நீதியை நோக்கி...!




16:90   إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
ۚ

16:90நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக,


இன்று உலக   மக்கள்  நீதியை  தேடுகிறார்கள்  அமைதியாக  வாழ  வேண்டும்  என்று   ஆசிக்கிறார்கள்ஆனால்  உலகமே  அநீதியில் மூழ்கியிருக்கிறது  .....!

நீதியை  நிலை  நாட்டியது   இஸ்லாம்  தான் .அப்படிப்பட்ட  இஸ்லாத்தையும்,   முஸ்லிம்களையும்  இன்று   சிலர்கள்   தவரான    கண்ணோட்டத்தில்   பார்க்கிறார்கள்.
முஸ்லிம்களால்   சொந்தமாக   கருத்துக்கூட   சொல்ல முடியவில்லை.  கருத்து  சொன்ன   இரண்டு  இளம்  பெண்களை   கைது  செய்து  இருக்கிறார்கள்    ஒரு மருத்துவர்  அந்த   கருத்திற்கு  ஆதாரவு   தெரிவித்ததால்  அவரின்   மருத்துவமனை  உடைக்க  பட்டிருக்கிறது........
ஆனால்  ஒருவன்  உலகில்  பிரபல்யமாக   வழி  இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம் கலை  பற்றியும்  விமர்சிக்க  வேண்டும்  அப்படி விமர்சித்தால்  அவன் உலகளாவிய ஹீரோ வாகி   விடுகிறான் ..
குஜராத்திலே  பசுவை  கொன்றால்  ஏழு ஆண்டு சிறை தண்டனை என்பது  தேர்தல் வாக்குறுதிஆனால் முஸ்லிம்களை கொன்றால் அவர் குஜராத்தின்முதலமைச்சர்..  இது இந்திய அளவில்  நடக்கும்  அநீதம் .
உலக அளவில் பார்த்தாலும் இது தான்  நிலை!இஸ்ரேலின் முன்னால் பிரதமர் ஏரியல் ஷரோன்  சாதாரண ராணுவ அதிகாரி  இவர் எப்படி பிரதமர் ஆனார்?
ராணுவ அதிகாரியாக இருக்கும் போது ஒரு பகுதி முஸ்லிம் கலை கொன்றார் ..
ராணுவ மேஜர் ஜென்ரல் அதிகாரியாக பதவி பிரமாணம் கிடைத்தது ,முஸ்லிம் கலை கொத்து,கொத்தாக கொன்றார் சில காலத்திலேயே இஸ்ரேலின் பிரதமர் ஆகிவிட்டார் ..இது தான் இன்றைய நீதி!
ஒரு மிருகத்திற்கு இருக்கும் மரியாதை கூட இவ்வுலகில் முஸ்லிம்களுக்கு இல்லை.சில ஆண்டுகளுக்கு முன் வோடபோன் விளம்பரத்தில்  ஒரு மிருகத்தை நடக்க விட்டதற்காக " BLUE CROSS"சிலிருந்து  அந்த மிருகம் மன வுலச்சளுக்கு  ஆளாகிவிட்டது  என்று வழக்கு பதிவு  செய்து  வோடபோன்  நிறுவனத்திலிருந்து பல  கோடி  நஷ்ட  ஈடு  வாங்கிய  அம்மையாருக்கு  அவரின்  மகன்  முஸ்லிம்களை  கொலை  செய்யும்  போது  எந்த  மன  உளைச்சலும்  ஏற்படவில்லை  என்றால்  இங்கு  நமக்கு  பெருமானாரின்  ஹதீஸ்   நியாபகம்  வருகிறது ..
   "
ஒரு  காலத்தில்  உங்களை அளிப்பதற்கு  மக்கள்  போட்டி போட்டுகொள்வார்கள் "
என்று  சொன்னார்கள் .....
இந்த  ஹதீஸ்  நிதர்சணமாக  இப்போது  நடக்கிறது ....

இதே  இஸ்லாமியர்களின்  நீதமான  ஆட்சிக்காலத்தை  பாருங்கள் ..

சம்பவம்:"ஹளரத்  உமர் இப்னு  அப்துல்  அஜீஸ்"(ரஹ்அவர்களின்  நீதமான  ஆட்சியின்  பிரதிபலன்  மிருகங்களின்  மீது  வெளிப்பட்டது ..
ஒரு ஓடையில்  ஆடும்,ஓநாயும்  ஒன்றாக  தண்ணீர்  குடித்ததை  மக்கள்  சந்தோஷமாக  பார்த்து  நீதமான  ஆட்சி  முறையை  பாராட்டினார்கள்  சில  நாட்களுக்கு பிறகு  அதே ஓடையில்  ஆட்டை  ஓநாய்  அடித்து  கொன்றது  மக்கள்   உமர் (ரஹ் )  இறந்து  விட்டாரோ  என்று  யூகித்தார்கள்  சிறிது  நேரத்தில்  உமர் (ரஹ் )  இறந்து விட்டதாக  செய்தி  கிடைத்தது.. மனிதர்களின் மீது நீதமாக  ஆட்சி  புறிந்த காரணத்தால்  அதன்  வெளிபாடு  மிருகங்களின்  மீதும்  தென்பட்டது

சம்பவம் :ஹஜ்ரத் " உமர்  இப்னு    அப்துல்  அஜீஸ் "(ரஹ் )அவர்களின்   ஆட்சி  காலத்தில்  சமர்கந்தில்  சில  அநீதகாரர்கள் கிளம்பியிருக்கிறார்கள்  என்று அரசுக்கு செய்தி வந்தது சமர்கந்தின் கவர்னர்ஹஜ்ரத் ஹுதைபா ரஹ் "அவர்களால் அந்த அநீதகாரர்களை  கண்டுபிடிக்க முடியவில்லை அங்கிருந்து ஒரு பகுதி மக்களை நாட்டை விட்டு வெளியேற சொன்னார்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஹஜ்ரத் உமர் ரஹ் அவர்கள் சந்தேகத்தின் பெயரில் பொது மக்கள் பாதிக்க  பட கூடாது  தவறு செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை  தண்டியுங்கள்  ஆனால் சந்தேகத்தின் பெயரில் யாரையும் தண்டிக்க கூடாது  என்று உபதேசம் செய்தார்கள் ......
இது தான் இஸ்லாமிய நீதி .

ஆனால் இன்று சந்தேகத்திலேயே  சிறைகளெல்லாம்  நிறைகிறது .அந்த சந்தேகமும் வெறும் முஸ்லிம்களின் மீது மட்டும் தான் ஏற்படுகிறது .

சஹாபாக்களின்  நீதமான  ஆட்சியை பார்த்து உலக மக்கள் மெய்சிலிர்ந்து போகிறார்கள்..

சம்பவம்:
"
ஹஜ்ரத் அபு பக்கர் (ரலி )" அவர்களின் ஆட்சி காலத்தில் ஆறு மாதகாலம் கடும்  பஞ்சம் ஏற்ப்பட்டது அப்போது பைத்துல்மாலில்  இருந்து  மக்களுக்கு  உதவலாம்  என்று ஆலோசனை செய்யப்பட போது யாரிலிரிந்து  ஆரம்பிக்கலாம் என்று சலசலப்பு ஏற்ப்பட்டதுஹஜ்ரத் உமர் ரலி "அவர்கள் முஹாஜிரீன் கலிளிரிந்து ஆரம்பிக்கலாம் என்றுசொல்ல "ஹஜ்ரத் அபு பக்கர்ரலி )"அவர்கள் குறிக்கிட்டு இது சுக பெரச்ச்சனையல்ல  பஞ்ச  பெரச்சனை இதில் முஹாஜிரீன்கள்  என்றோ அன்சாரிகள் என்றோ பாகுபாடெல்லாம்  வேண்டாம் யார் மிக தேவை  உடையவர்கள் என்று பார்த்து  அவர்களிலிரிந்து என்று முடிவெடுத்து ஒரு யூதரிளிரிந்து ஆரம்பித்து பஞ்சத்தை நீக்கினார்கள் என்பது வரலாறு ...
இன்று முஸ்லிம்களின் சொத்தை சூறையாடி பங்கு போட்டுகொல்கிரார்கள்  உரியவர் கேட்டால் அவர் மீது ஏதாவது ஒரு பலியை போட்டு சிறையில் போடுகிறார்கள் ...
சில ஆண்டுகளுக்கு முன்  ஒரிசாவிலே கடும் பஞ்சம் ஏற்பட்டு மாங்கொட்டையை சாப்பிட்டு 20 நபர்கள் இறந்ததை நாம் அறிவோம் அந்த நேரத்தில் அரசியல்வாதிகள் சொகுசு அறைகளில்  சுகமாக இருந்ததை நாம்  மறந்து விட்டோமா?

(
இஸ்லாமிய ஆட்சியில் தான்  மக்கள் நீதத்தோடு  ஆட்சி செய்யபட்டிருக்கிரார்கள் ,நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள் )

சம்பவம் :"
ஹஜ்ரத் உமர் (ரலி)"அவர்கள் ஜெருசலத்திற்குள் நுழையும் போது அடிமை ஒட்டகத்திற்கு  மேல் அமர்ந்திருக்க ஹஜ்ரத் உமர் ஒட்டகத்தை பிடித்து நட்ந்து சென்றார்கள்  மதினாவிளிரிந்து  ஜெருசலம் செல்ல 7நாட்கள் ஆகும்  இடையில் ஹஜ்ரத் உமர் தங்குவதற்காக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை ......
         
"
இது உலகம் போற்றும் ஹஜ்ரத் உமரின் நீதமான ஆட்சி முறை"

எப்படி முஸ்லிம்களால்  மட்டும் நீதமாகவும் ,நிம்மதியாகவும் மக்களை  ஆழ முடிந்தது  என்றால் அல்லாஹ்வின்  கட்டளையும்  பெருமானாரின்  செயல்முரியும் தான் காரணம்.

சம்பவம் :
ஒரு உயர் குலத்தை சார்ந்த பாத்திமா என்ற பெண்மணி  திருடிவிட்டார்   பெருமானார்  கையை  வெட்டும்  படி  உத்தரவிட்டார்கள் தீர்ப்பை  குறைத்து கொள்ளும் படி அந்த மக்கள் கேட்ட போது!

(உங்களுக்கு முன் தோன்றியவர்கள் அழிந்தது ஏன் தெரியுமாஅவர்களில் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள்ஏழை திருடினால் தண்டிப்பார்கள்
இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன்என் மகள் பாத்திமா திருடினாலும் அவர் கரத்தை துண்டிப்பேன்!) என்று  பெருமானார் கோபத்தோடு  சொன்னார்கள் .
"
இது நம் ஈருலக  நாயகர்  பெருமானார்ஸல் )அவர்களின்  வாழ்க்கை "

(ரப்புல் ஆலமீன் ) சொல்லும் வசனத்தை  கவனியுங்கள்      إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
16:90நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக,
  இது  போன்ற ஏராளமான வசனங்கள் குர்ஆணிலே இருக்கிறது.இன்னோரிடத்தில்
5:32   مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ 
5:32இதன் காரணமாகவே, நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.
இது போன்ற ஒரு வசனத்தை எந்த வேதத்திலாவது  காட்ட முடியுமா?இது போன்ற வசனங்களும் பெருமாரின் வாழ்கையும் தான் முஸ்லிம்கலை நீதமாக ஆட்சி செய்யவைத்தது..முஸ்லிம்களின் நீதமான ஆட்சியினால் உலகம் அமைதியாக இருந்தது மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்..

இப்போது அநீதம் ஒழிய, மக்கள் நிம்மதியாக வாழ நீதியை நோக்கி நம் பயணம் தொடர!!!!!   நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு முஸ்லிமும் உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும்..
கருவறை முதல் மன்னரை வரை..விளித்ததிளிரிந்து  உறங்கும் வரை..உண்மை முஸ்லிமாக வாழ வேண்டும்

உலகிலுள்ள எல்லா தேவைகளுக்கும் நாம் முயற்சி செய்கிறோம்...
பட்டங்களையும், பதவிகளையும் பெற முயற்சி செய்கிறோம், ஆட்சியாளராகவும்,அதிகாரிகளாகவும் முயற்சி செய்கிறோம், பேரும்,புகழும் கிடைக்க முயற்சி செய்கிறோம்,   செல்வந்தர்களாக  முயற்சி செய்கிறோம்.....
இப்படி பலவற்றுக்கு  முயற்சி செய்கிற நாம் ஏன்?உண்மை முஸ்லிமாக வாழ முயற்சி செய்ய கூடாது...

 
அப்படி நாம் முயற்சி செய்தால்!!! கண்டிப்பாக  நீதி நிலை நாட்டப்படும்......
ரப்புல் ஆலமீன் ஆட்சியாகர்களை மாற்றி காட்டுவான்....

இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு நெருப்பு குண்டத்தை குளிர்ந்த பூங்காவாக  மாற்ற வில்லையா? 
மூஸா  (அலை) அவர்களுக்கும்,  அவர்களின் சமூகத்திற்கும்   செங்கடலில் பாதையை அமைத்து கொடுத்து!!! அதே செங்கடலில் பிர்அவ்னையும், அவனின் படையினரையும் மூல்கடிக்க  வில்லையா?
ஆப்ரஹாவின் யானை படையை அபாபில் பறவையை வைத்து சாகடிக்க வில்லையா?
எல்லா வற்றுக்கும் மேலாக நமது பெருமானார் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களை எந்த மக்காவை விட்டு துரத்தினார்களோ 8வருடத்தில் அதே மக்காவின் அதிபராக ஆக்க வில்லையா?
எந்த மண்ணில் துன்பத்தை சகித்தார்களோ அதேமண்ணின்  நீதமான ஆட்சியாளர்களாக ஆக்கவில்லையா?
இதுவெல்லாம் எப்படி அல்லாஹ் விற்கு சாத்தியமோ!!! அதே போன்று இந்த அநீத காரர்களை அளித்து நீதிவான்களை ஆட்சியில் அமர்த்துவது அல்லாஹ் விற்கு சாத்தியமே!!!
ஆனால் நாம் உண்மை முஸ்லிம்களாக நம்மை மாற்றி கொள்ள வேண்டும்......
அல்லாஹ்  அருள் பாலிப்பானாக..... (ஆமீன்)

Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!