவிட்டு வர வேண்டும்.யாருமே இல்லாவிட்டால் அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் சாலிஹீன் என்று ஓதி வர வேண்டும்.
4.
மஸ்ஜிதுக்குள்  வந்தவுடன் மஸ்ஜிதின் காணிக்கை தொழுகை 2 ராகாஅத் தொழவேண்டும்.
5.அதிகமாக திக்ர் செய்ய வேண்டும்,குர்ஆண் ஓத வேண்டும்.நஃபீல்கள் அதிகமாக தோழ வேண்டும்.
6.அமைதியாக இருக்க வேண்டும்.இன்னும் என்னென்ன நல் அமல்களை அதிகமாக செய்துகொண்டிருக்க வேண்டும்.  

    

செய்ய கூடாதவை:

ஹதீஸ்கள்:


எவர் தன் காணாமல்  போன பொருளை பள்ளிவாசலில் சப்தமிட்டு தேடுவாரோ அவரை நோக்கி அல்லாஹ் உமக்கு அந்த பொருளை கிடைக்காமல் ஆக்குவானாக என்று கூறவும் ஏனெனில் 
பள்ளிவாசல்கள் அதற்காக கட்ட படவில்லை என்று பெருமானார் (ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்:முஸ்லிம்)


எவரேனும் பள்ளிவாசலில் வியாபாரம் செய்த வண்ணம் விற்று,வாங்கி கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால் அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமில்லாமல் ஆக்குவானாக என்று கூறுங்கள். என்று பெருமானார் (ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்:திர்மிதி)
1.தீனுக்கு சம்மந்தமில்லாத எந்த விஷயமும் பேசக்கூடாது. 2.வியாபாரம் செய்ய கூடாது.
3.சண்டையிடக்கூடாது.
4.அசுத்தமான ஆடை அணிந்து வரக்கூடாது.
5.பச்சை வெங்காயம், அல்லது வெள்ளை பூண்டை  சாப்பிட்டுவிட்டு மிஸ்வாக் செய்யாமல் வரக்கூடாது. 6.விரல்களில் சுடக்கு விடக்கூடாது.
7.தொழுது கொண்டிருப்பவரின் குறுக்கே செல்லக்கூடாது. 8.அருவெறுப்பான செயல்கள் 
செய்ய கூடாது. 9.குறிப்பிட்ட இடத்தில் தான் அமர வேண்டும் என்ற எண்ணம் கூடாது. 

பள்ளி வாசல்களின் கண்ணியம் குறைவாக எந்த காரியமும் செய்யக்கூடாது.

மஸ்ஜித்கள் அல்லாஹ்வின் இல்லங்கள், மஸ்ஜித்களில் மலக்குமார்கள் அமல் செய்வார்கள்,நம் 
மஸ்ஜித்களுக்கு புனித கஃபத்துல்லாஹ் வோடு தொடர்பு இருக்கிறது, நம் மஸ்ஜித்களுக்கு அல்லாஹ்வின் அர்ஷோடு தொடர்பு இருக்கிறது என்ற என்னகளோடு மஸ்ஜிதுக்குள் அமர வேண்டும்.

யார் மஸ்ஜித்களை கண்ணியப்படுத்துகிறாறோ அவரை 
அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான் யார் மஸ்ஜித்களை சிறப்பாக்குகிறாரோ அவரை அல்லாஹ் சிறப்பாக்குவான்.
நம்மை மஸ்ஜித்களை கண்ணியப்படுத்தும் மக்களாக அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன்...... 


   

Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!