புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் ஷேக்_ஷுரைம் தனது குத்பா பேருரையில் இருந்து சிதறிய முத்துக்கள்...

இறுதி நாளின் பெரிய அடையாளங்களில் கொஞ்சம் தான் எஞ்சியியுள்ளது.

எனவே துரிதமாக தௌபா செய்து கொள்ளுங்கள்.

ஓட்டைப்_பைகளில் தாங்கள் நன்மைகளை நிரப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள்!

அழகாக வுழு செய்கிறோம்,ஆனால்! தண்ணீரை வீண் விரயம் செய்கிறோம்.

ஏழைகளுக்கு உதவி செய்கிறோம்,ஆனால்! அந்த செயலை படம் எடுத்து எல்லா தளங்களிலும் பரப்பி ஏழைகளை மனதை கஷ்டப்படுத்துகிறோம். 

இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று ரப்பை வழிப்படுகிறோம்.ஆனால்! குடும்ப உறவை துண்டித்து வாழ்கிறோம்

நோன்பு நோற்று பசி தாகத்தில் பொறுமையோடு இருக்கின்றோம்,ஆனால்!பிறரை ஏசி, திட்டி சபிக்கிறோம். 


பெண்கள் ஆடையை மறைத்து அபாயாக்களால் போர்த்துகிறார்கள். ஆனால்!அதையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது. 

விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கிறோம், ஆனால்!அவர்கள் சென்ற பின் அவர்களைப் பற்றி குறை கூறி புறம் பேசுகிறீர்கள்.

 

இறுதியாக சொல்கிறேன் ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்ப வேண்டாம்.ஏனெனில், சிரமப்பட்டு அவைகளை சேகரிக்க,மறுபுறத்தால் இலேசாக விழுந்து விடும்.



Comments